புதிரான கதையல்லவோ

புதிரான கதையல்லவோ, இந்த

பிறவி இறப்பின் கதை

பாராத தாள்களில் கேளாத மொழிகளில்

பொருள் விளங்காத நிலைமையில்

புரியாதபோல்  எழுதிவைத்தது.

 

பிறப்பின் துவக்கம் தான் எங்கோ

பிறகதின்  முடிவுதான் எங்கோ

பிறந்த எனக்கும் அது தெரியவில்லை

பெற்ற தாய்க்கும் தான் எங்கென்று

புரியவில்லையே

 

புதையில் எரியும் நெருப்பும்தான்

புகையை அதிகம் சேர்க்குது

பிரிந்த உடலும் இங்கென்ன

பிடி கை சாம்பலாய் மாறுது

 

புனித வேத மந்திரங்களும்

பாடும் தெய்வ வசனங்களும்

பிரிந்த உடலைத்தான் மீண்டும்

பரமன் பாதம் சேர்க்குதோ

 

புரியும் விடை போலது 

புரியாமல் என்றும் நிர்க்குது

புதிரை புரிந்து கொள்ளவே மனதில்

புனிதம் மட்டும் ஏனோ வளராமல் போனது

 

பரமன் கொடுத்ததெல்லாம்

பராமனுக்குள் போய் சேரும்

பராமனுக்கே அறியும் ஓர்

பரிபூரண தத்துவமிது

 

புதிரான கதையல்லவோ, இந்த

பிறவி இறப்பின் கதை

பாராத தாள்களில் கேளாத மொழிகளில்

பொருள் விளங்காத நிலைமையில்

புரியாதபோல்  எழுதிவைத்தது

 

சுந்தரேச்வரன்         By Sundareswaran  Date: 23rd Nov 2016.

 

While singing the old Hindi song ‘Ajeeb daasthaan hai,   Kahaan shuru kahaan kadam’ something flashed in my old brain about the myriad complexities of life and death and the role of the Almighty and thus happened this song.

Is it not true that we do not know absolutely anything about this? 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s