வசந்தத்தின் மேகங்கள்

வசந்தத்தின் மேகங்கள் பொழியட்டுமே

வசந்தமாம் மனதின்  எண்ணங்களை

 

வசந்தத்தில் மகிழும்  என் மனமும்

கண்ணன் வரவினை   அறிகின்றதே

 

திசை  எங்கும்  கேட்க்குதே  இடியின் சத்தம்

அழைப்பிதழ் விடுகிறதே

பட்டொளி வீசும்  மின்னலும்தான்

 

சிறு சிறு துளிபோல்  மழைநீர் பொழிந்திட

குளிர் தென்றல் வந்து  வீசிடவே

 

மீராவின்  கோமான் கிரிதரன்

வரும் இந்த நேரம்

மகிழ வைய்யுங்கள்  அவனை

மங்கள இசையுடன்தான்

 

வசந்தத்தின் மேகங்கள் பொழியட்டுமே

வசந்தமாம் மனதின்  எண்ணங்களை  

 

 

சுந்தரேச்வரன்

 

By Sundareswaran  Date: 22nd April 2017.

 

Meera Bhajan  “ Barse badariya  saawan ki  Saawan ki  man bhaavan ki” by  Lathaaji

 

बरसे बदरिया सावन की।
सावन की मन भावन की॥

सावन में उमंगयो मेरो मनवा।
झनक सुनी हरि आवन की॥

उमड़ घुमड़ चहुँ देस से आयो।
दामिनी धमके झर लावन की॥

नन्हे नन्हे बूंदन मेघा बरसे।
शीतल पवन सुहावन की॥

मीरा के प्रभु गिरिधर नगर।
आनंद मंगल गावन की॥

 

 

Please link with   https://www.youtube.com/watch?v=OTXzhGxvsoM  to listen this melody

Set to Raag  Shaam  Kalyaan  

   

நினைப்பாய்  மனதில் 

நினைப்பாய்  மனதில்  இறைவனைத்தான்

நிறைப்பாய்  அதில்  அவன் நினைவினைத்தான்

 

அவன்  நினைவில்  மகிழும்  உன் மனமும்

அவன் உன்னில்  இருப்பதாய் கண்டறியும்.

 

திசை எங்கும்  நிரம்பிய அவன் ரூபம்

சிறு குழந்தைபோல் நிற்க்கும்  அவன் ரூபம்

எங்கும் எதிலும்  அவன் ரூபம்

என்றதை அறிந்தால்  மனம் தேறும்.

 

நாம்  உண்ணும்  உணவும்  அவனால்த்தான்

நாம்  வாழும்  வாழ்வும்  அவனால்த்தான்

நம் உயிர் இருப்பதும்  அவனால்த்தான்

நம் உயிர் போய் சேருவதும் அவ்னில்த்தான்

 

இஜ்ஜென்மம் மனிதனாய்  பிறந்ததுவே

அவன் தந்த அருள் வரம் ஒன்றினால்த்தான்

இனி வரும்  ஜென்மங்கள்  ஒவ்வொன்றிலும்

அவன் அருள் பெறவே அவனை நினைப்பதில்த்தான்

 

அடியேனின்  கண்ணன்  காற்முகில்   வண்ணன்

கூடவே வருவான்  உயிர்த்தோழனாய்.

 

நினைப்பாய்  மனதில்  இறைவனைத்தான்

நிறைப்பாய்  அதில்  அவன் நினைவினைத்தான்

அவன்  நினைவில்  மகிழும்  உன் மனமும்

அவன் உன்னில்  இருப்பதாய் கண்டறியும்.

 

சுந்தரேச்வரன்    Date: 23rd April 2017     

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s