வசந்தத்தின் மேகங்கள்

வசந்தத்தின் மேகங்கள் பொழியட்டுமே

வசந்தமாம் மனதின்  எண்ணங்களை

 

வசந்தத்தில் மகிழும்  என் மனமும்

கண்ணன் வரவினை   அறிகின்றதே

 

திசை  எங்கும்  கேட்க்குதே  இடியின் சத்தம்

அழைப்பிதழ் விடுகிறதே

பட்டொளி வீசும்  மின்னலும்தான்

 

சிறு சிறு துளிபோல்  மழைநீர் பொழிந்திட

குளிர் தென்றல் வந்து  வீசிடவே

 

மீராவின்  கோமான் கிரிதரன்

வரும் இந்த நேரம்

மகிழ வைய்யுங்கள்  அவனை

மங்கள இசையுடன்தான்

 

வசந்தத்தின் மேகங்கள் பொழியட்டுமே

வசந்தமாம் மனதின்  எண்ணங்களை  

 

 

சுந்தரேச்வரன்

 

By Sundareswaran  Date: 22nd April 2017.

 

Meera Bhajan  “ Barse badariya  saawan ki  Saawan ki  man bhaavan ki” by  Lathaaji

 

बरसे बदरिया सावन की।
सावन की मन भावन की॥

सावन में उमंगयो मेरो मनवा।
झनक सुनी हरि आवन की॥

उमड़ घुमड़ चहुँ देस से आयो।
दामिनी धमके झर लावन की॥

नन्हे नन्हे बूंदन मेघा बरसे।
शीतल पवन सुहावन की॥

मीरा के प्रभु गिरिधर नगर।
आनंद मंगल गावन की॥

 

 

Please link with   https://www.youtube.com/watch?v=OTXzhGxvsoM  to listen this melody

Set to Raag  Shaam  Kalyaan  

   

நினைப்பாய்  மனதில் 

நினைப்பாய்  மனதில்  இறைவனைத்தான்

நிறைப்பாய்  அதில்  அவன் நினைவினைத்தான்

 

அவன்  நினைவில்  மகிழும்  உன் மனமும்

அவன் உன்னில்  இருப்பதாய் கண்டறியும்.

 

திசை எங்கும்  நிரம்பிய அவன் ரூபம்

சிறு குழந்தைபோல் நிற்க்கும்  அவன் ரூபம்

எங்கும் எதிலும்  அவன் ரூபம்

என்றதை அறிந்தால்  மனம் தேறும்.

 

நாம்  உண்ணும்  உணவும்  அவனால்த்தான்

நாம்  வாழும்  வாழ்வும்  அவனால்த்தான்

நம் உயிர் இருப்பதும்  அவனால்த்தான்

நம் உயிர் போய் சேருவதும் அவ்னில்த்தான்

 

இஜ்ஜென்மம் மனிதனாய்  பிறந்ததுவே

அவன் தந்த அருள் வரம் ஒன்றினால்த்தான்

இனி வரும்  ஜென்மங்கள்  ஒவ்வொன்றிலும்

அவன் அருள் பெறவே அவனை நினைப்பதில்த்தான்

 

அடியேனின்  கண்ணன்  காற்முகில்   வண்ணன்

கூடவே வருவான்  உயிர்த்தோழனாய்.

 

நினைப்பாய்  மனதில்  இறைவனைத்தான்

நிறைப்பாய்  அதில்  அவன் நினைவினைத்தான்

அவன்  நினைவில்  மகிழும்  உன் மனமும்

அவன் உன்னில்  இருப்பதாய் கண்டறியும்.

 

சுந்தரேச்வரன்    Date: 23rd April 2017     

என்ன என்ன

என்ன என்ன விசித்திரமான நிலைமையோ

பார்க்கையில்

அதில் என்ன என்ன விசித்திரமான எண்ணமோ

கால் ஒன்று என்னை ஒரு திசையில் இழுக்குது

மற்றொரு கால் மறு  திசைக்கும்  இழுக்குது

என்ன என்ன விசித்திரமான நிலைமையோ ?

அதில் என்ன என்ன விசித்திரமான எண்ணமோ ?

 

என் மரத்தின் ஒரு கிளையில்

பூக்கள் எல்லாம்  மலருது

மறு  கிளையில் பூக்களெல்லாம் கொழியுது

நேற்று  நாளை என்ற நிழலின் நடுவினிலே

இன்றென்ற நான் இங்கு தவிக்கிறேன்

கால் ஒன்று என்னை ஒரு திசையில் இழுக்குது

மற்றொரு கால் மறு  திசைக்கும்  இழுக்குது

என்ன என்ன விசித்திரமான நிலைமையோ ?

 

ஒரு தென்றல் பரவ எனது தோட்டம்

வசந்தம்  கண்டது

ஒரு சுடு காற்றடிக்க

அது  முழுதும்  துலைந்தது

ஒரு  கால்  சுவடு வைக்க

பாதை  இங்கே தெரிந்தது

மறு  கால் சுவடு வைக்க

பாதை எங்கோ  மறைந்தது

 

ஒரு தென்றல் பரவ எனது தோட்டம்

வசந்தம்  கண்டது

ஒரு சுடு காற்றடிக்க

அது  முழுதும்  துலைந்தது

ஒரு  கால்  சுவடு வைக்க

பாதை  இங்கே தெரிந்தது

மறு  கால் சுவடு வைக்க

பாதை எங்கோ  மறைந்தது

 

அன்பு கொள்ளும் 

இரு நெஞ்சங்களின் இடையில் நான்

பாசம் கடமை கொள்ளும் 

இரு நெஞ்சங்களின் இடையில்  நான்

எதற்க்கு   வெற்றி எதற்க்கு   தோல்வி

என்று  நானும்  மன்றாட

முடிவெடுக்க இயலாமல் தவிக்கிறேன்.

 

நேற்று  நாளை என்ற நிழலின் நடுவினிலே

இன்றென்ற நான் இங்கு தவிக்கிறேன்

கால் ஒன்று என்னை ஒரு திசையில் இழுக்குது

மற்றொரு கால் மறு  திசைக்கும்  இழுக்குது

என்ன என்ன விசித்திரமான நிலைமையோ ?

அதில் என்ன என்ன விசித்திரமான எண்ணமோ ?

 

சுந்தரேச்வரன்

By Sundareswaran  Date:  19th April 2017.

Courtesy:  Lyric:  “ DEkhiyE tho kyaa ajeeb  haal hai “

Lyricist:   Neeraj         Music:  Shanker Jaikishen    Singer:  Mannadey   Film:  Kal Aaj aur Kal

Thanks for the inspiration to translate in Tamil.

Please link with https://www.youtube.com/watch?v=h5u-XeP4jnw

The circumstances lead a father, who struggles in between the old customs and traditions of his father and the modern outlook of his son, to run away from home leaving a letter. As he loves both, he finds it difficult to convince his father but at the same time could not leave his son as well. Everyone search for him and finally he was found and everyone understands one another and life goes on. When a child is born to his son, he becomes a grandpa. The great grandfather dies. The life moves in a new way.

புது மொட்டுகள்

புது மொட்டுகள் நாளையும் விரிந்துவரும்

சிரிப்புடன் நறுமணம் கமழும் மலர்களாகும்

புது மண்ணில் பொலிவுடன் புது  புல்  முளைக்கும்

புது பாதங்கள் அதன்மேல் நடந்து செல்லும் .

 

அவை என் அமைதியை குலைக்க வரவில்லையே

நான் யார் அவைதனின் அமைதியை கெடுப்பதற்க்கு

அவையுடன் சேர்ந்து  என் பொழுதுகளை

தினம் தினம் பங்கிடத்தான் என்ன கூடாதா ?”

 

 

நான் ஒரு சில நொடிமட்டும் வாழும்  கவிராயன்

என் கதையும் என்னை தொடரும் அதுவரைதான்

என் தனித்தன்மை என்பதும் அதுவரைதான்

என் இளமை ப்பருவமும்  அதுவரைதான்

 

கவி பலபேர்  என் முன்னமும் வாழ்ந்திருந்தார்

இதுபோல்  அவர்களும்  மறைந்திருப்பார்

கண்ணீருடன்  ஒரு சிலர் சென்றிருப்பார்

ஒரு சிலர் கவிதைகள் பாடி சென்றிருப்பார்.

 

அவையும்  நொடிக்குள்ளில் மறைந்திருக்கும்

அதுபோல்

நானும் ஒரு சில நொடிகளில் மறைபவன்  தான்

நாளை  நானும் உங்களை பிரியக்கூடும்

இன்று உங்களில் ஒருவன் என்றிருந்தும்

 

நிறையபேர்  நாளை இன்னும்  வருவார்

விரியும்  கவிதை மொட்டுகள் பறித்துக்கொண்டு

என்னைவிட நன்றாய்  பாடுவோரும்

அதை  இன்னும்  மிகையாய் கேட்க்க  நினைப்போரும்

 

வரும்  நாட்க்களில் என்னை  நினைப்போரும்

இங்கு இருப்பார் என்று  நான் நினைக்கின்றேன்

எதற்க்காக அவர் என்னை  நினைக்கணும்

எதற்க்காய்  ஓய்வில்லா உலகம் தன்

நேரத்தை  துலைக்கணும்

 

சுந்தரேச்வரன்  Date: 15th April 2017.

 

This is one of those songs that I listen to at some odd hours of the day. I like how this song goes beyond the happiness, the sadness and all other emotions. It talks more about the transience of those emotions, the temporariness of everything in life, the short span of life itself. That is the truth and that  our life. At the end of the day it is just a moment in the timeline of existence. We live, create a few memories, share a few stories, write some, read some, pass some on, we enjoy we get worried  and then we die. We may be remembered by the people we met for a generation or two and then we will all be forgotten. The way the world is shaping up, with busy stressful schedules, it is hard to spend a moment remembering those who are alive forget those who are gone forever. The beauty of the song is how the artist thinks of his own mortality and talks about the artist that will follow him. In the final paragraph he wonders if he will be remembered and questions why he should be remembered, and if he deserves the time that he hopes people will one day give him.

The conversation between Yaksha and Yudhishtira is pertinent in this context. When asked by the celestial form as to what the biggest surprise on earth is, Yudhishtira replies self-assuredly that it is the ability of human beings to go on with their lives as if nothing happened, despite the millions of lives that perish every day. Even as the body is carried to the pyre, the men who have assembled around, voice their concerns on more immediate issues. Death appears insignificant and quite a far-flung possibility that everyone but oneself needs to be bothered about.

Ezhuthum intha maNNil

ThuLirilaigaLil

Maayum  un  mugavariyai.

Viriyum athu maRaiyum

Antha vaan nilaa vaLarumpOl

Unathu uyir sellum varai.

Nadantha kaaladigaL  maainthuvidum

Thodarum antha aathmaavin payaNam

Aathiyil  paathiyil vantha njaapakangaL

Manathil Kaadaai  sezhithidum.

Manathai vittu maranthavai meendum

NizhalpOl unnai thodarnthidum.

 

MazhaithuLaigaL veezhnthu sithari

Eriyaai  nathiyaai MaaRi

Meendum mEgamaai  vaanil uyarvathupOl

Vaazhvil suga dhukkangaL anaithumE

Vaazhvin poruLaaga maaRi

SiraivaasampOl meendum thodarnthE varum.

Ithaiyellaam porutppaduthaamal vaazhvathe vaazhvu.

 

Courtesy:  Lyric: “ Mei pal do pal kaa shayar hoon”

Lyricist:  Sahir Ludhyanvi Ji     Singer:  Mukesh Da    Music:  Khayyaam Ji   Film:  Kabhi kabhi

 

मैं पल दो पल का शायर हूँ
पल दो पल मेरी कहानी है
पल दो पल मेरी हस्ती है
पल दो पल मेरी जवानी है
मैं पल दो पल का…

मुझसे पहले कितने शायर
आए और आकर चले गए
कुछ आहें भर कर लौट गए
कुछ नग़मे गाकर चले गए
वो भी एक पल का किस्सा थे
मैं भी एक पल का किस्सा हूँ
कल तुमसे जुदा हो जाऊँगा
वो आज तुम्हारा हिस्सा हूँ
मैं पल दो पल का…

कल और आएंगे नग़मों की
खिलती कलियाँ चुनने वाले
मुझसे बेहतर कहने वाले
तुमसे बेहतर सुनने वाले
कल कोई मुझको याद करे
क्यूँ कोई मुझको याद करे
मसरूफ़ ज़माना मेरे लिये
क्यूँ वक़्त अपना बरबाद करे
मैं पल दो पल का…

Thanks for the inspiration to translate in Tamil.

உனக்காக இந்த தாகம்

உனக்காக   இந்த தாகம்

உனக்காக  இந்த தாகம்

என் உள்ளில் ழுகின்ற வேகம்……

உனக்கென்றபின்  இந்த தேகம்

உனக்கென்றபின்  இந்த தேகம்

உன்னுடன், உயிரோடு உயிர்மூச்சாய் வேகும்……

 

இள  மாலை  நேரம்

குளிர் தென்றல்  வீச

ஏகாந்த வேளை

இவள் இங்கு  வாட

 

நீ ஓடிவந்தென்  உடல் தழுவ

நான் மாய்ந்துபோய் அதில்

என்னை  மறக்க

இணை பிரியா தொடரும் இன்பமே…………

சிருங்கார  சங்கீதமே …..

 

உனக்காக உனக்காக

இந்த தாகம்  இந்த தாகம்

என் உள்ளில் ழுகின்ற வேகம்……

உனக்கென்றபின்  இந்த தேகம்

உனக்கென்றபின்  இந்த தேகம்

உன்னுடன், உயிரோடு உயிர்மூச்சாய் வேகும்……

 

பருவங்கள் எல்லாம்  ஒன்றாகும்  வண்ணம்

உணர்வுகள் நெஞ்சில்  சுருதி  மீட்டுதே……

மௌனத்தில் வருகின்ற ஓசைகள் போல

இரவுகள் என்னுள்ளில்  தீ மூட்டுதே………..

 

நான் ஓடிவந்துன் உயிரோடு  கலக்க

நீ என்னை சுமந்து  என் தாகம் தீர்க்க

ரதி  நிர்வேதங்கள்  உணர …….

 

உன்னோடு  கலந்தாடவே

உல்லாச வதியாகவே…………….

பொழுதுகள்  நாம் மறக்க புது வகை சுகம் பிறக்க  

விடியும்  வரை  கலைகள் தொடர……

 

உனக்காக  இந்த தாகம்

என் உள்ளில் ழுகின்ற வேகம்……

உனக்கென்றபின்  இந்த தேகம்

உனக்கென்றபின்  இந்த தேகம்

உன்னுடன், உயிரோடு உயிர்மூச்சாய் வேகும்……

 

 

மதனன் வந்து   உடல் தழுவ

மலர்க்கணைகள்  அதில் ……வ

மனதுக்குள்  பொங்கியதே

மன்மதனின் லீலைகள்

 

வா வென்றழைக்கவே  மனதுக்குள்  ஏங்குகிறேன்  

வாய்  மூடி  மௌனமாய்

நான் உன் முன்னில்  நிற்க்கிறேன்

விருந்துகள்  நாமே  படைத்திடுவோமே

விதம் விதம் போல் அதை  சுவைத்திடுவோமே ….

மதனா …..  …..  மதனா ……

 

உனக்காக  இந்த தாகம்

என் உள்ளில் ழுகின்ற வேகம்……

உனக்கென்றபின்  இந்த தேகம்

உனக்கென்றபின்  இந்த தேகம்

உன்னுடன், உயிரோடு உயிர்மூச்சாய் வேகும்……

சுந்தரேச்வரன் Date: 14th April 2017.

 

Courtesy:  Lyric: “Nee kOsam  ee Daaham”

Film : Rathi Nirvedam (Telugu)  Dubbing of Malayalam remake of Rathi Nirvedam (2011)

Singer:  Shreya Ghoshaal

Even after three four repeated hearing I could not make out any words except the first two and the raag in which it is sung. I do not know Telugu either.

I concocted few words of mine and created a lyric in the same raag Hamsaanandi Or can it be Amrith varshini?.

Murugan Kaattaakkada had written a lyric in Malayalam  “KannOram  Chinkaaram” and Shreya had given her voice to it.

 

Thanks for the inspiration

 

Please link with https://www.youtube.com/watch?v=f1erFKbZxug to listen to the telugu song.

They could have choreographed this with a set of jet black and multi coloured Irish horses running inside a big size stable with a camp fire.  

 

புதிரான கதையல்லவோ

புதிரான கதையல்லவோ, இந்த

பிறவி இறப்பின் கதை

பாராத தாள்களில் கேளாத மொழிகளில்

பொருள் விளங்காத நிலைமையில்

புரியாதபோல்  எழுதிவைத்தது.

 

பிறப்பின் துவக்கம் தான் எங்கோ

பிறகதின்  முடிவுதான் எங்கோ

பிறந்த எனக்கும் அது தெரியவில்லை

பெற்ற தாய்க்கும் தான் எங்கென்று

புரியவில்லையே

 

புதையில் எரியும் நெருப்பும்தான்

புகையை அதிகம் சேர்க்குது

பிரிந்த உடலும் இங்கென்ன

பிடி கை சாம்பலாய் மாறுது

 

புனித வேத மந்திரங்களும்

பாடும் தெய்வ வசனங்களும்

பிரிந்த உடலைத்தான் மீண்டும்

பரமன் பாதம் சேர்க்குதோ

 

புரியும் விடை போலது 

புரியாமல் என்றும் நிர்க்குது

புதிரை புரிந்து கொள்ளவே மனதில்

புனிதம் மட்டும் ஏனோ வளராமல் போனது

 

பரமன் கொடுத்ததெல்லாம்

பராமனுக்குள் போய் சேரும்

பராமனுக்கே அறியும் ஓர்

பரிபூரண தத்துவமிது

 

புதிரான கதையல்லவோ, இந்த

பிறவி இறப்பின் கதை

பாராத தாள்களில் கேளாத மொழிகளில்

பொருள் விளங்காத நிலைமையில்

புரியாதபோல்  எழுதிவைத்தது

 

சுந்தரேச்வரன்         By Sundareswaran  Date: 23rd Nov 2016.

 

While singing the old Hindi song ‘Ajeeb daasthaan hai,   Kahaan shuru kahaan kadam’ something flashed in my old brain about the myriad complexities of life and death and the role of the Almighty and thus happened this song.

Is it not true that we do not know absolutely anything about this? 

வானம் நீல வானம்

ஆண்கள் பெண்கள் கூட்டம்:

 ஆண்கள்:

 ஓஹ்!   ஆசையில்   கூவிடும்  பெண்ணே

உன்  காதலன்  வருகின்ற  நேரம்  இதோ

பெண்கள்:

 யாரவன்  யாரவன்  சொல்லாய்

யாரதில்  அழகு  என்பாய்

அது  நீயா   இல்லை  அவனா?

ஊஊ ………

 

வானம்   நீல வானம்  அதில் எங்கும்

வண்ணங்கள்  மாறி மாறி  பூச் சூட

பார்க்க   அதை பார்க்க  அதன் அழகில்

மனதினில்  போடுதே மேளதாளம்

ஆண்கள்:

ஹூ…..

குயிலே நீ ….    ஒன்று கூவாயோ

மயிலே நீ ….    இறகை விரிப்பாயோ

ஹூ………………………………………….

 

பெண் :

குயிலே ஓஹ்  குயிலே  வந்ததிங்கே இள  மாலை

இரவெல்லாம் வந்தும் இங்கு தூக்கம் இல்லையே

நீ பாடும் குழல் ஓசையில் 

மனம் அதனின் சிறகை விரிக்க

கனவுலகில் பறந்து சென்றதே.

கூட்டம் :

விழி விரித்து …..….   என்னை பார்ப்பாயா     

மனதில்த்தான் ….….  நீயும் நினைப்பாயா 

பறக்கவிடு…..…    என்னை தடையாதே

தடையாதே ….…..   என்னை தடையாதே

ஹோ…………………………….

 

பெண்கள் கூட்டம்:

வருபவன்  உன் துணை அவன்    வராமல் போனால்

தனிமையில்   மனம் உனது   தவிக்காதோ   சொல் ….

 

பெண் :

கண்ணோடு   கண் சொல்ல  விழி மூடத்தான்

அவன்   இல்லாமல்  வருமோ  தூக்கமும்  தான்

என் மனதும் தான் ஏனோ   உணர்வற்றதோ

ஹோ

என் ஆசைகள்க் கேனோ  இந்த போதை

உணர்வு வந்ததோ

 

கூட்டம்:

நிலா இல்லா   பூமிக்கு   ஒளியில்லையே

நிலாதானே    வானுக்கு  அழகூட்டுது

பட்டு ச்சேலைபோல்  மேகங்கள்   அதை மூடுது

கதிரவன்   ஒளிபட்டு அதன் மீது

வண்ணம் பூசுது

 

பெண்:

நிலா  வானம் எங்கும்  உலா போகுமே

மேகங்கள்  வானை மெல்ல  தழுவி செல்லுமே

நான் பார்க்கின்ற  இடமெல்லாம்  வெறிச்சோடுது

ஹோ

நீ வருவாய்   என்றே  நான்    எதிர்பார்க்கிறேன்

நீ வந்து சேரையில்த்தான் என்    மனம் நிறையுமே

 

ஹோ…………………………..

கூட்டம்:

ஓஹ்!   ஆசையில்   கூவிடும்  பெண்ணே

உன்  காதலன்  வருகின்ற  நேரம்  இதோ

யாரவன்  யாரவன்  சொல்லாய்

யாரதில்  அழகு  என்பாய்

அது  நீயா   இல்லை  அவனா?

ஊஊ ………

வானம்   நீல வானம்  அதில் எங்கும்

வண்ணங்கள்  மாறி மாறி  பூச் சூட

பார்க்க   அதை பார்க்க  அதன் அழகில்

மனதினில்  போடுதே மேளதாளம்

ஹூ…..

குயிலே நீ ….    ஒன்று கூவாயோ

மயிலே நீ ….    இறகை விரிப்பாயோ

ஹூ………………………………………….

 

பெண் :

குயிலே ஓஹ்  குயிலே  வந்ததிங்கே இள  மாலை

இரவெல்லாம் வந்தும் இங்கு தூக்கம் இல்லையே

நீ பாடும் குழல் ஓசையில் 

மனம் அதனின் சிறகை விரிக்க

கனவுலகில் பறந்து சென்றதே..

கூட்டம் :

விழி விரித்து …..….   என்னை பார்ப்பாயா     

மனதில்த்தான் ….….  நீயும் நினைப்பாயா   

பறக்கவிடு…..…    என்னை தடையாதே

தடையாதே ….…..   என்னை தடையாதே

ஹோ…………………………….

  

சுந்தரேச்வரன்  Date:  2nd April 2017.

 

Courtesy:  Malayalam song and Hindi Song

Thanks for the inspiration. Here I have inclined more towards the Hindi song.

 

 

Please link with https://www.youtube.com/watch?v=BTP4-x9I7iQ

And https://www.youtube.com/watch?v=TY4lL68vqio   Of Vani Jayaram and KJYesudas

 

Please link with https://www.youtube.com/watch?v=ZeRWbp6jUkw to listen to Ashaji’s unreleased song  with Music by Salil Da

“ Moyna ji Moyna  oh aayi re  reina  ki naina nahi chain na”   

கண்மை …கண்மை ….

 

கண்மைகண்மை ….

காதல்கொள்ளும்  கண்களின்

இமையோரம் தேய்த்துக்கொள்ளும்

கறுப்பு நிற  கண்மை  கண்மை

 

இனிமை  இனிமை

இனிமையுடன் காதலனை தன்  விழிக்குள்

பார்க்கவைக்கும்  திறமை

இதன் தன்மை  

 

கண்மைகண்மை ….

காதல்கொள்ளும்  கண்களின்

இமையோரம் தேய்த்துக்கொள்ளும்

கறுப்பு நிற  கண்மை  கண்மை

 

கன்னி இவள் திருமணத்தில்

இவள் கண்களுக்கு  அழகூட்டும்

காளை   அவன் பார்க்கையிலே

அவன் மனதில் அன்பூட்டும்.

 

என் கண் இவள் அழகுக்கு

கண் படாமல் இருப்பதற்க்கு

கன்னத்தில்  நானும் தான்

இந்த கண்மையால் தொட்டு வைத்தேன்   

 

கண்மைகண்மை ….

காதல்கொள்ளும்  கண்களின்

இமையோரம் தேய்த்துக்கொள்ளும்

கறுப்பு நிற  கண்மை  கண்மை.

 

அவள் நிறமோ…….

நிறமது காலை  நேர

மஞ்சள் வெயிலின் பொன் நிறமே.

கைகளில் வரைந்துள்ள

மருதாணிக் கோலங்கள்

அழகு கொஞ்சும்

அந்தி வான சிவப்பின் 

ஒளியூட்டும் நிறமே.

 

எங்கெல்லாம் பார்த்தாலும்

திருமண மேடை எல்லாம்

வான வில்லின் அழகூட்டும்

ஏழு வண்ண க்கோலமே.

 

அவனை      நீ  பார்க்க

உன் மனம்  என்ன சொல்லுமோ

அவன் விரல் பட்டதும்

உன்  நெஞ்சம் என்ன துடிக்குமோ

அழகான குமரன் அவன்

தேர் இறங்கி வரும் நேரம்

அலங்கார தேவதே

உன்னை  அவன் பார்க்கும் நேரம்

விழியோரம் தேய்த்த  கண்மை

உன் காதலின் செய்தி சொல்லும்.

 

கண்மைகண்மை ….

காதல்கொள்ளும்  கண்களின்

இமையோரம் தேய்த்துக்கொள்ளும்

கறுப்பு நிற  கண்மை  கண்மை.

 

மை  தேய்த்த விழியால்

விழி நிறைய  அவன் பார்க்க

மைக்கண்ணால்  நீயும்

ஓர  விழியால் பார்க்க

இருவரும் பார்த்துக்கொள்ள

இமை  மூடா நொடிகள் நகர

தனை  மறந்த  நிலை வருத்தும்

கண்மை  இந்த கண்மை

அதுவே இதன் தன்மை.

 

கண்மைகண்மை ….

காதல்கொள்ளும்  கண்களின்

இமையோரம் தேய்த்துக்கொள்ளும்

கறுப்பு நிற  கண்மை  கண்மை

இனிமை  இனிமை

இனிமையுடன் காதலனை தன்  விழிக்குள்

பார்க்கவைக்கும்  திறமை

இதன் தன்மை தன்மை.

  

 

சுந்தரேச்வரன்                  By Sundareswaran  Date:  19th March 2017.

 

Inspiration from Kaithapram Sir’s creation ‘SuRumaa SuRumaa”

Courtesy:  Lyric: “SuRumaa SuRumaa’  Singer: Sakthisri Gopalan

Film: Camel Safari      Music:  Deepaankuran    Set to raag  Brindavana Saaranga

Dear Kaithapram Sir, In fact I have picked few words from here and there from your lyric. This song is set for a group and everyone has few lines to sing.  Like an ‘Oppana’ in marriages.

Like teasing and praising the bride and the groom.

Please link with https://www.youtube.com/watch?v=n-iN7-ciMzE to listen to the original Malayalam song and tune.