ஊசி நூல் காதல் வாழ்வு

பின்னல் யந்திர   ஓடக்கட்டையின்

கட்டர்   பட்டர்    இனிய  இசை போல்

ஒழுகுதே   நம்     வாழ்வும்

 

சட்டைமேல்  ஒட்டியிருந்து

பழகிப்போய் கயன்று  வந்த

பொத்தானை   தைப்போம்   நாமும் .

 

பின்னல் யந்திர   ஓடக்கட்டையின்

கட்டர்   பட்டர்    இனிய  இசை போல்

ஒழுகுதே   நம்     வாழ்வும்

 

சட்டைமேல்  ஒட்டியிருந்து

பழகிப்போய் கயன்று  வந்த

பொத்தானை   தைப்போம்   நாமும் .

 

 

விதி நம்மை கிழிந்த

கந்தல் போர்வை போல மாற்ற

அதை திருத்த நாமும்

இங்கே ஊசி நூலாய் மாற

 

ஊசி நூலு  ஊசி நூலு

ஹா ஹா ஊசி நூலு  ஊசி நூலு

அந்த ஊசி நிமிர்ந்து நிற்க்க

அதன் கண் வழியாய்

நூலும் நடனம் ஆட.

 

ஊசி நூலு  ஊசி நூலு

அந்த ஊசி நிமிர்ந்து நிற்க்க

அதன் கண் வழியாய்

நூலும் நடனம் ஆட.

 

விரயம்  செய்யும் நாள்  நமக்கு

எறிந்து தந்த துணியை நாமும்

 

கட்டர் பட்டர் கட்டர் பட்டர்

கட்டர் பட்டர் கட்டர் பட்டர்

 

விரயம்  செய்யும் நாள்  நமக்கு

எறிந்து தந்த துணியை நாமும்

தலை இணையாய் மாற்றி

அதில் நாம் இருவரும்

இரவு தூக்கத்தால் பொதிந்தோம்

 

கட்டர் பட்டர் கட்டர் பட்டர் கட்டர் பட்டர்

கட்டர் பட்டர் கட்டர் பட்டர் கட்டர் பட்டர்

 

எத்தனை கதவு நம் முன்னால்

மூடி யிருந்த பொழுதும்

அத்தனைக்கத்தனை சுறு சுறுப்பு

நமக்குள்ளே  வளர

 

திறமை பெற்று மெதுவாய்,

உலகத்தோர் வாயை ,

முழுதுமாய்

முடிச்சு   போட்டுவைத்தோம்……..

 

 

எதிர்பார்ப்புகள் நம்மில்

வானளவில்  இருக்க 

அதை, அளவை நாடாவால்

இந்த இரவுமுழுதும் நாம் அளப்போம்

எனிலும் இரவு ரொம்ப நீளம்

அதனை தவிர்க்க நாமும் இங்கே

மாறிடுவோம் ஊசி நூலைப்போல

 

ஊசி நூலாய் மாற  ஊசி நூலாய் மாற

அந்த ஊசி நிமிர்ந்து நின்று

அதன் கண் வழியாய் நூலும் நடனம் ஆட

 

ஊசி நூலு  ஊசி நூலு

ஹா ஹா ஊசி நூலு  ஊசி நூலு

அந்த ஊசி நிமிர்ந்து நிற்க்க

அதன் கண் வழியாய்

நூலும் நடனம் ஆட.

 

 

 

கசப்பான வார்த்தைகளை

நெஞ்சில் கொள்வதில்லை நான்

அது என்னை  தாக்கும் பொழுது

கைய்யய் கட்டி நிற்ப்பேன் நான்

 

கட்டர் பட்டர் கட்டர் பட்டர்

கட்டர் பட்டர் கட்டர் பட்டர்

கட்டர் பட்டர் கட்டர் பட்டர்

கட்டர் பட்டர் கட்டர் பட்டர்

 

அந்த நேரம்  பட்டுச்சேலை  நூல்சேலை

ஓரங்களை

பொறுமையுடன் தைப்பதுண்டு நான்

 

கட்டர் பட்டர்  கட்டர் பட்டர் கட்டர் பட்டர்

கட்டர் பட்டர் கட்டர் பட்டர் கட்டர் பட்டர் கட்டர் பட்டர்

 

 

என் உடலை உயிரை கொடுத்து

நான் இந்த யந்திரத்தை

மனிதனாக்கியுள்ளேன் ,

எங்கள் ஜேபும்  இங்கு காலியாக ஆக

ஊசி நூலை போல இங்கே

மாறுவோம் நாங்களும் ஜாலியாக 

 

ஊசி நூலாய் மாற ஊசி நூலாய் மாற

அந்த ஊசி நிமிர்ந்து நின்று

அதன் கண் வழியாய் நூலும் நடனம் ஆட.

 

நான் தேக்கி வைத்த கனவுகளை

மழை நீரில் நனைந்திடாமல் இருக்க

இந்த நீர் புகா கித்தான் துணியும்

எங்களை மழையிலிருந்து பாதுகாக்க

 

இந்த இயற்கை செய்யும் விளையாட்டை

கொஞ்சம் நிறுத்தி  வை என் இறைவா

 எங்களை வாழ விடு நீயும் நிறைவா 

கட்டர் பட்டர்  கட்டர் பட்டர்  கட்டர் பட்டர்  கட்டர் பட்டர் 

கட்டர் பட்டர்  கட்டர் பட்டர்  கட்டர் பட்டர்  கட்டர் பட்டர் 

 

 

பின்னல் யந்திர   ஓடக்கட்டையின்

கட்டர்   பட்டர்    இனிய  இசை போல்

ஒழுகுதே   நம்     வாழ்வும்

 

சட்டைமேல்  ஒட்டியிருந்து

பழகிப்போய் கயன்று  வந்த

பொத்தானை   தைப்போம்   நாமும்

 

விதி நம்மை கிழிந்த

கந்தல் போர்வை போல மாற்ற

அதை திருத்த நாமும்

இங்கே ஊசி நூலாய் மாற

 

ஊசி நூலு  ஊசி நூலு

ஹா ஹா ஊசி நூலு  ஊசி நூலு

அந்த ஊசி நிமிர்ந்து நிற்க்க

அதன் கண் வழியாய்

நூலும் நடனம் ஆட.

 

அந்த ஊசி நிமிர்ந்து நிற்க்க

அதன் கண் வழியாய்

நூலும் நடனம் ஆட.

 

 

Translation by Sundarswaran  Date: 27th September  2018.

 

 

Courtesy: Lyric: ‘ Khatar patar Zindagi Ne Raag Hai Sunaaya

Button khule kaaj se toh Bakswa lagaayaa’

Lyricist: Varun Grover  Singer: Papon

Film: Sui Dhaaga

 

Dear Varun Grover Ji            What an imagination? Kudos to you Sir. Thanks for the inspiration to translate in Tamil in more or less in the same tune. Dear Pepon, Mesmerizing voice. This is your second Dhaaga if I am correct, the first you gave us a lot of Moh moh ke dhaage and now sui Dhaaga  What next?  kache dhaage or Joothe pheethe?

 

When I translated this Hindi version into Tamil, my mind got flashed to an earlier film song

‘Nachathira jennalil vaanam etti paarkkuthu siragai virithu parappOm

Nam uravil ulagai alappOm’ penned by M Mehtha in 1997 for Sooryavamsam

 

 

 

Leave a comment