மண்ணில் காவியம் எழுதும் அலைகளும்

மண்ணில் காவியம் எழுதும் அலைகளும்

நம் காதலை சொல்லும்  இரு  கரைகளும்

மலர் விரிந்திடும் உன் முகத்தினில்

மழை பொழிந்திடும் உன் கண்களும்

மார்பில் நீ வந்து  சாயவே

மாறன்  அம்புகள் வந்திங்கு பாய்ந்திடும்.

மண்ணில் காவியம் எழுதும் அலைகளும்

நம் காதலை சொல்லும்  இரு  கரைகளும்.

 

பால் குடம் நிரம்புமோர் அழகு நீ

உன் உதட்டின் ஓரம் நான் நெருங்கவா?

உன் மேனியில் கவிதை எழுதிட

என்  விரலை நான் கொஞ்சம் நீட்டவா?

நெருங்கவா? நீட்டவா?

 

உன் விரல்கள் வந்தென்னை தீண்டவே

என் இதையம் துடிப்பதை  கேட்க்கவா?

அருகில் வந்து நான் நாணத்தில்

உன் மடியில் கொஞ்சம்  சாயவா?

கேட்க்கவா?  சாயவா?

 

இனியும்  வாழ்க்கை நீளுமா

இனியொரு ஜென்மம் தேடுமா

நீளுமா? தேடுமா?

 

மண்ணில் காவியம் எழுதும் அலைகளும்

நம் காதலை சொல்லும்  இரு  கரைகளும்.

 

விடரும் உயிருக்கு மொழியாவாய் 

என் உயிரில் கலந்து நீ உயிராவாய்

இடையில்  காற்றுக்கு இடமில்லாமல்

இருவரும் ஒன்றாய்  கலப்போமா?

காலை சூரியன்  வரும் வரை

காதல்  நதியில்  மிதப்போமா?

கலப்போமா? மிதப்போமா?

 

பகல் மூடி  இங்கு மறைந்தாலும்

இரவுக்கிணைகளை புரிந்திடும்

காலம் நேரம்  வரும்வரை

காத்து  நாமும்  இருப்போமா?

அந்த நாளும் இங்கு வந்தபின்

நாம் இன்ப லோகத்தில்  பறப்போமா?

இருப்போமா?  பறப்போமா?

 

அதுவரை பருவம்  தாங்குமோ?

கார்மேகம் வானில்  சுழலுமோ?

மழைதான் வருமென வாய்ப்பினை

நாமதில்தான்  வருமென காண்போமோ?

 

மழை வர என் கார்குழல் உனக்கு

குடையாய் இருந்தால்  போருமா?

மண்ணில் நனையாமல் உன்னை ஒளித்திட

இந்த  இமைவிழிகள்தான் போருமா?

 

புதுமை ஒன்றொன்றாய் நாம் அறியவே

புனர்ஜென்மங்கள் பல வேணுமா?

அதுவரை  காதல் போதுமா

அதுவே நம் தாகம் தீர்க்குமா

போதுமா?  தீர்க்குமா ?

 

மண்ணில் காவியம் எழுதும் அலைகளும்

நம் காதலை சொல்லும்  இரு  கரைகளும்

மலர் விரிந்திடும் உன் முகத்தினில்

மழை பொழிந்திடும் உன் கண்களும்

மார்பில் நீ வந்து  சாயவே

மாறன்  அம்புகள் வந்திங்கு பாய்ந்திடும்.

 

மண்ணில் காவியம் எழுதும் அலைகளும்

நம் காதலை சொல்லும்  இரு  கரைகளும்.

 

சுந்தரேச்வரன்                                  By  Sundareswaran  Date: 27th  July  2015

Courtesy:  Lyric:  “Thirayezhuthum  maNNil  oru  kaavyam”

Lyricist:  R Ramesan Nair

 

Dear Sir, You gave a cue in the first line and other few words in between and this gave me the inspiration to write in Tamil with few more lines of my imagination. This came out as a fresh brew to taste. Thanks for the inspiration. Lord Ganesa gave me the words.

முன்னுரையும் அவர் தந்தார்

முடுவுரையும் அவர் தந்தார்

நடுவில் தடயங்கள் வந்ததும்

தடையை நீக்கி அருள் தந்தார்

For the following two extraordinary brilliant lines in Malayalam, I bow before you Sir. These are the Tamil words.

விடரும் உயிருக்கு மொழியாவாய் 

என் உயிரில் கலந்து நீ உயிராவாய்

 And

பகல் மூடி  இங்கு மறைந்தாலும்

இரவுக்கிணைகளை புரிந்திடும்

 

This song translated in Tamil was created with a mind bend after listening to Kavi Arasu  Vairamuthu Sir’s song “ Nadiyil  aadum  poovanam”.

Thanking you once again.

 

This way also the human thinking can flow:

 

இரவு பகலினை தேடுதோ

தினம் தினமிது தொடருமோ

எது எதைத்தான் காணுமோ

முதலில், எது எதுதான் நடக்குமோ?

 

இரவு பகலினை பார்த்ததும்

அதற்க்கும் வருமிந்த காதலோ

தொடு  வானத்தில்  தோன்றும் எல்லையில்

அவைகள் செய்வது  கூடலோ

 

பறவைகள் பறந்தவைக்கு என்றும்

சாமரம்தான் வீசுதோ 

குயில்களெல்லாம் ஒன்றுசேர்ந்து

கீதங்கள்தான் இசைக்குதோ

காலை சூரியன் தினமும் வந்து

துயிலெழுப்பி செல்லுதோ

இரவில் வானொளி  விரிந்து தேய்ந்து

கூடல்  ஊடல் செய்யுதோ

 

எண்ணில்  அடங்கா ஆசைகள்

அவைகளும்  அங்கு  பரிமாறுமோ

மழைக்குமுன் தோகை விரித்திடும்

மயிலினங்கள்  போலவே

அவையும் தன மன எண்ணங்களை

வளைத்துக்காட்டுமோ

வண்ண வானவில்லினை போலவே

 

இரவு  பகலினை  நேசிக்கும்

ஒன்றோடொன்றாய் யோஜிக்கும்

இயற்க்கை அழகது  காமிக்கும்

பிரிக்கமுடியாததை யாவர்க்கும்                      சுந்தரேச்வரன்

Leave a comment