வானம் நீல வானம்

ஆண்கள் பெண்கள் கூட்டம்:

 ஆண்கள்:

 ஓஹ்!   ஆசையில்   கூவிடும்  பெண்ணே

உன்  காதலன்  வருகின்ற  நேரம்  இதோ

பெண்கள்:

 யாரவன்  யாரவன்  சொல்லாய்

யாரதில்  அழகு  என்பாய்

அது  நீயா   இல்லை  அவனா?

ஊஊ ………

 

வானம்   நீல வானம்  அதில் எங்கும்

வண்ணங்கள்  மாறி மாறி  பூச் சூட

பார்க்க   அதை பார்க்க  அதன் அழகில்

மனதினில்  போடுதே மேளதாளம்

ஆண்கள்:

ஹூ…..

குயிலே நீ ….    ஒன்று கூவாயோ

மயிலே நீ ….    இறகை விரிப்பாயோ

ஹூ………………………………………….

 

பெண் :

குயிலே ஓஹ்  குயிலே  வந்ததிங்கே இள  மாலை

இரவெல்லாம் வந்தும் இங்கு தூக்கம் இல்லையே

நீ பாடும் குழல் ஓசையில் 

மனம் அதனின் சிறகை விரிக்க

கனவுலகில் பறந்து சென்றதே.

கூட்டம் :

விழி விரித்து …..….   என்னை பார்ப்பாயா     

மனதில்த்தான் ….….  நீயும் நினைப்பாயா 

பறக்கவிடு…..…    என்னை தடையாதே

தடையாதே ….…..   என்னை தடையாதே

ஹோ…………………………….

 

பெண்கள் கூட்டம்:

வருபவன்  உன் துணை அவன்    வராமல் போனால்

தனிமையில்   மனம் உனது   தவிக்காதோ   சொல் ….

 

பெண் :

கண்ணோடு   கண் சொல்ல  விழி மூடத்தான்

அவன்   இல்லாமல்  வருமோ  தூக்கமும்  தான்

என் மனதும் தான் ஏனோ   உணர்வற்றதோ

ஹோ

என் ஆசைகள்க் கேனோ  இந்த போதை

உணர்வு வந்ததோ

 

கூட்டம்:

நிலா இல்லா   பூமிக்கு   ஒளியில்லையே

நிலாதானே    வானுக்கு  அழகூட்டுது

பட்டு ச்சேலைபோல்  மேகங்கள்   அதை மூடுது

கதிரவன்   ஒளிபட்டு அதன் மீது

வண்ணம் பூசுது

 

பெண்:

நிலா  வானம் எங்கும்  உலா போகுமே

மேகங்கள்  வானை மெல்ல  தழுவி செல்லுமே

நான் பார்க்கின்ற  இடமெல்லாம்  வெறிச்சோடுது

ஹோ

நீ வருவாய்   என்றே  நான்    எதிர்பார்க்கிறேன்

நீ வந்து சேரையில்த்தான் என்    மனம் நிறையுமே

 

ஹோ…………………………..

கூட்டம்:

ஓஹ்!   ஆசையில்   கூவிடும்  பெண்ணே

உன்  காதலன்  வருகின்ற  நேரம்  இதோ

யாரவன்  யாரவன்  சொல்லாய்

யாரதில்  அழகு  என்பாய்

அது  நீயா   இல்லை  அவனா?

ஊஊ ………

வானம்   நீல வானம்  அதில் எங்கும்

வண்ணங்கள்  மாறி மாறி  பூச் சூட

பார்க்க   அதை பார்க்க  அதன் அழகில்

மனதினில்  போடுதே மேளதாளம்

ஹூ…..

குயிலே நீ ….    ஒன்று கூவாயோ

மயிலே நீ ….    இறகை விரிப்பாயோ

ஹூ………………………………………….

 

பெண் :

குயிலே ஓஹ்  குயிலே  வந்ததிங்கே இள  மாலை

இரவெல்லாம் வந்தும் இங்கு தூக்கம் இல்லையே

நீ பாடும் குழல் ஓசையில் 

மனம் அதனின் சிறகை விரிக்க

கனவுலகில் பறந்து சென்றதே..

கூட்டம் :

விழி விரித்து …..….   என்னை பார்ப்பாயா     

மனதில்த்தான் ….….  நீயும் நினைப்பாயா   

பறக்கவிடு…..…    என்னை தடையாதே

தடையாதே ….…..   என்னை தடையாதே

ஹோ…………………………….

  

சுந்தரேச்வரன்  Date:  2nd April 2017.

 

Courtesy:  Malayalam song and Hindi Song

Thanks for the inspiration. Here I have inclined more towards the Hindi song.

 

 

Please link with https://www.youtube.com/watch?v=BTP4-x9I7iQ

And https://www.youtube.com/watch?v=TY4lL68vqio   Of Vani Jayaram and KJYesudas

 

Please link with https://www.youtube.com/watch?v=ZeRWbp6jUkw to listen to Ashaji’s unreleased song  with Music by Salil Da

“ Moyna ji Moyna  oh aayi re  reina  ki naina nahi chain na”   

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s