என்னிடம் ஏன் இந்த கோபம்

என்னிடம் ஏன்  இந்த கோபம்

இன்னும் என்னிடம் எதற்க்கிந்த  வருத்தம்

 

வெகு  நாளாய்  உனக்காய் காத்திருந்தேன்

ஏனோ  என்னை

ஒரு பொழுதேனும் கூட நீ

பார்க்க  வரவில்லை

 

சந்தன தென்றலும் முழு நிலவும்

என் மன   வேதனையை

உன்னிடம்  சொல்லவே  மறந்தனவோ ?

 

என்னிடம் ஏன்  இந்த கோபம்

இன்னும் என்னிடம் எதற்க்கிந்த  வருத்தம்

 

கண்மை  தீட்டி அணிகலன்களுடன்  இன்றும்

கன்னாடி  முன்னால்  நான் வந்து நின்றேன்

மஞ்சள் பூசி  நான் குங்குமம் இட்டு

வாசலில் கார்த்திகை தீபங்கள் ஏற்றி வைத்தேன்

 

என் கனவெனும் ஊஞ்சலில் ஆடவே ஏனோ

நீ மட்டும் இன்னும்  வரவில்லை

 

உன் கால் நடக்கின்ற ஓசை கேட்டால் க்கூட

ஓடி வாசல் வரையில் நான் வருவேன்

என் கொலுசின் சத்தம் கூட கேட்க்காமல் நடப்பேன்

நீ என்னை அழைப்பதை கேட்க்க  நான் ஆசைப்பட்டு

 

என் மனம் எனும் ஊஞ்சலில் ஆடவே ஏனோ

உன்னை  இன்னும்  நான் காணவில்லை

 

என்னிடம் ஏன்  இந்த கோபம்

இன்னும் என்னிடம் எதற்க்கிந்த  வருத்தம்

 

 

சுந்தரேச்வரன்                   By Sundareswaran  Date:  11th  June 2017.

 

Courtesy:  Lyric:  ‘Ennodenthinaanee piNakkam’

Lyricist:  Kaithapram Sir   Film:  Kaliyaattam  Singer: Bhavana Radhakrishnan

Set to raag  Sahaana

Thanks for the inspiration to translate in Tamil.

 

Please link with https://www.youtube.com/watch?v=bAqZxIKvhJI

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s