தென்றலின் ரெக்கையில்

தென்றலின் ரெக்கையில்  எழுதி வைத்தேன்

என்  மெல்லிய காதலின் கதையை நான்

நீ அதை படித்தாயோ   அறியேன் நானும்

சொல்வாய் நீ அதை நாம் எதிர்படும்பொழுது  

 

மலர்களில்  முகில்களில்

இங்குள்ளோர் கண்களிலும்  நான் பார்க்க

என் கண்களில் உன் முகம் தெரிகிறதே..

 

தென்றலின் ரெக்கையில்  எழுதி வைத்தேன்

என்  மெல்லிய காதலின் கதையை நான்

நீ அதை படித்தாயோ   அறியேன் நானும்

சொல்வாய் நீ அதை நாம் எதிர்படும்பொழுது  

 

என் கற்ப்பனையில்  நான் ஓர்

உலகம்    பணிந்துள்ளேன்

இரவின்     கனவில்  

உன்னை   ஒளித்துள்ளேன்

என் இதய சுவர்களில்

உன்னை  வரைந்துள்ளேன்

நீ அதை அறிவாயோ  ஹோ ஹோ  

 

உன்,   நினைவுகளால் ஓர்

படம் வரைத்திருந்தேன்

உன்னிடம் சொல்லாமல் நான் அதை

ஒளித்து வைத்திருந்தேன்   

நீண்ட நாள் பிரிவினை

சகித்துக்கொண்டிருந்தேன்

நீ அதை  ஏற்றுக் கொள்வாயோ  என்னோ

 

உன் நிழல் தான் இந்த நிலவின் ஒளியும்

உன் நிலமை தான் இங்கு பரவிடும் ஒலியும்

 

என்ன செய்வேன்   என்ன செய்வேன்

என்னை

வாழத் தடுக்குதடி  உன்  எழில் வண்ணம்

 

தென்றலின் ரெக்கையில்  எழுதி வைத்தேன்

என்  மெல்லிய காதலின் கதையை நான்

நீ அதை படித்தாயோ   அறியேன் நானும்

சொல்வாய் நீ அதை நாம் எதிர்படும்பொழுது  

 

மலர்களில்  முகில்களில்  

இங்குள்ளோர் கண்களிலும் நான் பார்க்க

என் கண்களில் உன் முகம் தெரிகிறதே..

  

இத்தனை  அழகா நான் பார்க்கும்  உலகம்

மழை பொழியும்போல் அதில் உணர்ச்சிகளா

நினைக்கவில்லை அதில் நாம் எதிர்படுவோம் என்று

நினைக்கவே  இல்லையே ஹோ ஹோ

 

போதை ஊட்டும்போல் ஓர்

மகிழ்ச்சியின் சூழ்நிலை

இங்கு சாதகமாக இணைந்தது

நாம் இருவருக்கும்

தூக்கம்  வராமல் என் எண்ணங்கள்  யாவும்

ஏறுமாறாகத்தான் போனதே

 

நான் உன் மிக

பக்கத்தில் பக்கத்தில்  நின்ற பொழுதும்

இன்னும்  இன்னும் அதில்  இடைவெளி ஏன்

இந்நிலைமை  இன்னும்  இன்னும் உடைந்தும் எனோ

உடையாமல்  இருப்பதும் ஏன்

 

பக்கம் தான் நாம் இங்கு  வந்துவிட்டோம்

உன்  மூச்சினில்  தெரியுது  நம்பிக்கை நறுமணம்

 

தென்றலின் ரெக்கையில்  எழுதி வைத்தேன்

என்  மெல்லிய காதலின் கதையை நான்

நீ அதை படித்தாயோ   அறியேன் நானும்

சொல்வாய் நீ அதை நாம் எதிர்படும்பொழுது  

 

மலர்களில்  முகில்களில்  

இங்குள்ளோர் கண்களிலும் நான் பார்க்க

என் கண்களில் உன் முகம் தெரிகிறதே..

 

சுந்தரேச்வரன் Date: 14th May 2017.

 

Please link with  https://www.youtube.com/watch?v=U9DnSd2zM0g

 

Lyric:  ‘Song – ‘Maine Hawa Ke Paron Pe’
Movie – Mere Baap Pehle Aap
Singer – Udit Narayan, Shreya Ghosal
Lyricist – Sameer
Music Director- Vidyasagar

 

Thanks for the inspiration to translate in Tamil.

Something similar:

KaNpadumO endru ninaithu naanum  en

KaNgaLai Or KaNam moodikkondEn

Un azhagai ingu paartha pinnaalE

Vaan   azhagai   kaNgaL paarkkavillai.

 

MalargaLil     mugilgaLil

InguLLOr  kaNgaLilum  naan paakka

En kaNgaLil un mugam mattum therigiRathe.

 

Un peyar thalaippaai  vaithu  naan ingOr

Kavithai  varigaLai  ezhutha munainthEn

Ezhuthi athai  naan mudithathum paarthEn

Un peyaraithavra athil  vERethum illai.

Sundareswaran

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s