உன் விழிகளில் என் விழிகள்

ஆண் :

உன் விழிகளில் என் விழிகள் தெரிய

விழிகள் தொட்ட இமைகள் விரிய  

புரிந்துகொண்டேன்

நீ அளித்தாய் சம்மதம்

உன் கன்னம் இரண்டும் சிவந்த பொழுதே

நாணல் கொண்டு நீ  நின்ற பொழுதே

நான் நினைத்தேன்

நீ அளித்தாய் சம்மதம்

உன் கைகள் அசைய வளைகள் நழுவ 

கொஞ்சி குலுங்கும் ஓசை  கூட

சொல்லுதோ சம்மதம் சம்மதம்

பெண் :

உன்னை தழுவி  என்னை தழுவும்  

தென்றலின்  அலைகளும் தான்

சொல்லுதே  சம்மதம் சம்மதம்

ஆண் :

எனது உயிரில் உயிராய்  நீயும்  

கலந்து சேர  விருப்பம் தானோ

அறிந்து கொள்ள சம்மதம்  சம்மதம்  சம்மதம்

உன் விழிகளில் என் விழிகள் தெரிய

விழிகள் தொட்ட இமைகள் விரிய  

நீ அளித்தாய் சம்மதம்  

 

பெண் :

காலை சூரியன்   கண் திறக்கும் நேரம்

செடி கொடிகள் தன்னை  அணைத்துக்கொள்ள

சொன்னதே ஒளியிடம்தான்  சம்மதம்

 ஆண் :

சோலை பூக்கள் மலரும் நேரம்  

தேன் அருந்தி மயங்கிக்கொள்ள

சொன்னதே வண்டினிடம்தான் சம்மதம்

பெண் :

ஆழ்க்கடலின் அலைகளுடனும்  

கரையும் தன்னை தழுவிக்கொள்ள

சொன்னதே  சம்மதம் சம்மதம்

 

ஆண் :

அறிந்தேன் உன்னை அறிந்தேன்

நானும்  மேகங்கள் போல் எங்கும் பறந்தேன்………….

பெண் :

விருந்தாய்  நானும்  இருந்தேன்  

உனது விருப்பம் போல் அருகில் இருந்தேன்

ஆண் :

உன் விழிகளில் என் விழிகள் தெரிய

விழிகள் தொட்ட இமைகள் விரிய  

நீ அளித்தாய் சம்மதம்

 

பெண் :

என் விழிகள் இரண்டும் இமைகள் மூட

இன்னும்   உன்   உதடுகள் அதை  நாட

தர வேண்டுமோ நானும் சம்மதம்

 

ஆண் :

நீ,     நடந்து வரவே   கொலுசின் ஒலியும்  

ஸ்வர வரிசைபோல் சொல்லுதே  சம்மதம்

பெண்

பாடும் உனது குரல் கேட்க்க

தம்புருவில் ஸ்ருதி   மீட்ட சம்மதம்

ஆண்

விரல்களால் உன் கூந்தல் தழுவி

கரங்களால்   உன்னை அணைக்க

கேட்க்கிறேன் நானும்  சம்மதம் சம்மதம்

 

உன் விழிகளில் என் விழிகள் தெரிய

விழிகள் தொட்ட இமைகள் விரிய  

நீ அளித்தாய் சம்மதம்   

 

பெண் :

நீ பாதி  மயங்கும்  வேளை தனிலும்  

என்னை,  நினைத்திருக்க சம்மதம்  

ஆண் :

நான் காதில் சொன்ன வார்த்தைகளை  நீ  

காவியமாய் எழுத எனக்கு சம்மதம்

பெண் :

ஏழு ஜென்மம் உன்னுடன் நான்  

சேர்ந்தே வாழ சம்மதம் சம்மதம்

 

ஆண்

உன் விழிகளில் என் விழிகள் தெரிய

விழிகள் தொட்ட இமைகள் விரிய  

நீ அளித்தாய் சம்மதம்

பெண் :

என் விழிகள் இரண்டும் இமைகள் மூட

இன்னும்     உன்   உதடுகள் அதை  நாட

தர வேண்டுமோ நானும் சம்மதம்

 

சுந்தரேச்வரன்  Date: 20th June 2017.

Can it be set to Raag  Darbaari kaanada? With a mix up of Madhyamaavathi?

Inspiration from

Courtesy:  Lyric: ‘Salabham vazhi maaRuvaan mizhi rendilum sammatham”

Lyricist: Girish Puthanchery

 

Please link with https://www.youtube.com/watch?v=Tv8qM4jyYrI  

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s