சொல்லாதே சொல்லாதே

ராதே சொல்லாதே சொல்லாதே  வெளியே எங்கும்

நான் உன் வளையலை உடைத்தேன் என்று

ராதே சொல்லாதே சொல்லாதே  வெளியே எங்கும்.

  

ராதே  உன் முகம் பார்க்க நான்   ஆசை கொண்டேன்  

உன் நீல விழிகளில்    காதல் கொண்டேன்

அதனால்தான்  முகத்திரையை  இழுத்தேன் இங்கு

அல்லாமல் வேறு எண்ணம் ஒன்றும்  இல்லை என் மனதில்.

 

ராதே சொல்லாதே சொல்லாதே  வெளியே எங்கும்

கண்ணன் தான் இதை எல்லாம் செய்தான் என்று  

ராதே சொல்லாதே சொல்லாதே  வெளியே எங்கும்.  

 

 என்னை  அறியாமல் நீ,     நதியோரம்  சென்றாய்

மண் குடத்தில் நீரையும்   எடுத்து வந்தாய்

மரக்கிளையில் இருந்துகொண்டு 

நான் இதெல்லாம் பார்த்தேன்

உன் மனதை துன்புறுத்த திட்டம் போட்டேன்

உன் பின்னால் மெதுவாக நடந்து வந்தேன்

கல்லால் எறிந்து  நான் குடத்தை உடைத்தேன்

 

ராதே சொல்லாதே சொல்லாதே  வெளியே எங்கும்

கண்ணன் தான் இதை எல்லாம் செய்தான் என்று  

ராதே சொல்லாதே சொல்லாதே  வெளியே எங்கும்.

 

பின்னல் ஜடை அலங்காரமெல்லாம்  அழகாய் இருக்குதா

என்று பார்க்க நானும் உன்  பக்கம் வந்தேன்

பக்கத்தில் வந்து அதை தொட்டிடும்  முன்னே

வெட்கத்தில் நீயும்   தலை திரும்ப ஓடிவிட்டாய்

பின்னிய ஜடையும் காற்றில்  கயிறுபோல் 

என் முன்னால்  பரவ

கைய்யால்  அதை  நான் தெரியாமல் இழுத்தேன்

 

ராதே சொல்லாதே சொல்லாதே  வெளியே எங்கும்

கண்ணன் தான் இதை எல்லாம் செய்தான் என்று  

ராதே சொல்லாதே சொல்லாதே  வெளியே எங்கும்.

 

இதற்க்கெல்லாம் கோபம்,  கொள்ளாதே ராதே நீயும்

மன்னிப்பு கேட்டு உன்  கண்ணன் நான் நிற்க்கிறேன்

சொல்லு,  உனக்காக   எதையும் நான் செயகிறேன்

மௌனமாய் என் முன்னால்  நின்று விடாதே.

 

மாடு கன்றை அழைக்கும் இந்த

குழல்தான் உனக்கு வேண்டுமா

சொல்லு  நான் அதையும்  

உன் பாதத்தில் வைக்கிறேன். 

 

 ராதே,  சொல்லாதே சொல்லாதே  யாருடனும் தான்

இந்த கண்ணன் தான் இதை எல்லாம்  சொன்னான் என்று

ராதே சொல்லாதே சொல்லாதே  வெளியே எங்கும்.  

 

கோபிகள் அறிந்தால்  கோஷம் போடுவார்

உன்னையும்  தூண்டுவார் என்னையும் சீண்டுவார்

நான் செய்யாததை எல்லாம்  செய்தேன்   என்பார்

அவர்களையும்  நான்  சீண்டினேன் என்பார்

 

தேவையா  தேவையா  இதெல்லாம் ராதே

மன்னித்தேன்  என்று ஒரு வார்த்தை   நீ சொல்வாயா

 

சொல்லாதே சொல்லாதே  யாருடனும் தான்

இந்த கண்ணன் தான் இதை எல்லாம்  சொன்னான் என்று

ராதே சொல்லாதே சொல்லாதே  வெளியே எங்கும்.  

  

ராதே நான்  யார் உனக்கு

உன் பிரியா   காதலன் தானே

காதலர்களுக்குள் இதெல்லாம்  சகஜம் தானே

ஊடல் கூடல் எல்லாம்  நமக்குள்  தானே

இதை எல்லாம்  நீயும்  நன்கறிந்தவன் தானே

 

சொல்லாதே சொல்லாதே  யாருடனும் தான்

இந்த கண்ணன் தான் இதை எல்லாம்  சொன்னான் என்று

ராதே சொல்லாதே சொல்லாதே  வெளியே எங்கும்

 

சொல்லாதே சொல்லாதே  யாருடனும் தான்

ராதே சொல்லாதே சொல்லாதே  வெளியே எங்கும்

 

  

சுந்தரேச்வரன் Date: 13th May 2017.

 

Courtesy:  Lyric:  Na bOle na bOle

Singer  Lathaji  Film :  Aazaad

 

In the song ‘Na bOle na bOle Na bOle re’, the Gopis are forcing Radha to say no to all that Krishna asks for, not to reveal her face to him and all  and finally asking her to demand Krishna to surrender his flute at her feet.

 

Now I have changed the theme.  Of course Krishna admits that he has done all these pranks as act of love towards his lover Radha as these are quite common among lovers and nothing to feel about it. But he requests her not to tell these to her friends and says they will create a scene and confuse everything and everyone. He is even ready to surrender his flute to her.        

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s