இதில் என்ன சாரம்

மண்ணுக்கு நீதி

ஈரேழு புவனமும்  தனது என்றறிந்தும்  தனக்காக ஒன்றில்லை  சர்வமும் தன்  ஜீவராசிக்கு என்றே கொடுத்தவன் இறைவன் .

இதைத்தான் அவனும்  தான் கண்ணனாய் வந்து தன்  வளர்த்தன்னை அவளுக்கு  தன்  வாய்  திறந்து தான் வெண்ணை மட்டுமல்ல மண்ணையும் விண்ணையும் தன்  வாயில் கொண்டவன் என்றதை ஒன்றும் அறியாதவன்போல் தொட்டிலில் படுத்தே  அதை .காட்டி மகிழ்ந்தான் .

தானே உனக்கென்று வந்தபின் என் அன்னையே அந்த மண்ணென்ன  பொன்னென்ன என்று தன்  தாய் அவளுக்கு  வாய் சொல்லாமல் சொல்லியே சொல்லி மகிழ்ந்தான்.

 

அன்று அது    “என்னால் உருவானதெல்லாம் என்னுள்ளில் உயிர்வாழும்”   என்றந்த அசரீரி வார்த்தையாய் புவி எங்கும் ஒலித்தது.

 

அன்று வாமனனாய்  பிறந்து பலி மன்னனிடம் வந்து தான் அமர்ந்து தவம் செய்ய மூன்றடி மண் அதை கேட்டான்மண்ணையும் விண்ணையும்    தன்  பாதம் இரெண்டால் அளந்தான். மூன்றாம் அடியாய்  அவன்  பா தம் அதனை   மன்னன் தன்  சிரம்தனில் சுமந்தன்.

 

அன்றதுமாமன்னன் ஆனாலும்  நீதிக்கு நேர்வழிஎன்றந்த அசரீரி வார்த்தையாய்  புவி எங்கும் ஒலித்தது.

 

உலகளந்த மன்னன் அவனே கண்ணனாய் வந்து தூதுவனாக மாறி பாண்டவருக்காய் ஒருபிடி மண்ணை கேட்க்க , துரியன் அவன் ஊசி முனை அளவிற்கு கூட கொடுக்க முடியாதென்றதும் கண்ணனே சற்று தடுமாறி நின்று விட்டான்.

பொறுத்திருந்து விடை கிடைக்காமல் இதன் முடிவின் விடை அந்த போர்க்களத்தில் என்று சொல்லி அவனும் மீண்டும் பாண்டவரிடம் சென்றான்.

 

குருக்ஷேத்திர போரில் ஆயுதம் ஏந்தாமல் பிறரை வைத்தே அவன் போராடினான். இலக்கே பெரிது இலக்கின் பாதை எதுவென்றாலும் அவனே சாட்ச்சியாய் அவன் கண்ட முடிவே அவனது நீதியாய் வந்தது.

 

அன்றது  கீதையின் சாரமாய்  “தர்மம் அதர்மத்தின் விதிப்படி நீதீ”என்றந்த அசரீரி  வார்த்தையாய் பூவிதனில் மீண்டும் ஒலித்தது.

 

மண்ணில் வாழும் அனைத்து ஜீவன்களும் மண்ணை நம்பித்தான் வாழ்கின்றது. மனிதன் மட்டுமே     ஆறறிவின் அகங்கார போதையில் தனக்கே மண் என்று தன்னையே அழித்து க்கொள்கிறான் .   ஒரு மண் துகள் கூட எடுத்துச்செல்ல இயலாமல் மண்ணோடு மண்ணாக மாய்கிறான் .

 

இதில் என்ன சாரம் என்றதை மனிதனிடம் கேட்க  மனிதனே ஏமாந்து  சொல்ல இயலாமல் நிற்கிறான்.

 

இன்றது  ‘ வினை விதைத்தவன் வினை கொய்வான்  வாள்  எடுத்தவன் வாளால் அழிவான் என்ற வார்த்தையாய் புவி எங்கும் எதிரொலிக்குது

 

By Sundareswaran    Date: 18th March 2019. 

Leave a comment