இந்த மந்திர ஜாலம்

இந்த மந்திர ஜாலம் திறந்த தென்ன  இந்திர லோகமோ

வண்ண கோபுரங்கள் தாண்டி வந்ததென்ன வான் வெளிச்சமோ

இனிமையாக தாளமிட்டிறங்கி வந்ததாரு  அப்சரை தானோ

மெய்  தொட்டு தொட்டு தழுவி நின்ற பனியில் பூக்களில்

தந்திரமாய் ஒழுகி சென்றதிங்கே யாரு  ஈர காற்றோ

ஸ்வரங்கள் ஏழும் இங்கே ஒன்றாய்   சேரும் வேளையில்

ஆதி தாளம்  ஒன்று   இங்கு உருவாகுதோ

கனவுகளும் ஒன்று சேர்ந்து    ஒழுகும் வேளையில்

ஆசையில்,   காதல் மந்திரங்கள் ஒவ்வொன்றாய்  உதிருகின்றதோ

மனதில் எங்கும் குளிர் தென்றல் பரவியதுபோல்

மண்ணில் எங்கும் காண்கிறாயோ வண்ண பூக்களை      வாஹ்!

இந்த மந்திர ஜாலம் திறந்த தென்ன  இந்திர லோகமோ

வண்ண கோபுரங்கள் தாண்டி வந்ததென்ன வான் வெளிச்சமோ

இனிமையாக தாளமிட்டிறங்கி வந்ததாரு  அப்சரை தானோ

மெய்  தொட்டு தொட்டு தழுவி நின்ற பனியில் பூக்களில்

தந்திரமாய் ஒழுகி சென்ற திங்கே  யாரு   ஈர காற்றோ

உடலெங்கும் வான வில்லின் வண்ணங்கள் தழுவுகின்றதோ

வீணை தன்னில்  மீட்டி வரும் ஸ்வரங்கள் எல்லாம் விழிகள் திறக்குமோ

பார்க்குமிடம் அத்தனையும்  உன்னை கவருதோ

பார்த்து பார்த்து பறந்திடவே ஆசை  கொள்ளுதோ   ஹாய்!

இந்த மந்திர ஜாலம் திறந்த தென்ன  இந்திர லோகமோ

வண்ண கோபுரங்கள் தாண்டி வந்ததென்ன வான் வெளிச்சமோ

இனிமையாக தாளமிட்டிறங்கி வந்ததாரு  அப்சரை தானோ

மெய்  தொட்டு தொட்டு தழுவி நின்ற பனியில் பூக்களில்

தந்திரமாய் ஒழுகி சென்ற திங்கே  யாரு   ஈர காற்றோ

சுந்தரேச்வரன் 

 By Sundareswaran  Date: 21st June 2017.

Courtesy: Lyric: “Ee manthra jaalakam thuRannathindra lOkamO”

Lyricist:  Kaithapram Sir       Film:  Thooval Sparsam

Sir thanks for the inspiration and to translate in Tamil with some changes to suit the Tamil tempo.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s