சிறப்பின்  ஊர்வலம்தான் 

பகலும்அதன்  

விழி சாய்த்தது   

இரவும்,   அதன் 

கண் விழித்தது

வெகு நேரம் ஆச்சு

மனை செல்ல என்னை , மனதும் தூண்டுது.

 

வசப்படுத்தும் உன்

மனம் கவரும் பேச்சால்

என் மனம் மயங்குமோ என்று

என் மனதுக்கும் தோன்றுது

 

பகலும் பகல்போலத்தான்

இரவும் அதுபோலத்தான்

தொடரும் அனுதினமும் தான்

நம்மிடையில் வரும் போகும்தான்

 

அதனுடன் நீயும்

ஒன்று சேர்ந்துவிட்டால்

விரிந்திடும் இங்கும்

பல வண்ணங்களும்தான் .

 

நாம் இருவரும்அதனோடு

சேரும்  இந்த  நள்ளிரவும் ,

போதை கொண்டு விட்டால்

இந்த அறையில் நாமும் காண்போம்

எண்ணிலா, இன்ப கலவையும் தான் .

 

நான் செல்லும் பாதை எல்லாம்

நீ வரும் பாதை ஆனால்

இந்த இரவெல்லாம் தாண்டி நாமும்

காலை பொழுது  உணரும் வரையில்

சிறப்பின், சிகர நிலை ஊர்வலம்தான் .

 

Courtesy:  Lyric: ‘ Phir wohi hain din ye  Phir wohi hain shaamein

Lyricist: Priya Saraiya

 

Film: A Gentleman.

Translation to tamil  by Sundareswaran   Date:  26th April 2019.

 

 

Leave a comment