அருகே என் அருகே

அருகே என் அருகே யாரோ ஒருவள்

நெஞ்சில்  எனதுள்நெஞ்சில்  மெதுவாகவே

விழிகள் கொஞ்ச

இனிமை பொங்கும் ராகங்களை

நான் என்றென்றும் என்றென்றும்

நினைப்பதற்க்காய்

என்னில்  ஒவ்வொன்றாய் ஒவ்வொன்றாய்

ஸ்ருதி மீட்டினாள்

ஹூம் ஹூம் ஹூம் ஹூம்….

 

என் கனவில்    அவள் நினைவில்

அவள் அறியாமலே

என் மனதில் வந்து விரியும்

அதி காலை மலரில்  

பனி தூவும் தென்றலும்

என் மீது வீச

புது மழையில் வரும் குளிரில்

நானும்   சேர்ந்து நனைந்தேன்

ஹூம் ஹூம் ஹூம் ஹூம்….

  

அந்த  மழையில்    புது மழையில்

அவள் சூடும்    மலரின் மௌனவும்

மெதுவாய்    மிக மெதுவாய்

இதழ் விரியும்   இரவின் மோகவும்

வழி தெரியாமலும்   விழி மூடாமலும்

தேடுகின்றதோ

என் மனதில் அவள் இருக்கும்

இடம் தேடி அலைகின்றதோ?

ஹூம் ஹூம் ஹூம் ஹூம்….

  

இரவில்    நள்ளிரவில்

ஒரு  பொன்   கனவாய்

அவள் என் அருகே  மிக அருகே

வந்த நேரம்

நிஜமென்று எண்ணி நான் 

கண் விழிக்கவே

நேரில்    நான் அவளை   

பார்த்த எண்ணத்தில்

இடம் பெயரும்   பறவைகள்போல்

ஒன்றாய் சேர்ந்து

வெளி வானில்  பறக்கின்றபோல் நினைத்தேன்.

ஹூம் ஹூம் ஹூம் ஹூம்….

  

தனிமையில் வாழும்

ஓர் பறவைபோல் நான்

தேடுகிறேன் இந்த   இரவிலும்தான்

அவள் அருகில் போய்சேர மோகத்துடன்.

 

ஹூம் ஹூம் ஹூம் ஹூம் ….

 

 

 

சுந்தரேச்வரன்  Date: 8th Feb 2017.

 

An inspiration from songs PathiyE pathiyE of Girish Puthanchery from film Nariman and Poove sempoove of Vaali Sir from film Sollathudikkuthu manassu and Arikil PathiyE from film Orumurai vanthu paarthaayaa Malayalam.

 

Courtesy:

Song – Arikil Pathiye
Film – Oru Murai Vanthu Paarthaya  Malayalam
Lyrics – Abhilash Sreedharan  

Few words and lines are taken from  this song.

This song can be set to Raag Keeravaani.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s