வாழ்வு

எலும்போடு  சதையோடு

இதயமும் நெருப்போடு சேரும்

சாம்பலை கிளறுவதால்

மிச்சம் எது  தேறும்.

 

அன்று நான் சேர்ந்து

வாழ்ந்து உன் இதயத்தை

சிரிக்க வைத்து மகிழ்ந்தேன்

இன்று அதுவும் இந்த

தனிமையில்  என்னை

சிரிக்க வைப்பதில்லை.

 

மரணம் வரும் ஒருநாள்

அது தவிர்க்க முடியாத ஒன்று

இருந்தும் இந்த இரவுகள் 

என்னை   தூங்க  தடுப்பதேன்   என்றும்.

 

மரணத்தை தினமும் நான்

ஆசையோடு எதிர்கொள்ள காத்திருக்கேன்

எனிலும்     நான் நினைக்கும் நேரம்

அது வந்து என்னை  

நினைப்பதில்லை தழுவ .

 

 

Translation to Tamil by Sundareswaran  Date: 6th Feb 2019.

 

Courtesy:   

 

‘Jalaa hai jism jahan

Dil bhi jal gaya hoga

Kuraydte ho ab raakh

Justujoo kya hai?’

 

‘Aage aati thi haal e Dil pe hasi’n

Ab kisi baat par nahi aati’

 

‘Maut ka ek din muayyin hai

Neend kyun raat bhar nahi aati?’

 

‘Marte hain arzoo me marne ki

Maut aati hai par nahi aati’..

 

By Mirza Ghalib

Leave a comment