பயணம்   (பறந்து அலையும் பறவைபோல்)

கரை விட்டு கரை தாவிக் குதித்தேன்

இடம் விட்டு இடம் தேடி அலைந்தேன்

இலக்கினை அடைவதற்க்காக

மனை விட்டு எந்நேரம் நான் அதை தொடர்ந்தேன்?

 

இலக்கே பயணம் தானா

பறப்பதுதானா இலக்கு

எங்கேனும் போய்  அதை முடித்திடவா

இல்லை, பறப்பதுதான் ஒரு குறிக்கோளா ?

 

பருவங்கள் பல நான் கண்டேன்

என் மனதுக்குள் அதைக்கண்டு வியந்தேன்

என் மனம் அதில் சில புதுமைகள்  காண

மன அமைதியின் நிலை அதில் கொண்டேன்

 

இது மனதில் தோன்றும் பைத்தியமா

இல்லை, எளிமை வாய்ந்த மகிழ்ச்சிகளா

பறவையைப்போல் பறக்கும் ஒரு நிலையா

இல்லை நான், மனம்போல் நடக்கும்

நாடோடிகளின்  தனி இனமா?

 

செயல் தூண்டுணர்ச்சியை  நினைத்துவிட்டால்

நான் அதில் முழுதுமாய் துலைந்திடுவேன்

என் கால் சுவடினை நிறுத்திட தவறியதால்

இந்நேரம் இங்கே வந்தடைந்தேன் .

 

இன்னும் கொஞ்சம் முன்னே சென்றிடவா

இல்லை, இங்கேயே  நானும் தங்கிடவா

இல்லை ஒரு புது பயணத்தை துவங்கிடவா

இதை என், மனதிடம் நானும் கேட்டிடவா?

 

செல்லும் இடம் எல்லாம் இடம் இருக்க

கொஞ்சம் அங்கேயெல்லாம் தங்கிவிட்டு நான் சென்றேன்

இலக்கே பயணம் தானா

பறப்பதுதானா இலக்கு

எங்கேனும் போய்  அதை முடித்திடவா

இல்லை, பறப்பதுதான் ஒரு குறிக்கோளா ?

 

கரை விட்டு கரை தாவிக் குதித்தேன்

இடம் விட்டு இடம் தேடி அலைந்தேன்

இலக்கினை அடைவதற்க்காக

மனை விட்டு எந்நேரம் நான் அதை தொடர்ந்தேன்?

 

Courtesy: Lyric:  ‘Saahil saahil jhoomaa Manzil manzil ghoomaa

                              Kab ka ghar se tha mein chalaa’

Lyricist: Vaibhav Modi & Papon                Album: The story Now

Translation to Tamil by Sundareswaran   Date:  13th April  2019.

Can it be set to raag  Amrit varshini?

 

Leave a comment