ஏதோ  என்னிடம் மட்டுமாய்

ஏதோ என்னிடம் மட்டுமாய்

மொழிவதற்க்காய்

இந்த மழைக்குத் தான்

ஏதேனும் உண்டோ

அதுவும்  இரகசியமாக ?

 

மாலை முதல்

என் வாசல் ஜன்னல் அருகில்

நிற்க்கிறாள் அவள் தன் 

சிறகை விரித்து,

அதுவும்   வெகு நேரமாக.

 

வெகு காலமாய் அவள்

என்னிடம் கொண்டுள்ள  

தனிப்பட்ட விருப்பத்தினாலோ  

என்னையே நேசிப்பதனாலோ ?

 

என்றோ படித்து பாடி மறந்த

ராகங்களை மீண்டும் பாடி

என்னை நினைவூட்டத்தானோ

அவள் கொண்ட மௌனமாம் நிலை கூட

அவளின்  மிகுதியாய் பேசிடும்  நிலை தானோ    

 

மௌனமாய் நான் இருக்க

என்னிடம் வந்து

இரகசியமாய் பேசவே தானோ

வானத்தை மேகத்தால் மூடி மறைத்த பின்

யாருமே காணாமல்

என்னுடன் காதலில் மகிழத் தானோ

ஒரு வேளை  என் உயிர் தோழி தானோ

 

நானே விரும்பி

வாழும் இம்மண்ணில் ஏன்  வந்தாள்

தானாய் அதில் உருகி  சேர்ந்திடத்தானோ

என் மார்பில் தலை சாய்த்து

என்னுடலோடு ஒன்றாகி

என்னுடன் துயில் கொள்ளத் தானோ

என்னவள் என்றாகத் தானோ

எல்லாம் மறந்திடத் தானோ

 

என்றும் நிம்மதியில் நாம் துயிலும் நேரம்

எண்ணிலா இரவுகள் மாய்ந்திடலாம்

நம் உறவினொர் உற்றோர் நம்மை எழுப்பும்

மற்றொரு ஜென்மத்தில் நாம் வாழலாம்

அன்றும் நீயே என்  ப்ரியமானவள் ஆகலாம்

அன்றும்  இந்த வாசலில் பூ மழை பொழிந்திடலாம்.

 

சுந்தரேச்வரன்           Date: 21st July 2017.

 

Courtesy:  Lyric:  “EnthO undaagumee mazhakkennOdu maathramaai”

Lyricist:  Ramesan Nair  Film: MAZHA  (Rain)

 

Thanks for the inspiration to translate in Tamil.

 

Please link with https://www.youtube.com/watch?v=Q5MuXo-f3xY

 

This is something similar to Gulzarji’s  “Roz rOz daali daali Kyaa likhthaa bhawaraa  bhaawraa”

 

This line அவள் கொண்ட மௌனமாம் நிலை கூட

அவளின்  மிகுதியாய் பேசிடும்  நிலை தானோ    

  

 Is something similar to Gulzarji’s “Aap ki khaamOshiyaan hi aap ki andaaz hai’ From film GHAR.

ആര്‍ദ്ര മൌനവും വാചാലമാവാം……….. 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s