காதல் ஓர் சிக்கல்

“காதல் ஓர் சிக்கல்

அதை  விணை மேற்கொள்ள

கை சுட்ட கதையுண்டு.

 

முதலில் நெஞ்சுக்குள் புகுந்து

பிறகு தேவை இல்லாமல் அது

மூளையில்  ஏற

உன்னிடமே சில நேரம்

உன்னுடனே போராட

போதாமல் வரும்பொழுது

கடவுளிடம் சில நேரம்

சில நேரம் உலகுடனும்

போராடுமே.

 

இத்தனை கெட்ட பெயர்

முயன்று பெற்றும்

இத்தனை வருடங்கள் ஆகியும் கூட

ஏதொருவன் சொல்லும்

வாய் மொழியில் உதிருதே

இதமாக  இனிப்பாக

மூன்றெழுத்தை க்கொண்ட

காதல் காதல் எனும்    மந்த்ரம்.

 

காதல் செய்யும் அந்த

தீய விளையாட்டுடனும்

காதலால் வருகின்ற

பந்தயங்களிலும்

இந்த இரு நெஞ்சினுள் வருகின்ற

சூதாட்ட ப்போட்டியில்

தோற்றவர் தானுண்டு

உலகில்  மிகையாய்”.

 

கீழ்வரும் சொல்லுகள்  பலதும்

இதுபோல் காதல் கவிதைகளில்

நாம் இங்கு  கேட்டதுண்டு

 

என் நெஞ்சுக்குள் வாழ்வது

நீ தான் என்றும்

என் மூச்சில் வருவதெல்லாம்

உன் மூச்சுதான் என்றும்

உன் பெயரைத்தான்

நான் என்றும் சொல்வதென்றும்

உன்னால்தான்  நான் இங்கு

உயிர் வாழ்கிறேன்  என்றும்

 

இன்னும் பல பல

ஜோடனைகள் இங்கு உண்டு

எழுத துவங்கினால்

காகிதங்கள் பற்றாது .

 

முதல் முதலில் காதல்

கொள்ளாத  நான் இங்கு

யோசித்ததுண்டு

என் மனைவியும் இங்கு

என் பக்கம்  இருக்க

என் மகளும்தான் இங்கு

என்னுடன் இருக்க

எதற்காகத்தான்  இதை எல்லாம்

எழுதுறேன்  என்று

 

நேரம் தான் என்னிடம்

நிறைந்ததுதான் இருக்க

நேரத்தை சிலவிட வழி என்ன

என்று நான் யோசித்தேன்

 

தலைப்புக்கு  ஒரு வார்த்தை

நெஞ்சில் பதிய

உலக சிரிப்பின்  தினமான இன்று

இதுவே  நமக்கின்று

சவைக்க கிடைத்தது.

 

சுந்தரேச்வரன்             By Sundareswaran   Date: 7th May 2017. 

 

WORLD LAUGHTER DAY                    Let us laugh at love.

 

Courtesy:  Lyric: 

‘Ishq wo balaa hai
Jisko chhua isne wo jalaa hai
Dil se hota hai shuru
Par 
kambakht sar pe chadthaa hai
Kabhi Khud se,

Kabhi Khudaa se

Kabhi zamaane se l

adaa hai
Itna hua badnaam

phir bhi Har zubaan pe adaa hai.

 

Ishq ki saazishein
Ishq ki baaziyaan
Haaraa Main khel ke Do dilon ka juaa’.

 

Lyricist: Rajat arora                                    Rest in Tamil is my imagination.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s