வெறி

எதற்கக்குத்தான் மனிதனுக்கு  இந்த வெறியோ?

 

மலைகளை உடைத்து தரைமட்ட மாக்க  வெறி

காட்டு விலங்குகளை அழிக்க வெறி தாவரங்களை அழிக்க வெறி

ஆற்றிலிருந்து  மணலை திருட வெறி 

பெண்களை கெடுக்க  வெறி பெண் குழந்தைகளை அழிக்க ஹிம்சை படுத்த வெறி 

கொலை செய்ய வெறி  சொத்துக்கள் சேர்க்க வெறி திருடுவதற்கக்கு  வெறி

எவனோ எதற்க்கோ ஏவிவிட்டதை  தனக்கு நாலு காசு கிடைக்க ஏங்கி  அது தனக்கும் கிடைக்காமல் தன்னையும் அழித்துக்கொண்டு ஜாதி மதங்களுக்குள்  தன்னையே அழித்துக்கொள்ள வெறி

 

இத்தகைய வெறியினால் என்ன சாதிக்க போகிறான் என்று மட்டும் தெரியவில்லை.

கலிகாலம் என்பது இது தானா? ஜனப்பெருக்கம்தான் இதற்க்கு மூல காரணம். 

 

தன்  ஐம்புலன்களையும் அடக்கியாளும் காலம் போய்   அதை அவிழ்த்துவிட்டு அது எப்படியெல்லாம் செயல்படுகிறது, அதில் தான் காணும் திறமைதான் என்ன அல்ப இன்பம்தான் என்ன என்று தானே வேடிக்கை பார்க்கும்  காலமாக மாறிவிட்டது. இது அழிவை நோக்கி போகிறது என்று  தன் கள்போதை மூளையில் இன்னும்  அவனுக்கு நன்கு படவில்லை. தன் குடும்பத்துக்கு தீங்கு வந்தால் மட்டும் அவனுக்கு தாங்காது. சினிமா வில்லன் போல். ஆனால் பிறரை துன்புறுத்துவதில் அவன் தேடுகிறான் சாதனை அதற்க்கு  ஜால்றா போடுகிறார்கள் அவனுடன் சேர்ந்தவர்கள். உண்மை  நீதி மனசாச்சியை க்கூட குழிதோண்டி புதைக்க தைய்யாராக உள்ளனர்.

 

இந்த வெறி எண்ணங்களுடன் செயல் படுவதனால்த்தான்  நம் பூமியின் சுற்றுசுசூழலும் மாசுபட்டு நமக்கே அது வியாதிகளை பொழிகின்றது. இந்த ஐம்புலன்களும் நாம் எப்படி அவிழ்த்து விட்டோமோ அதுபோலத்தான்   பஞ்ச பூதங்களும்  நம்மை தாக்க தாண்டவமாடுகிறது.  காற்று மாசுபடுகிறது, நீர் மாசுபடுகிறது.  நீரோட்டம்  எங்கோ பூமியின் ஆழத்துக்கு சென்று விட்டது  அதை எடுக்க பாடுபடுகிறார்கள். இன்னும்  ஆழம் சென்றால் அதுகூட கிடைக்காமல் போய்விடும். பிறகு  உப்பு நீர்தான் கதி. அதையும் நம் வெறியால் கலக்கி குடித்துவிட்டு பிறகு என்ன செய்வதென்று முழிக்கவேண்டிய சூழ்நிலை கட்டாயம். வரும். வயல்க்காடுகள் அழியும் ஒரு மணி அரிசி கோதம்புக்கு க்கூட  அடித்துக்கொள்ளும்  நாள் வரும்.  நம்முடைய இத்தகைய தெருக்கூத்தின் ஆதிக்கம்  அதிகமாக  அது வெகு பக்கத்தில் வரும்.

 

இயற்க்கையாகவே தாவரங்களும் விலங்குகளும் அழிவது தவிர்க்க முடியாததொன்று. காரணம் அதுகள் உயிரோடிருந்தால் மற்ற விலங்குகளுக்கு ஆபத்து. பரிணாமத்தால் ஏற்டுப்படும் இந்த மாற்றம் நடந்துகொண்டே இருக்கும். ஆனால் அதை வேணுமென்றே அழிப்பது மனித இனத்துக்கே ஆபத்து. காரணம் விலங்கும் தாவரமும் இல்லையேல் மனிதனே இல்லை என்றாகிவிடும்.

 

சொத்து சேர்த்தவர்களையும்   பதவியில் இருந்து விளையாடுபவர்களையும்  நிம்மதியாக இருக்க விடாது. தன்னை காப்பாற்றுவார்கள் என்று நினைத்து சோறுபோட்டு வளர்த்த கூட்டமே தானே தொங்கவிட்ட கூர்வாள் போல் தலைக்கு மீது என்றும் நிற்கும், எத்தருணவும் அது வீழ்ந்திடும்  என்ற வண்ணம்

 

கலிங்க நாட்டை அடக்கியாள நினைத்த  மாபெரும் அசோக சக்கிரவர்த்திக்கே என்ன நடந்தது?  வாழ்க்கை அவ்வளவு தான்.   ஆறடி மண் தான்.  இல்லையேல் ஒரு பிடி சாம்பலில் அடங்கிவிடும்.

 

இந்த வெறித்தன்மை மனதில் கொள்ளாமல் வாழ முடியாதா ? எதனால் இந்த மாற்றம் நம்மில் நாமே கொண்டுவர தயாராக இல்லாமல் போனது?

 

By  Sundareswaran  Date: 8th March 2017.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s