கண்மை …கண்மை ….

 

கண்மைகண்மை ….

காதல்கொள்ளும்  கண்களின்

இமையோரம் தேய்த்துக்கொள்ளும்

கறுப்பு நிற  கண்மை  கண்மை

 

இனிமை  இனிமை

இனிமையுடன் காதலனை தன்  விழிக்குள்

பார்க்கவைக்கும்  திறமை

இதன் தன்மை  

 

கண்மைகண்மை ….

காதல்கொள்ளும்  கண்களின்

இமையோரம் தேய்த்துக்கொள்ளும்

கறுப்பு நிற  கண்மை  கண்மை

 

கன்னி இவள் திருமணத்தில்

இவள் கண்களுக்கு  அழகூட்டும்

காளை   அவன் பார்க்கையிலே

அவன் மனதில் அன்பூட்டும்.

 

என் கண் இவள் அழகுக்கு

கண் படாமல் இருப்பதற்க்கு

கன்னத்தில்  நானும் தான்

இந்த கண்மையால் தொட்டு வைத்தேன்   

 

கண்மைகண்மை ….

காதல்கொள்ளும்  கண்களின்

இமையோரம் தேய்த்துக்கொள்ளும்

கறுப்பு நிற  கண்மை  கண்மை.

 

அவள் நிறமோ…….

நிறமது காலை  நேர

மஞ்சள் வெயிலின் பொன் நிறமே.

கைகளில் வரைந்துள்ள

மருதாணிக் கோலங்கள்

அழகு கொஞ்சும்

அந்தி வான சிவப்பின் 

ஒளியூட்டும் நிறமே.

 

எங்கெல்லாம் பார்த்தாலும்

திருமண மேடை எல்லாம்

வான வில்லின் அழகூட்டும்

ஏழு வண்ண க்கோலமே.

 

அவனை      நீ  பார்க்க

உன் மனம்  என்ன சொல்லுமோ

அவன் விரல் பட்டதும்

உன்  நெஞ்சம் என்ன துடிக்குமோ

அழகான குமரன் அவன்

தேர் இறங்கி வரும் நேரம்

அலங்கார தேவதே

உன்னை  அவன் பார்க்கும் நேரம்

விழியோரம் தேய்த்த  கண்மை

உன் காதலின் செய்தி சொல்லும்.

 

கண்மைகண்மை ….

காதல்கொள்ளும்  கண்களின்

இமையோரம் தேய்த்துக்கொள்ளும்

கறுப்பு நிற  கண்மை  கண்மை.

 

மை  தேய்த்த விழியால்

விழி நிறைய  அவன் பார்க்க

மைக்கண்ணால்  நீயும்

ஓர  விழியால் பார்க்க

இருவரும் பார்த்துக்கொள்ள

இமை  மூடா நொடிகள் நகர

தனை  மறந்த  நிலை வருத்தும்

கண்மை  இந்த கண்மை

அதுவே இதன் தன்மை.

 

கண்மைகண்மை ….

காதல்கொள்ளும்  கண்களின்

இமையோரம் தேய்த்துக்கொள்ளும்

கறுப்பு நிற  கண்மை  கண்மை

இனிமை  இனிமை

இனிமையுடன் காதலனை தன்  விழிக்குள்

பார்க்கவைக்கும்  திறமை

இதன் தன்மை தன்மை.

  

 

சுந்தரேச்வரன்                  By Sundareswaran  Date:  19th March 2017.

 

Inspiration from Kaithapram Sir’s creation ‘SuRumaa SuRumaa”

Courtesy:  Lyric: “SuRumaa SuRumaa’  Singer: Sakthisri Gopalan

Film: Camel Safari      Music:  Deepaankuran    Set to raag  Brindavana Saaranga

Dear Kaithapram Sir, In fact I have picked few words from here and there from your lyric. This song is set for a group and everyone has few lines to sing.  Like an ‘Oppana’ in marriages.

Like teasing and praising the bride and the groom.

Please link with https://www.youtube.com/watch?v=n-iN7-ciMzE to listen to the original Malayalam song and tune.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s