ஹா ஹா வாழ்வு

பழங்கால குடும்பங்கள் வாழ்க்கை

ஒருகாலம்  உறவுகள் கொண்டு

ஒற்றுமையாக ஒருமனதாக

கல கல கல வென்று

சேர்ந்து போனது.

 

இன்றோ அது

பணம் பணம் பணம் என்று

ஒன்றினை ஒன்று பாரா முகமாய் 

கொலைவெறி  கொள்ளும்

மனதினை க்கொண்டு

செரிந்து போனது

 

பொருளாசை இல்லாத

குளு  குளு  வாழ்வாய்

அன்றது தென்றல் காற்றாய்  வீசிட,

பொருள்மேல் அதி ஆசை வந்ததும்

படி படியாக வேற்றுமை என்றொரு

புயலாய் இன்றது தாக்குது.

 

இன்றெல்லாம்       வாழ்வெல்லாம் 

வாழ்வல்ல

வெறும் போராட்டம்,

 

சொத்துக்கும் சுகத்துக்கும்   

தேடி அலையும்

வெறும் பேயோட்டம்

 

தித்திப்பே இல்லாத

கசக்கும்   கானல்  நீரோட்டம்.

 

பழங்கால குடும்பங்கள் வாழ்க்கை

ஒருகாலம்  உறவுகள் கொண்டு

ஒற்றுமையாக ஒருமனதாக

கல கல கல வென்று

சேர்ந்து போனது.

 

இன்றோ அது

பணம் பணம் பணம் என்று

ஒன்றினை ஒன்று பாரா முகமாய் 

கொலைவெறி  கொள்ளும்  

மனதினை க்கொண்டு

செரிந்து போனது .

 

ஒரு அண்டை வீட்டான்  கார்மேல் 

விழி போடும்

நீயும் வாங்க சபலம் வரத்தான் கூடும்

 

நீ பார்க்கும் பார்வைகள் 

வான் பார்க்கும்

நெஞ்சுக்குள் திகைக்கின்ற கள்ளாகும்

 

அவன் வாங்கும் பொருளெல்லாம் 

நீ வாங்க

பொருளாதாரம் கைவிட்டு அகன்றே   போகும்

 

உன் பெண்ணாளும் 

உன் பக்கம்  வந்தாட,

உன் காதுக்குள்

அவளும்தான் கவிபாட,

 

நீயும்தான் அவள்கூட சேர்ந்தாட,

உன் மனதும்தான் 

திராசைப்போல் இடை போட

 

முன்னாலும்     

பின்னாலும்   

தள்ளாடும்,

 

மாத த்  தவணைக்கே

பணம் பற்றா       

திண்டாடும்

 

மொத்தத்தில்      எல்லாமே     வேண்டாத

துன்பங்கள்      உன் தொளில்      சாயும் சாயும்.

 

பொருளாசை இல்லாத

குளு  குளு  வாழ்வாய்

அன்றது தென்றல் காற்றாய்  வீசிட,

பொருள்மேல் அதி ஆசை வந்ததும்

படி படியாக வேற்றுமை என்றொரு

புயலாய் இன்றது தாக்குது .

 

காசு சேராதிருக்கும் வரை 

கை

சொறிய க்கூடும்

 

இனி செய்வதென்னென்ற 

எண்ணம்

மனதில் கணக்கைப்போடும்

 

நீங்காத போராட்டம்      உன்னை சார

நீ நெஞ்சுக்கு மாறாக        விலைதான் பேச

 

கடன் வாங்க  நிதியாளன் பக்கத்தில்

நீயும் போக

அவன் வலை க்குள்ளாற   மாட்டித்தான் 

நீயும் சாக

 

சிந்தாமல் உன் நீரை

அவன் சூழ 

நீயும்தான் அவனோடு மன்றாட

 

கூடித்தான்    வாழ்ந்தாலே    நன்மை என்று

அந்நேரம்    

அதன் ரீங்கார நாதங்கள்  நன்றாய் புரியும்   

 

 பழங்கால குடும்பங்கள் வாழ்க்கை

ஒருகாலம்  உறவுகள் கொண்டு

ஒற்றுமையாக ஒருமனதாக

கல கல கல வென்று

சேர்ந்து போனது.

 

இன்றோ அது

பணம் பணம் பணம் என்று

ஒன்றினை ஒன்று பாரா முகமாய் 

கொலைவெறி  கொள்ளும்  

மனதினை க்கொண்டு

செரிந்து போனது.

 

 

 By Sundareswaran  Date:  18th April 2019.  With due respect to Vaali Sir 

 

Courtesy:  Inputs tune from the song ‘ VaLai Osai kala kala kalavena

Lyricist: Vaali  Film: Sathya  Music IR.

 

Leave a comment