என் பின்னால் பின்னால்

என் பின்னால் பின்னால் வரும்

என் ஆசை மச்சானே

நீ  என் பின்னால்

எதற்க்குத்தான்  தொடர்ந்து

இங்கே வருகிறாயோ

 

இங்கோ எங்கோ

தொலைந்த என் மூக்குத்தியைத்தான்

என் பின்னால் பின்னால் வந்து நீயும்

அதை தேடுகிறாயோ

 

சும்மா சும்மா வந்து உன்

கை  படவே நீ நினைக்கிறாயோ

 

என் பின்னால் பின்னால் வரும்

என் ஆசை மச்சானே

நீ  என் பின்னால்

எதற்க்குத்தான்  தொடர்ந்து

இங்கே வருகிறாயோ

 

சும்மா சும்மா வந்து உன்

கை  படவே நீ நினைக்கிறாயோ

 

உன் பாத சுவடை  பார்த்து தானே

நானும் இங்கு  வந்தேன்

உன் மூக்குத்தியை  தேடத்தானே

நானும் இங்கு வந்தேன்

நானும் இங்கு வந்தேன்

 

உன் மூக்குத்தியை தேடத் தேட

நானும் இங்கு வந்து

என் இதையத்தை  முழுதாய் 

துலைத்துவிட்டேனே

உன்னில் துலைத்துவிட்டேனே

 

இதற்க்கெல்லாம் காரணம் உன்

மூக்குத்தி யாலத்தான்

இந்த இளைஞ்சனின் இதையத்தை

திருடித்தான் விட்டதே

திருடித்தான் விட்டதே

 

முதலில் இது வந்தது உன்

பார்வையினால்த்தான்

அதை மீறி  வந்தது உன் இடை

நெளிவசைவால்தான்

இடை நெளிவசைவால்தான்  

 

பட்டாப்பகல் வேளையில்  என்

இதையத்தை கவர்ந்தாய்

பட்டும் படா வந்து என் அருகில்

தொட்டு ஏனோ  அமர்ந்தாய்

தொட்டு ஏனோ  அமர்ந்தாய்

 

வெட்ட வெளி வெய்யிலிலெ

வந்ததனால் எனக்கு

உன்னை தொட்ட போது கொஞ்சம்

குளிர்ந்தது  மனசு 

குளிர்ந்தது  மனசு

 

நீ துலைத்த தென்னவோ  ஓர்

மூக்குத்தியை த்தான்

நானோ இங்கே பார்

என் வாழ்க்கையை துலைத்தேன்

உன்னில் என் வாழ்க்கையை துலைத்தேன்

 

வேடனே தானாய் வந்து

வலையினில் மாட்டிக்கொண்டான்

என் காதலியே பாரு நானும்

உன்னில் வந்து மாட்டிக்கொண்டேன்

உன்னில் வந்து மாட்டிக்கொண்டேன்

  

என்னிடமே  வந்து 

என்னையே குழப்பிவிட்டாய்

என் பக்கம் நெருங்கி என்னை

என்னென்னமோ செய்கின்றாய்

என்னை என்னென்னமோ செய்கின்றாய்  

 

என்னையே முழுதுமாய் உன்

பக்கம் வந்து சேர

என்னை நீயும் இழுத்து உன்

சேலைக்குள் முடிந்தாய்

உன் சேலைக்குள் முடிந்தாய்  

 

நானும் தான் இங்கே

மேலும் கீழும் பார்க்கிறேன்

எப்படித்தான்  நீயும் இதை

எளிதாக செய்தாயோ

வெகு, எளிதாக செய்தாயோ

 

நானும் இங்கு ஓர் வெண்

முத்தாக மாறினேன்

உன் மூக்குத்திக்கு தக்கதான

வைரக்கல்லாய் மாறினேன்

வைரக்கல்லாய் மாறினேன்

 

என் ஆசைக்கெல்லாம் நீ ஏன்

முகத்திரை போடுகிறாய்

உன் சேலையை  நீயும் கொஞ்சம்

விலக்கிட  மாட்டாயோ

விலக்கிட  மாட்டாயோ

 

என் கண்ணுக்குள் உன்னை நீ

இப்படித்தான் பார்க்காதே

நம் இடைவெளி மட்டும் இன்னும்

குறைத்திட பார்க்காதே 

குறைத்திட பார்க்காதே  

 

நான் இதற்க்காகத்தான்

உன்னை இங்கே வர சொன்னேன்  

ஆனால் நீ மட்டும் ஏன்  இன்னும்

வாராமல்  நிற்க்கிறாய்

வாராமல் நிற்க்கிறாய்

 

ஒருபோதும் நான் உன்னை

விலகிட மாட்டேன்

நம் இருவரின் இதயமும்

சேர்ந்தது இங்கே

ஒன்று சேர்ந்தது இங்கே

 

ஆடை அணிகலனோடு

நீயும் இங்கே வருவாய்

தாலிக்கயிறை  நானும் இங்கே

உனக்காக வைக்கிறேன்

உனக்காக வைக்கிறேன்

 

இரவில் நீயும் கொஞ்சம்

வாசல் கதவோரம் வருவாய்

தேரில் உன்னை ஏற்றி நானும்

வான் வெளியில் செல்கிறேன்

வான் வெளியில் செல்கிறேன்

 

சுந்தரேச்வரன்                 By Sundareswaran  Date: 6th March 2017. 

 

Courtesy:  Punjabi folk song

“Laung Gawacha”     

 

“Pishe pishe aunda meri chaal venda aayin
Chire waleya vekhda aayin ve
Mera laung gawacha”

Sung by Neha Bhasin                 This song can be sung as duet.

Thanks for the inspiration to translate in Tamil with changes and few additions in lines.

 

Please link with https://lyricsraag.com/laung-gawacha-neha-bhasin/

 

Please listen to Tamil song

“Chittu chittu kuruvikku” from film ULLathai ALLithaa

Sung by Mano and Sujatha

Lyricist: Pazhani Bharathi     Music: Sirpy  Melodious music

Please link with https://www.youtube.com/watch?v=vX78TbBLGYc to watch this song.

Beautifully choreographed with scenic surroundings.

 

Please read my song written very long back:  A lullaby.

 

இந்தச்சிட்டு  குருவிக்கந்த  நிலா தொட்டில்  எதற்க்கு

 

இந்தச்சிட்டு  குருவிக்கந்த  நிலா தொட்டில்  எதற்க்கு

இங்கு பட்டுத்துணியில்  தொங்கவிட்ட தூளி இருக்க

அன்பு உள்ளம் கொண்ட தாய் தந்தை  இருக்க

அள்ளித்தரும் தெய்வம் இங்கு  துணை நமக்கு   ஆரீராரொ  ஆரீராரொ

 

வெட்டவெளி வானத்திலே  கட்டித்தங்கம் இருக்கு

தட்டி த்தட்டி  அதை கொஞ்சம் வெட்டி எடுத்திடவா

வெட்டி எடுத்திடவா

 

தங்கக்கட்டி  தங்கக்காசு எல்லாம் நமக்கெதற்க்கு

தங்கச்சிற்ப்பம் போன்ற நம் சிட்டு  நமக்கிருக்க

நம்  சிட்டு  நமக்கிருக்க  

 

வள்ளுவனார்  ஆத்துச்சுடி நமக்கது  எதற்க்கு

கொஞ்சி கொஞ்சிப்பேசும் இந்த மழலை மொழி இருக்க

மழலை மொழி இருக்க  

 

பொன்னு  வெள்ளி வைரம் எல்லாம் நமக்கிங்கு  எதற்க்கு

இதன் புன்னகைக்கு  ஈடுசெய்ய பொருள் என்ன இருக்கு

பொருள் என்ன இருக்கு  

 

வானம் பூமி யாவும்  எல்லாம் சொந்தம் இங்கு  நமக்கு

வானத்திலே  வீடுகட்ட ஆசையில்லை நமக்கு

ஆசையில்லை நமக்கு  

 

ஒன்றாய் சேர்ந்து வாழும் உள்ளம் நமக்கிங்கு  இருக்க

என்றும் இங்கு சொர்க்கம் என்ற நிறை அதில்  இருக்கு

நிறை அதில்  இருக்கு

 

குறை ஒன்றும் இல்லை என்ற  மனம் அது போதுமே

குரல் கொடுக்கும் நேரம் அந்த தெய்வம்  முன்னில் தோன்றுமே

அந்த தெய்வம்  முன்னில் தோன்றுமே.

 

இந்தச்சிட்டு  குருவிக்கந்த  நிலா தொட்டில்  எதற்க்கு

இங்கு பட்டுத்துணியில்  தொங்கவிட்ட தூளி இருக்க

அன்பு உள்ளம் கொண்ட தாய் தந்தை  இருக்க

அள்ளித்தரும் தெய்வம் இங்கு  துணை நமக்கு   ஆரீராரொ  ஆரீராரொ

ஆரீராரொ  ஆரீராரொ

 

சுந்தரேச்வரன்   date: 14th  Oct 2015   

 

On, Laung Gawacha, the woman expresses how she’s lost her laung gawacha – a traditional ornament worn by women on their nose. The lyrics to this iconic folk song are from the point of view of a farmer’s wife who had visited him in the fields to bring him lunch but lost her ornament on her way. 

She asks her husband who she refers as cheere waaleya (man with a turban) to keep an eye for her nose ring when he follows the same route she took, back home.

 

உனக்காக உணவுடன்

வரும் பொழுது,

என் மச்சான்,

உனக்காக உணவுடன்

வரும் பொழுது

என்  மூக்குத்தயை நானும்

எங்கோ துலைத்து விட்டேன்

தேடி த்தேடி பார்க்கையில்

நானும் ரொம்பத்தான்  

இனி தேட முடியாமல்

களைத்து விட்டேன்.

 

தேடி நானும் பார்த்துவிட்டேன்

தென் படலை

இன்னும் தேட எனக்கும்

பொறுமை இல்லை

 

பொன்னால் செய்த  பொருள்  அதனை 

நான்     துலைத்துவிட்டேன்

எங்கோ துலைத்து விட்டேன்

ஹாய் துலைத்துவிட்டேன்   

 

பொழுது சாய  நீயும் 

வீடு திரும்பயிலே

என் மச்சான்

பொழுது சாய  நீயும் 

வீடு திரும்பயிலே

நான் வந்த வழியாய்  நீயும்

கொஞ்சம் வருவாய்

நீயும் கொஞ்சம் வருவாய்  

 

தவறாமல் இரு விழி பார்த்தபடி

என் மூக்குத்தியைத்தான்

நீயும் தேடி தருவாய்.

நீயும் தேடி தருவாய்.

 

பொன்னால் செய்த  பொருள்  அதனை 

நான்     துலைத்துவிட்டேன்

எங்கோ துலைத்து விட்டேன்

ஹாய் துலைத்துவிட்டேன்   

 

 

உனக்காக உணவுடன்

வரும் பொழுது,

என் மச்சான்,

என்  மூக்குத்தயை நானும்

எங்கோ துலைத்து விட்டேன்

தேடி த்தேடி பார்க்கையில்

நானும் ரொம்பத்தான்  

இனி தேட முடியாமல்

களைத்து விட்டேன்.

 

By Sndareswan  Date: 6th March 2017. 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s