அம்மா என்றழைத்தும் 

அம்மா என்றழைத்துமே 

நீ ஏன்,

என்னுடன்  பேசாமல் இருக்கின்றாய்

தாயே   மீனாக்ஷியே

உனக்கிது ,

நியாயமென்றே படுதா ?

உன்னைத்தவிர  எவருண்டு

எனக்கு,

அடைக்கலம் தருவதற்க்கு.

 

மும் மூர்த்திகள் அனைவருமே

உன்னை,

வழிபட்டு வருகின்றார்.

உன் தாமரைப்பாதங்களை

நானும்,

நம்பிடும் ஆதரவாய்  நினைக்க

கருணை  புரிவாய் அம்மா

என்,

கார்த்தியாயினி  கலிகை  பவானி.

 

தாயே  பரமேஸ்வரி  

நீயும்,

சுந்தரேசனின்  ராணி யன்றோ

இனிப்பாய்  பேசுபவள்  நீ

தாயே,

பாலாம்பிகை அம்மா

 

பக்த்தரின் பாபங்களை

தீர்க்கும்,

தாய் ஜனனியன்றோ  நீயும்

உறுதி அளிப்பாய் நீ

எம்மை, 

காத்திடுவாய்  என்று.

அம்பிகே  நீயும்தான்

உன் கருணையை

இக்குழந்தைக்கு  ஏன்  மறுக்கின்றாய்

 

அகிலத்தின்  நாயகியே

இந்த ஷ்யாமனின் சோதரியே

அபயம் அளிப்பாய்  நீ

தாயே  திருபுர சுந்தரியே.

 

From  Shyama Saasthri keerthanai “ Maayamma yani pilachitE

Maattaadda raadaa naatO  ambaa”         Set to raag  Aahiri.

Translation in Tamil  by Sundareswaran  Date: 8th April 2017.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s