கண்கள் வழியாய் கீதம் ஒழுக

ஹும்  ஹும்

ஓம் நமஹ

கண்கள் வழியாய் கீதம் ஒழுக

தெய்வீக நிலையின் துவக்கமோ

இதைய மிடிப்பின்  அலைகள் உயர

தெய்வீக நிலையின் துவக்கமோ

உதடு நான்கும் சேர்ந்து ஆட

தெய்வீக நிலையின் துவக்கமோ

நம் நெஞ்சுக்குள் பொங்கும்

இனிய நினைவுகள் எல்லாம் இன்று

தெய்வீக நிலையின் துவக்கமோ

 

உன் மனதின்,

ஏக்கமதை நான் புரிந்துகொண்டு

எந்த நேரம்

என் இதையம் இங்கே அழுததோ

நம்மிருவரின்,

மேனி ஒன்றாய் இணைந்துகொண்டு  

எந்த நேரம்,

உருகி ஒன்றாய் சேர்ந்ததோ

ஹும் ஹும், ஹும்  ஹும்

 

நம் விருப்பங்கள் அனைத்தும் இங்கே

காற்றில் ஒன்றாய்

எடுத்து செல்வதைப்போல்

இனிய ராகங்கள்  குழலில் கீதமாய்

ஒழுகி ஒழுகி

தழுவி செல்வதைப்போல்

தூரம் இங்கு குறைந்து குறைந்து

உலகம் நமக்குள்

இறுகி சேரும்போல்

நேரம் இங்கே நின்று போக

நாமிருவரும்,

வானத்தைத்தான் தொட்டுவிடுவதைப்போல்

சூரியன் இங்கே உயர உயர

நிலா தனக்கு

தங்க இடம் கொஞ்சம்

கேட்டு நிற்ப்பதைப்போல்

இனிக்கும்  முத்தத்தின் சத்தத்தில்

உணரும் புது புது கீதங்கள்

தெய்வீக நிலையின் துவக்கமோ

! தனிமையில்த்தான்

பயணம் செல்லும் பயணியே

வந்திடு,

நாம் இருவரும் ஒன்றாய் சேருவோம்

ஹும்  ஹும்  ஹும்

 

கண்கள் நீ என்றால்  இமைகள் நானாவேன்

உதயம் நீ என்றால் ஒளியே நானாவேன்

நெசவு செய்யும் கீதத்தில்

காதல்  வார்த்தையை  எழுதும்போல்

விதும்பும் உதடுகள் ஒன்று சேர

அதில் இனிக்கும் அமுதம் ஒழுகும்போல்

காதல் கொள்ளும் ஜோடிகளை

தேவலோகம்  வாழ்த்தும்போல்

ஜென்ம ஜென்மம் தொடருமிந்த

காதல் காவியம் என்றும்

நமக்குள் மலரும் இன்னேரம்

தெய்வீக நிலையின் துவக்கமோ

ஹும் ஹும்  ஹும்

 

ஓம் நமஹ

கண்கள் வழியாய் கீதம் ஒழுக

இதையமிடிப்பின் அலைகள் உயர

உதடு நான்கும் சேர்ந்து ஆட

நம் நெஞ்சுக்குள் பொங்கும்

இனிய நினைவுகள் எல்லாம் இன்று

தெய்வீக நிலையின் துவக்கமோ?

 

சுந்தரேச்வரன்

By sundareswaran  Date: 7th Jan 2016

 

Courtesy:  Lyric: “Om namaha Nayana srutulaku” Film: Geethaanjali (Telugu)

Lyricist:  Veturi Sundara rama Moorthy    Singer: S P B & S Janaki Madam                                         Music: Maestro ILayaraja Sir

Raaga:  Original Telugu version is in raag Hamsanadam

While Mr Mani ratnam created an intoxicating effect in the picturization of this song scene, Sri Veturi  created  this romantic song with cosmetic revelation.

Sir, Thanks for the inspiration to translate in Tamil with a little bit changes here and there.

I changed the word Om Namaha and changed it as if it is an internal divine awakening and used the wordings ” Deiveega nilaiyin thuvakkamO”. Hope it will suit the Tamil version. Still I used Om namaha  once.

Sir, Your ‘Abbani theeyani debba’ and Sankarabharanam songs are still reverberating in my mind.

 

Please link with https://www.youtube.com/watch?v=JZhoPY4P1Dg

KaNgaL vazhiyaai geetham ozhuga

 

 

Hum  hum  hum,     hum hum hum

Om Namaha

KaNgaL vazhiyaai geetham ozhuga

Deiveega nilaiyin thudakkamO

Ithaiyamidippin  alaigaL uyara

Deiveega nilaiyin thudakkamO

Uthadu naangum   sErnthu  aada

Deiveega nilayin thudakkamO

Nam nenjukkuL  pongum  

Iniya ninaivugaL ellaam  indru

Deiveega  nilaiyin thudakkamO

 

Un manathin,   

E’kkamathai naan  purinthukondu

Entha nEram      

En  ithaiyam ingE  azhuthathO

Nammiruvarin

ME’ni  ondraai   iNainthukondu

Entha nEram    

Urugi ondraai sErnthathO

Hum hum hum,  hum hum hum

 

Nam  viruppangaL  anaithum ingE

Kaatril ondrai    eduthu selvathaipOl

Iniya  raagangaL    Kuzhalil geethamaai

Ozhugi ozhugi thazhuvi selvathaipOl

Dooram ingu     kuRainthu  kuRainthu

Ulagam  namakkul  iRugi SErumpOl

NEram ingE nindrupOga  pOga 

Naamiruvarum

Vaanathaithaan   thottuviduvathupOl

Sooryan ingE uyara uyara

Nilaa thanakku

Thanga idam konjam kEttu niRppathaipOl

Inikkum  muthathin sathathil

UNarum puthu puthu geethangaL

Deiveega nilaiyin thudakkamO?

Oh!  Thanimaiyilthaan 

PayaNam sellum payaNiyE

Vanthidu,

Naam iruvarum ondraai sEruvOm

Hum  hum  hum

 

KaNgaL nee endraal  imaigaL naanaavEn

Udayam nee endraal   OliyE naanaavEn

Nesavu seyyum  geethathil 

Kaathal   vaarthaiyaai ezhuthumpOl

Vithumbum  uthadugal OndrusEra

Athil inikkum  amuthaai ozhugumpOl

Kaathal koLLum  jOdigaLai

DEvalOkam  vaazhthumpOl

Jenma jenmam thodarumintha

Kaathal kaaviyam endrum

Namakkul malarum innEram

Deiveega nilaiyin thudakkamO

Hum hum  hum

Om Namaha

KaNgaL vazhiyaai geetham ozhuga

Ithaiyamidippin  alaigaL uyara

Uthadu naangum   sErnthu  aada

Nam nenjukkuL  pongum  

Iniya ninaivugaL ellaam  indru

Deiveega  nilaiyin thudakkamO

 

 

By sundareswaran  Date: 7th Jan 2016