யசோதையின் கவலை

எங்கிருக்கான் இந்த அழகு சுட்டி பைய்யன்

பிடியுங்கள் அவனை நான் பாலூட்டுவதற்க்காய் (2)

 

அவனை கட்டியிட்ட சங்கிலியை

அவனே அவிழ்த்துவிட்டான்

வளையலிட்ட கைகளை

வெண்ணை பானைக்குள் விட

ஓடுகிறான்  அவன் ஓடுகிறான்

 

கட்டுப் படுத்துங்கள் கோபியரே

அந்த குட்டி க்குறும்பு ப்பயலை

 

எங்கிருக்கான் இந்த அழகு சுட்டி பைய்யன்

பிடியுங்கள் அவனை நான் பாலூட்டுவதற்க்காய்.

 

கட்டியிட்டால்  போதும் அந்நேரமே…….(2)

கட்டியிட்டால்  போதும் அந்நேரமே

கன்னங்களில் நீர் வழிந்து ஒழுகிடும் வண்ணம்

கள்ள க்கண்ணீர் வடிக்கின்றான்….(2)

 

கட்டுப் படுத்துங்கள் கோபியரே

அந்த குட்டி க்குறும்பு ப்பயலை

 

குற்றமற்ற செய்கை  பார்வையுடன் வந்து

நோவுதென்பான்  தன்

வளையிட்ட  செவ்வண்ண கைகளை நீட்டி  (2)

யாருமில்லா நேரம் பார்த்து

வெண்ணை திருடியபின்

தப்பித்து சென்றிடுவான்

அதை  தான்  

எடுத்திருக்கேன் என்பதறியவே………..

அங்கும் இங்கும் அதை சிந்தி வைப்பான்   

 

யாரேனும்  அவனை பார்த்தல் ……

அந்நேரம்,     யாரேனும் அவனை பார்த்தல்

தன்  கை  வாய் கன்னம் முகத்தில் எல்லாம்

வெண்ணை தயிர் வழிந்த நிலையில்

ஒன்றும் அறியாதவன்போல்

கண்களை உருட்டி விழித்து நிற்ப்பான் .

 

கட்டு ப்படுத்துங்கள் கோபியரே

அழுது சிணுங்கும் இந்த குட்டி சிறுவனை  

 

நமக்கது தெரியாமல்

திருட்டு த்தனமாக  (2)

நமக்கது தெரியாமல்

திருட்டு த்தனமாக 

எப்படித்தான் நுழைந்தானோ வீட்டுக்குள்ளே

தொங்கும் பானையிலிருந்து

திங்கும் பொருள்களை எல்லாம்

எப்படித்தான் எடுத்தானோ தெரியலையே

அவன் தன் மோதிர விரல்களினால்

வேறு  எதையெல்லாம்

எடுத்தானோ என்பதையும்

யாவர்க்கும்  ஒன்றும் புரியலையே.

 

கட்டு ப்படுத்துங்கள் கோபியரே

இந்த அழகு முகம் கொண்ட பாலனை  

 

 

வந்தவன்  வேறு  யாருமல்லா ……

வந்தவன்  வேறு  யாருமல்லா

ஸ்ரீ வெங்கிடேசன் தான்  இச்சிறுவனும்

உங்கள் தலைமேல் அவனையும் தூக்கி வைத்து

ஆடுங்கள் ஆடுங்கள் ஆடுங்கள் கோபியரே

 

Inspiration and translation

 

From Annamayya’s keerthanam  “ itti muddi laadi baalu DEDa vaaDu Vaani”   

 

Can be set to Raag Kalyani.    Can be choreographed for Bharath Natyam   

 

By Sundareswaran  Date: 6th July 2017.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s