என் அழகோவியமே

என் அழகோவியமே

உனை கண்டால் போதுமே

முழு நிலா கூட இங்கே

பொறாமை தான் கொள்ளுமே

 

உன் கண்ணோடு

என் கண்கள் சேர்ந்த

முதல் சந்திப்பின் போதே

என்னை அறியாமல் நானும்

என்னுள்ளில் மகிழ்ந்தேன்

 

மின்னல் பட்டது போல்

நானும்

முழுதாகவே உருக

நீயும்

களிப்பூட்டும் வண்ணம்

என்னில்  நெருப்பேற்றினாய்

 

முகத் திரை  இல்லாமல் வந்து

என் முன்னால் நீ  

நின்ற நேரம்

உன் அழகான மேனி வந்து

என் வாலிப உடலோடு  மோத

என்னை அறியாமல் நானும்

என்னுள்ளில் மகிழ்ந்தேன்

 

உன் அழகான கண்கள் என்

கண்ணோடு மோதும்

போராட்டம் கண்டு நானும்

என்னுள்ளில் மகிழ்ந்தேன்

 

ஒவ்வொரு பார்வையிலும்

அவள் கண்களில் நானும்

பெண்மைக் குரியதோர்

பணிவை நான் கண்டேன்

 

ஒவ்வொரு முறையும்

நான் அவளோடு பேச

அவள் கன்னங்களில்,

விரியும் வெட்கத்தின்

நிழல்கொண்ட

செவண்ணம்  நான் கண்டேன்

 

என் ஒவ்வொரு கேள்விக்கும்

பதில் கூற இயலாமல்

அவள் தடுமாறி,

தலை குனியும் நிலை காண

என்னுள்ளில்  மகிழ்ந்தேன்

 

 

சுந்தரேச்வரன்             By Sundareswaran Date:  13th Feb 2017.

 

Courtesy:  Lyric:  “Mere rashk- e- qamar tu ne pehli nazar,

                              Jab nazar se milaaii maza aa gaya”

Lyricist: Pakistan Poet Fana Buland Shehri

Singer: Junaid Asgarji

Music: Raakesh Roshan

Fantastic rendition by Junaid Asgarji

 

A shortened version of the original qawwaali sung by Ustaad Fateh Ali Khaan

 

Please link with   https://www.youtube.com/watch?v=2nBJ_FFQuLI  to see the beautiful picturaization of Hrithik Roshan and Sonam Kapoor.

Thanks for the inspiration to translate in Tamil with a little changes here and there.

 

Can we think in the following lines as well?

 

Un vizhiyOramaai

Ennai    nee  paarthathum

Naan   athai   mozhi peyarkkavE

Thooya  thamizh thEdinEn

 

Un  manathil vantha 

Pala   eNNangaLai     naanum

En manathuKKul

Ilakkiyamaai ezhutha muyandrEn.

 

Naan Kamban kaviraayanO

Kavi kaalaidaasanO alla

Ilakkanam vaguthunnai

Kavithaiyaai  punaiya.

 

Naanum than ingOr

Sarasari nadamaadum iLainjan

UNarchigaL  ThaLarchigaL

enakkum than undu.

Neeyum than ingOr

ILa mEni uruvathil  mangai

Viruppam unakkirunthaal

Ennidam nee kooRaai

Un kaathal enakke nee

Tharuvaai endraal.

 

Naamiruvar sErnthingE

Nadathidalaam oru yaagam

Namakkaaga naame

AmaithiduvOm raajaangam.

 

இப்படிக்கூட சிந்திக்கலாமா?

 

உன் விழியோரமாய்

என்னை நீ பார்த்ததும்

நான் அதை மொழி பெயர்க்கவே

தூயத் தமிழ் தேடினேன்

 

உன் மனதில் வந்த

பல எண்ணங்களை நானும்

என் மனதுக்குள்

இலக்கியமாய் எழுத முயன்றேன்

 

நான் கம்பன் கவிராயனோ

கவி காளிதாசனோ அல்ல

இலக்கணம் வகுத்து உன்னை

கவிதைபோல் புனைய

 

நானும்தான் இங்கு ஓர்

சராசரி நடமாடும் இளைஞ்சன்

உணர்ச்சிகள் தளர்ச்சிகள்

எனக்கும்தான் உண்டு

நீயும்தான் இங்கு ஓர்

இளமேனி உருவத்தில் மங்கை

விருப்பம் உனக்கிருந்தால்

என்னிடம் நீ கூறாய்

உன் காதல் எனக்கே   நீ

தருவாய் என்றால்

 

நாம் இருவர் சேர்ந்து இங்கே

நடத்திடலாம் ஒரு யாகம் 

நமக்காக நாமே

அமைத்திடுவோம் ராஜாங்கம்.

 

 சுந்தரேச்வரன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s