நம்பிக்கை

ஓடம் ஒன்றில் மிதந்து நானும்

கடலில் எங்கோ ஒழுகி செல்ல

அதில் துலைந்து , பயந்து நடுங்கி

நம்பிக்கை அற்று,

கரை காண முயலும் நிலையில்

கானா ஒன்று கண்டேன்.

 

எந்நேரம் நான் இங்கு வந்தேன்?

என்ன நோக்கோடு நான் இங்கு வந்தேன்?

எந்த மார்கம்  நான் முன்னேறி செல்ல?

 

என் மனம் இதன் முன்னிருந்த

கரையைப் போய்   பின்  நோக்கி 

சேரென்று  சொல்ல

என் இயலுணர்வுகள் 

என்னை விட்டு

மறைந்தோடியது .

 

கடலில் சுற்றி சுற்றி திரிய

இங்கும் அங்கும் நோக்க

எல்லா இடமும் தேட,

வழி அறியா இயலாமல் நானும்

காற்றடிக்கும் பொழுதெல்லாம்

ஒழுகி ஒழுகி செல்ல,

நாள் போக நாள் போக

உதவி அற்ற நிலையை  உணர்ந்தேன்.

 

முடிவின்றி   இதுவும்

தொடர்ந்துதான்  செல்லுமா?

இந்த கடலும்தான்

நம்பிக்கை அற்றதோர் இடமாகுமா ?

 

குறிக்கோள் இதில் ஒன்று நிச்சயம் உள்ளது

ஒரு புது பாதை தனில்  போக  அதுவும் தூண்டுது

அதுதான் எங்கோ?

 

கொஞ்ச நேரம் மௌனமாய்

கொஞ்ச நேரம் சிந்தனையில்  நான் ஆழம் செல்ல

எங்கிருந்தோ

மேல்நோக்கிப்பார்என்று ஒரு குரல்

மடை திறந்து வந்ததுபோல் கேட்டது.

 

என் நெற்றிமேல் கை வைத்து  வானத்தை பார்க்க

வெள்ளி மேகங்கள் ஓரத்தில்

வெண் புறணி தென்பட

அதன் வழியாய்  வெள்ளை நிற

பறவை ஒன்று பறந்து செல்ல

என்  மனதில்  மீண்டும் ஓர்

நம்பிக்கையின் அறிகுறி  கண் விழித்தது.

 

பயணத்தை தொடர்வாய்  என்று

என் மனம் குரல் எழுப்ப

என்னை பின் தொடர்வாய்

நான் உன்னை கரை சேர்ப்பேன்

என்று பறவையும் தன்  குரலில் சொன்னது.

 

அது மிக வேகமாய்   செல்ல

அதற்க்கு ஈடு எனக்கு இல்லாமல்

 நானும் பின் தங்கி போக

அதுவும் மாய்ந்து மறைந்து

எங்கோ போனது

 

இன்னும்  முழுதும் துலையவில்லை

மனது எனதும் சோர்ந்து போகவில்லை

நான் அறிந்த பாதை

அதில் உண்மையோடு பயணம் செய்தால்

கரை சேர முடியும் என்ற ஆர்வம் வந்தது .

 

 

 Courtesy:  Poem   ‘The Sign’ by Jeff Bresee

 

‘I wake to find a scene unkind, on vessel I do stand

Adrift at sea, lost, scared and cold, in desperate need of land’

 

Inputs from Blog   ‘Family friend poems’

 

 

Source: https://www.familyfriendpoems.com/poem/the-sign

 

 

Translation to Tamil by Sundareswaran   Date: 16th April 2019.

 

 

      

Leave a comment