நிலாவுடன் நான் பேச

நிலாவுடன் நான் பேச

நீ விரும்பினாய்

ஆனால் நிலா மண்ணில் வந்து பார்க்க

நான் விரும்பினேன்

சின்ன பெண்ணாய் என்றும் இருக்க

நான் விரும்பினேன்

ஆனால் பட்டு சேலை கட்டிப்பார்க்க

நீ விரும்பினாய்

நீ விரும்பினாய்.

 

நான் ஜன்னல் ஓரம் வந்து நிற்க்க

நீ விரும்பினாய்

உன்னை கண நேரம் பார்வையிட

நான் விரும்பினேன்

நேற்று தெருவோரம் நின்று கொண்டு

என்ன பேசினாய்

அதனால் இரவெல்லாம் தூக்கம் கேட்டு

நானும் ஏங்கினேன்

நானும் ஏங்கினேன்.

 

 

நீ கூறப் புடவை  கட்டி நிர்ப்பதாய்

கனவில் கண்டேன்

நான் தாலிக்கயிறை  கட்டுவதுபோல்

எண்ணம் கொண்டேன்

என் அண்ணன்  தம்பி என்னை தோளில் ஏற்றி

நடக்க க்கண்டேன்

உள்ளம் மகிழ என்னை மறந்து என்னிடமே

பெருமை கொண்டேன்

பெருமை கொண்டேன்  

 

நான் என் மன்னியிடம் கூட இதற்க்கு

நடுவராக பேச சொல்லலை

என் தாய் தந்தையர் ஒப்புக்கொண்டதால்

எதையும் பார்க்கலை

வேறு எதையும் பார்க்கலை.

 

 

என் இதையவும் தான் பொறுமையுடன்

நிற்க்க  விரும்பலை

என் கண்களும்தான் உன்னை பார்க்க ஏங்கி

இமைகள் மூடலை

இமைகள் மூடலை

  

 

என் மனம் என்னென்னமோ அதற்க்குள்ளே

பேச நினைக்க

என் உதடுமட்டும் உன் பெயரை

சொல்ல நினைக்க

நீ வருவாய்  என  எதிர்பார்த்து  

நானும் நின்றேன்

நீ வரக்காணும் என்றதும் நான்

ஏங்கித்தவிச்சேன்

ஏங்கித்தவிச்சேன்.

  

 

உனக்காக காத்திருக்கும்

என் இதயத்தை மட்டும்

ஒருபொழுதும் அதை நீ

கிள்ளி விடாதே

கிள்ளி விடாதே

 

உன் அழகு முகத்தை என் கண்ணுக்குள்

வரைந்து விட்டேன்

அதை என் இதயத்தில் பத்திரமாய்

ஒளித்து விட்டேன்

நேற்று தெருவோரம் நீ சொன்னதை

மறந்துவிடாதே

அந்தரத்தில் என்னை நீயும் தொங்க விடாதே

 

 

நேற்று தெருவோரம் பேசியதை

மறந்து விடுவோம்

இன்று வெளிப்படையாய் பேசியே

ஒரு முடிவுக்கு வருவோம்

 

இனி முதல் என்னவளே என்னவளே என்று

நானும் சொல்லவா

நீ என்னுடன்தான் இருப்பதாக

நானும் எண்ணவா

மன்னவனே மன்னவனே என்று  உன்னை

நானும் அழைக்கவா

உன் மனைவியாகப் போவதாக

நான் உரைக்கவா

நான் உரைக்கவா

 

இந்த ராமனுக்கும் தேவை ஓர் சீதை தானே

அதற்க்கு பொருத்தமாய் இருப்பவளும் நீயே தானே

நீயே தானே

 

அந்த நிலா கூட இங்கே ஓர்

வெறும் பொருள் தானே

அது காயட்டும் காயட்டும்

தனிமையில் இங்கே

தனிமையில் இங்கே   

 

 

 

சுந்தரேச்வரன்

 

By Sundareswaran   Date: 2nd March 2017.

 

Courtesy:     Mutiyaar Lyric   (Punjabi Love songs)

“Taareyan de naal baatan paun laatii ve

Saadgi pasand tu jachaun laati ve”

 

Thanks for the inspiration to write in Tamil with few changes in words and adding lines to suit the language.

Listen to Annamaacharya Keerthana “Pidikita thalambraala pendli koothuru”, very nicely sung by Nitya Santhoshini.

The tune for the above Tamil song is also akin to that.

      

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s