சதுரங்கம்

காய்   ஒன்றை     நகற்றினான்  என் எதிரி

அடுத்ததாய் என் சுற்றை

அவனும் தான்  எதிர்பார்க்கிறான்.

 

காலம் காலமாய்

இந்த

கரு வெள்ளை கட்டமதில்

இரு வண்ண  காய்களை

உற்று நான் பார்க்கிறேன்.

 

இந்த கைப்பாவை போலிருக்கும்

பொருள்கள் தான் என்னவென்று

என் மனதில் நானும் யோசிக்கிறேன் .

 

வெறும்  மர பொம்மைகள்

என்று  நான் இதனையும் கருதிடவா ?

அவ்வண்ணம் நினைக்கையில்

இங்கே இதற்க்கு

ஜெயம் என்ன தோல்விதான் என்ன?

 

வென்றாலும்  மகிழ்ச்சியில்லை

இழந்தாலும் துயரமில்லை

இந்நிலையில்

எனில் இந்த விளையாட்டும் என்னதானோ ?

 

இதை நான் விளையாட

வேண்டும் என்ற எண்ணம் கொண்டால்

இப்பாவைகள்,

ராஜன் என்றும் மந்திரியென்றும்

நான் நினைக்க வேண்டுமாம்

 

இந்த கால்நடை போர் வீரர் யாவும்

முன் நிலையில் நிற்போராம்

எதிரியின் படைகள் எந்நேரமும்

நாசத்தை எண்ணுகின்ற

ஒரு கூட்டமாம் .

 

என்னையே நாசம்

செய்யத்தான் அவர் மனதில்

எப்பொழுதும் தோன்றும்

சதி எண்ணமாம் .

 

அப்படியெனில் இதை

ஓர் வெறும்

விளையாட்டாய்  நினைக்கலாமா?

 

இது ஒரு போர் இதில்

நிச்சயம் நான் இதில்

ஜெயித்தே ஆகவேண்டும் .

 

போரில் வரும் நீதி

விதி முறைகள் யாவும்

நியாயத்தின்  வட்டத்தில்

அடங்கியவைதான் .

 

விபரமாய் இதை யாரோ

எடுத்துரைக்க நினைக்கிறார்

இது ஓர் போர்தான்

என்றாலும் ஓர் விளையாட்டென்று.

 

ஆம், இது ஓர் போர் தான்

இரு போராளிகளின் நடுவே

திகழும் ஓர் விளையாட்டு,

 

ஆம், இது ஓர் விளையாட்டு

இரு விளையாடுவோர் நடுவே

திகழும் ஓர் போராட்டம் .

 

இது ஓர் விளையாட்டென்றால்

படைவீரர் மட்டுமே சாயலாம் என்றும்

எப்பொழுதும் மன்னனை மட்டும் தான்

காப்பாற்ற வேண்டும் என்றும்

மந்திரிக்கு எவ்வழியும் செல்லலாம் என்றும்

என்னதான் இதர்க்கோர்  விதி முறையோ ?

 

குதிரை மட்டும் தாவி

இடம் வலமாய் செல்லுமாம்

இடையில் வந்து பாதிரியும்

குறுக்கு நேர்வழியாய்

அதி விரைவில்

அவனும் செல்லுவானாம்.

தேர் மட்டும் நேர்பாதை வழி நோக்கி

தனக்கிருக்கும் இடம் மட்டும்

முன்னே பின்னே கொஞ்சம் நீங்கிடுமாம் .

 

இந்த விளையாட்டில்

படையாளி மட்டும்

வெளி சென்று விட்டால்

திரும்ப இயலாத விதிகள் என்றால்

விதிகள் என்றால் அது என்னதிங்கே ?

இந்த விளையாட்டின் பெயர் தான் என்னதிங்கே ?

 

காலம் காலமாய் இக்கேள்விகள்

என் நெஞ்சினுள் போராட்டம் நடத்த

 

இதனிடையில் என் எதிரி

தன்  காயொன்றை நகற்ற

என் காயை நான் நகற்ற

பொறுமையுடன்

என் முன்னால்  காத்து

அவனும் நிற்க்கின்றான்.

Translation with few changes in words by Sundareswaran  Date: 9th October 2018.

Thanks for the inspiration.

 

Courtesy: Lyric Nazm :’Ye khel kya hai

                                        Mere mukhaalif ne chaal chal di hai

                                       Aur ab

                                       meri chaal ke intezaar mein hai’

 

Lyricist:  Javed Akhtar Ji    

   

Leave a comment