உன்னை பார்த்தேன் 

உன்னை பார்த்தேன்  என் மனதில்  வரைந்தேன்

எரியும்  வெயிலில் நிழல்போல் உணர்ந்தேன்

உன்னை பார்த்தேன்  என் நெஞ்சில் உணர்ந்தேன்

மீண்டும் என்,    இதயம் உன்னை  நினைப்பதாக

 

மனது இன்றும் தன்  விருப்பம் சொல்ல

மனதை  நானும்  தூங்க வைத்தேன்

நெஞ்சம் விரும்பும் பொருள்களை

ஆசை  இருந்தும் கிடைப்பதில்லை

 

உன்னை பார்த்தேன்  என் மனதில்  வரைந்தேன்

எரியும்  வெயிலில் நிழல்போல் உணர்ந்தேன்

உன்னை பார்த்தேன்  என் நெஞ்சில் உணர்ந்தேன்

மீண்டும் என்,    இதயம் உன்னை  நினைப்பதாக.

 

நீ   என்னை  விட்டு  அகலும் நேரம்

நான் என்ன துலைத்தேன்  என்பதும்

நீ என் அருகில்  இருந்த காலம்

நான் என்ன அடைந்தேன்  என்பதும்

என்றும் எந்நேரமும் நான் நினைப்பதுண்டு.  

 

மறக்க  முயன்ற பாடல் வரிகளை

விதி அதை ஏன்

திரும்ப மீண்டும் என் மனதில்  வரைந்தது

நினைக்க நினைக்க நான்  கண்ணீர் மல்க

உன் நினைவில் என்னை ஏன் கொண்டு சொல்லுது

 

சுந்தரேச்வரன் Date: 18th June 2017.

 

A tribute to the departed life partner.   

 Can it be set to raag  Kalayani ?  Or can it be HindOl ?

பல பல நிலை கொண்ட மனதை

பல பல நிலை கொண்ட மனதை

ஒரு  நிலையில்  வைத்ததை யோசித்தால்

உண்மை நம் மனதுக்குள் உணர்ந்துவிடும்

 

உடல் உறுப்புக்களை மாற்றி பொருத்தலாம்

அதுவும் உன் சாதனை என்று புலம்பலாம்

அதுவும் நிரந்தர தீர்வாகுமோ

உயிருக்குள்  மீண்டும் குருதி ஏற்றிடலாம்

அதுவும் உன் திறமை என்று நகைக்கலாம்

அதுவும்  நிரந்தர சுருளாகுமோ

சேர்க்கையாய் உள்  மூச்சை நீயும்  கொடுக்கலாம்

அதுவும் எத்தனை நாளென்று தொடரலாம்

அதுவும் நிரந்தர செயலாகுமோ ?

 

ஒரு  மண் சட்டிக்கு க்கூட    

ஈடு செய்ய இயலாத,

மீண்டும்  குழைத்ததை         

உருவாக்க  முடியாத,

எதற்குமே  ஒருபோதும் பயன்படாத

உடல் பொருள் இதனோடு ஏன்  இந்த கவர்ச்சி ?

 

வன விலங்குகள்    தாவரங்கள்

இறைவன் தன்  கைகொண்டு

தினமும் தழுவும் ஆனந்த உயிர்கள் .

அவை உயிர் வாழ்ந்தாலும்  பயனுண்டு

உயிர் துறந்தாலும் பயனுண்டு  

அவை அழிந்தால்  நீ அக்கணமே அழிவதை

உன் கண்ணாலேயே நீ அதை  காண்பாய்

இதை நீ உன் மனதில் புரிந்து கொள்வாய்

 

உருவாக்கிய தாய் தந்தையர் யாரென்று

உனக்கதை சொன்னால்தான்

நீ அதை அறிந்து கொள்வாய்

ஆறறிவிருந்தும்  என்ன பயன்

இதை க்கூட தானாகவே அறிய இயலாத

நீ இருந்தும் இவ்வுலகில் என்ன பயன் ?

 

விலங்குகளைப்பார்  நீ ஒருபொழுதேனும்

சேய்க்கு தன்  தாயையும் 

தாய்க்கு தன்  சேயையும்

எக்கூட்டத்தில் இருந்தாலும் தனித்தறியும்

 

கடவுளும் தன்  மனதில் குமுற

அளித்தான் பார்  உனக்கொரு வரம்

நீ உன்னாலேயே அழிவாய் நீ அதை 

உன் கண்ணாலேயே காண்பாய்

என்றொரு திரு வரம்

 

 

சுந்தரேச்வரன்    Date: 16th June 2017.

என்னிடம் ஏன் இந்த கோபம்

என்னிடம் ஏன்  இந்த கோபம்

இன்னும் என்னிடம் எதற்க்கிந்த  வருத்தம்

 

வெகு  நாளாய்  உனக்காய் காத்திருந்தேன்

ஏனோ  என்னை

ஒரு பொழுதேனும் கூட நீ

பார்க்க  வரவில்லை

 

சந்தன தென்றலும் முழு நிலவும்

என் மன   வேதனையை

உன்னிடம்  சொல்லவே  மறந்தனவோ ?

 

என்னிடம் ஏன்  இந்த கோபம்

இன்னும் என்னிடம் எதற்க்கிந்த  வருத்தம்

 

கண்மை  தீட்டி அணிகலன்களுடன்  இன்றும்

கன்னாடி  முன்னால்  நான் வந்து நின்றேன்

மஞ்சள் பூசி  நான் குங்குமம் இட்டு

வாசலில் கார்த்திகை தீபங்கள் ஏற்றி வைத்தேன்

 

என் கனவெனும் ஊஞ்சலில் ஆடவே ஏனோ

நீ மட்டும் இன்னும்  வரவில்லை

 

உன் கால் நடக்கின்ற ஓசை கேட்டால் க்கூட

ஓடி வாசல் வரையில் நான் வருவேன்

என் கொலுசின் சத்தம் கூட கேட்க்காமல் நடப்பேன்

நீ என்னை அழைப்பதை கேட்க்க  நான் ஆசைப்பட்டு

 

என் மனம் எனும் ஊஞ்சலில் ஆடவே ஏனோ

உன்னை  இன்னும்  நான் காணவில்லை

 

என்னிடம் ஏன்  இந்த கோபம்

இன்னும் என்னிடம் எதற்க்கிந்த  வருத்தம்

 

 

சுந்தரேச்வரன்                   By Sundareswaran  Date:  11th  June 2017.

 

Courtesy:  Lyric:  ‘Ennodenthinaanee piNakkam’

Lyricist:  Kaithapram Sir   Film:  Kaliyaattam  Singer: Bhavana Radhakrishnan

Set to raag  Sahaana

Thanks for the inspiration to translate in Tamil.

 

Please link with https://www.youtube.com/watch?v=bAqZxIKvhJI

இறைவா   இறைவா    இறைவா  

எங்கள் மனதில்  சக்த்தி அளித்து

மனதை  வெல்ல  செய்வாய்

பிறரை  வெற்றி காணும் முன்னே

தன்னை  வெல்ல அருள்வாய்.    

 

எங்கள்  மனதிலிருந்து பாகுபாடை

நீக்க வழி  வகுத்து  அருள்வாய்

மன்னிப்பளிக்கும்  திறந்த இதையம்

என்றும் எங்கள்   மனதில் நிலைக்க அருள்வாய்.

 

பொய்மை பேச நினைக்காதவண்ணம்

மனதை தூய்மை செய்து

உண்மை  காக்க வைப்பாய்.

சிரமங்கள்  கூட சூழும் நேரம்   

நல்வழி    மறவாத வண்ணம்

நல் வழியே செல்ல அருள் புரிவாய்.

 

எங்கள் மனதில்  சக்த்தி அளித்து

மனதை  வெல்ல செய்வாய்

தீய சக்த்தியை எதிர்க்க மனதில்

தன்னம்பிக்கை நிலைக்கும் வண்ணம்   

என்றும் என்றும் என்றுமே  நீ அருள்வாய்.

 

இறைவா இறைவா இறைவா.

எங்கள் மனதில்  சக்த்தி அளித்து

மனதை  வெல்ல செய்வாய்

பிறரை  வெற்றி காணும் முன்னே

தன்னை  வெல்ல அருள்வாய் 

 

 

சுந்தரேச்வரன்            By Sundareswaran  Date:  29th  April 2017.  Can it be set to Raag hamsanaadam? Apart from Hameer Kalyani?

 

Inspiration from  Gulzar Ji’s  “ Ham ko man ki sakhthi dena man vijay kare”

Thanks Sir. I could translate the Hindi version to the best of my ability.

And Vairamuthu’s creation ‘Sakthi kodu’.   The word IRaivaa. 

 

When I was translating a Hindi song in Hameer kalyaani, Gulzarji’s lyric rumbled in my ears.

I owe my wife in helping me understand the correct meaning of the second line in the Hindi version.

Dusaron kee jay se pahale
Khud ko jay kare

Please link with http://bhajansonline.blogspot.in/2009/05/hum-ko-man-ki-shakti-dena-lyrics.html

   

At that ecstatic moment

At that ecstatic moment

I became the gentle breeze of Autumn

And the fragrance of thousands of intoxicating nights

Spilled from the innermost pedestal of my soul.

 

In your forlorn bed you sleep

I flowed without sleeping

And the pollens of octaves that you spread

On the honey dewed flowery lips   

I wrote my tune as well

Without your conscience knowing it and

Without your knowledge.

 

At that ecstatic moment

My mind swayed in the lines of a melody

And the thirsty cells in me quivered

With new transcending moods

And in the valleys of your tresses bedecked with flowers

It spread and flowed like a lullaby

And for that heartbeats in you

I served my rhythm

I served my rhythm

Without your conscience knowing it and

Without your knowledge.

 

English translation by Sundareswaran Date: 5th June 2017.

 

ആ നിമിഷത്തിന്റെ നിര്‍വൃതിയില്‍ ഞാനൊ
രാവണിത്തെന്നലായ് മാറി..
ആയിരമുന്മാദ രാത്രികള്‍തന്‍ ഗന്ധം
ആത്മദളത്തില്‍ തുളുമ്പി..
ആത്മദളത്തില്‍ തുളുമ്പി..

നീയുറങ്ങുന്ന നിരാലംബശയ്യയില്‍
നിര്‍നിദ്രമീ ഞാനൊഴുകീ..
ആ ആ ആ
രാഗപരാഗമുലര്‍ത്തുമാ തേന്‍ചൊടി
പൂവിലെന്‍ നാദം എഴുതി
അറിയാതെനീയറിയാതെ

ആ നിമിഷത്തിന്റെ നിര്‍വൃതിയില്‍ മനം
ആരഭിതന്‍ പദമായി..
ദാഹിയ്ക്കുമെന്‍ ജീവതന്തുക്കളില്‍
നവ്യ ഭാവമരന്ദം വിതുമ്പി..
താഴ്വരയില്‍ നിന്റെ പുഷ്പതല്പങ്ങളില്‍
താരാട്ടുപാട്ടായ് ഒഴുകീ..
ആ ഹൃദയത്തിന്റെ സ്പന്ദനങ്ങള്‍ക്കെന്റെ
താളം പകര്‍ന്നു ഞാന്‍ നല്‍കി..
താളം പകര്‍ന്നു ഞാന്‍ നല്‍കി..
അറിയാതെനീയറിയാതെ                                Malayalam Lyric:  Sri Kumaran Tampi

 

Kudos to Thampi Sir  My pranams

The dancing hues have faded

The dancing hues have faded from the skyline

Will the disappeared evenings

Come back alive?

Will the birds that have flown away from the sky

Return again?

 

Loneliness is killing me

And in the lighted wick

Like a blossoming flower

The flickering flame still stands.

 

The whispering sound of footsteps

Of the changing seasons is still heard.

By fondling the feathers of memory

I am still waiting for you dear

Looking at the blank alleyway

With my eyes wide open.

 

The crystal glass of time of youth

And that of life has broken off

And the wine in it has spilled and is flowing off,

With this useless life that is disappearing from me

Why I should live in this island of pearls?

 

English Translation by Sundareswaran Date: 7th June 2017.

 

 

This song can be a tribute to the old age feelings of a man for his departed partner.

 

 Kudos to ONV for his lyric in Malayalam “ NIRangaL than nritham ozhinjoree maNNil”

விழாமல் நம்மை தக்கவைக்கும்

— An Iroquois Prayer in Powerful Prayers for Everyday Living by Mark Linden O’Meara

விழாமல் நம்மை தக்கவைக்கும்

பூமித்தாய்க்கு நன்றி சொல்வோம்

வாழ நமக்கு  குடிநீர் தரும்

நதிகளுக்கும் ஓடைகளுக்கும் நன்றி சொல்வோம்

 

நம்மை தாக்கும்  நோய் நொடியினை

இல்லாமை செய்ய    மருந்தாகும்

மூலிகை தாவரங்களுக்கும் நன்றி சொல்வோம்.

நம் உயிர்காக்கும் நித்திய உணவுக்காக

அதில் வளரும்

தானியங்களுக்கு நன்றி சொல்வோம்

 

இனிக்கும் பழவகை தரும்

மரம் செடி கொடிகளுக்கும்  நன்றி சொல்வோம்

நமக்கு  உயிர்மூச்சாய் நிலைகொள்ளும்

அதில் ஒழுகும் காற்றுக்கும் நாம் நன்றி சொல்வோம்.

 

பகல் இரவு நேரம் முழுதும் நமக்கு

ஒளிதரும் அந்த கதிரவன் நிலா

நச்சத்திரங்களுக்கு  நாம்  நன்றி சொல்வோம்

நமக்கு  முன்னோர்களாய்  திகழும்

மழை தரும்  மேகங்களுக்கு  நாம் நன்றி சொல்வோம்  

நாள்தோறும் நம்மை  நோக்கி நமக்கு

வலிமைதரும் கதிரோனுக்கும் நன்றி சொல்வோம்

 

இந்த வலிமை எல்லாம் தன்னில் ஏந்தி

நமக்காய் அதை அள்ளித்தந்து

நம்மையும்

நம் வழி வரும்

தலைமுறையையும்

நல்வழி நடக்க சொல்லும்

ஸர்வ வல்லமை படைத்த

இறைவனுக்கும்  நாம்  நன்றி சொல்வோம்

The Iroquois or Haudenosaunee are a historically powerful northeast Native American confederacy. They were known during the colonial years to the French as the “Iroquois League.

 Translated to Tamil by Sundareswaran Date: 23rd May 2017.

English Version:

Prayer for Earth

We return thanks to our mother,
the earth, which sustains us.
We return thanks to the rivers and streams,
which supply us with water.
We return thanks to all herbs,
which furnish medicines
for the cure of our diseases.
We return thanks to the corn,
and to her sisters, the beans and squash,
which give us life.
We return thanks to the bushes and trees,
which provide us with fruit.
We return thanks to the wind,
which, moving the air,
has banished diseases.
We return thanks to the moon and the stars,
which have given us their light
when the sun was gone.
We return thanks to our grandfather He-no,
who has given to us his rain.
We return thanks to the sun,
that he has looked upon the earth
with a beneficent eye.

 

Lastly, we return thanks to the Great Spirit.
In whom is embodied all goodness.
And who directs all things,
for the good of his children.

 

We return thanks to our mother,
the earth, which sustains us. 

These lines are sung as invocation song in the very beginning of Bharath Natyam Dance.

O! Mother Earth, we are tramping on you while we make different steps and it will pain you. Please forgive us.