உள்ளத்தில் ஆசைகள் சுமந்து

ஆண்:

உள்ளத்தில் ஆசைகள் சுமந்து நான்  

உன் பக்கம் மெதுவாக வந்தேன்

என் பக்கம் நீ கொஞ்சம் சாய்வாய்

என் தோளில்  இன்றாவது

 

கையயைத்தான்  நீ கொஞ்சம் நீட்டாய்

உன் கையயை பொன் வளைகளால்  நான் மூட

உன் பாதத்தை நீ கொஞ்சம் காட்டாய்

வெள்ளி க்கோலுசினை  நான் இதமாக மாட்ட

 

மை  கொஞ்சம்,       பொய் கொஞ்சம்

மை  கொஞ்சம் பொய் கொஞ்சம்

கண்ணுக்குள் நான் இங்கு காணும்

மங்கைக்குள் மாறாத ஒரு வகை நாணம்.

 

மாலைதான்  மெதுவாக நீங்க

செங்கதிரோன் அதில் மாய்ந்துபோக

மாடத்தில் ஒளி எங்கும் பரவ

முல்லைப்பூ மணம் அங்கு வீச

 

வந்தாளே   இந்நேரம்

வந்தாளே  இந்நேரம்

வந்தாட  என் கைகளில் பெண்மான் இவளும்

என் உயிரோடணைத்து நான் உறவாட

 

பெண் :

நேற்றெல்லாம் உறங்காமல் பாயில்

படுத்திருந்தேன் இந்நேரம் நானும்

பக்கத்தில்  மரக்கிளையில் ஜோடி

பறவைகள்  விளையாட்டை கண்டேன்

 

நாணத்தால்,     மோகத்தால்

நாணத்தால் மோகத்தால்

என்னையே நான் மறக்க அந்நேரம்

என் ஆடை விலகியதைக்கூட பாராமல்

 

உள்ளத்தில் ஆசைகள் சுமந்து நான்  

உன் பக்கம் மெதுவாக வந்தேன்

என் பக்கம் நீ கொஞ்சம் சாய்வாய்

என் தோளில்  இன்றாவது

 

ஆண் :

ஆடையுடன்  உன் மேனி தழுவிட

ஆனந்தம்  உண்டானதே

ஆனாலும் அவைகள் என் ஆசைக்கு

இடையூறாய் தெரிகின்றதே

தேன் ஊறும் உன் இருவிழிகளும்

மோகத்தை உருவாக்குதே

 

மஞ்சத்தில்,       மலர் மஞ்சத்தில்

மஞ்சத்தில் மலர் மஞ்சத்தில்

தித்திக்கும் இரவுகளை மெய்  தொட்டே

உன்னோடு நான் உறங்க

 

மங்கைக்குள்  ஆனந்த மயக்கமது

என்றைக்கும் நிலையாக வேண்டும்

சந்தத்தில்  மாறாத நடையுடன்

அவள் என்றைக்கும்  நடமாட வேண்டும்

கள்ளூறும்  மை விழிக்கோலமுடன்  அவள்

என்றைக்கும் எனை பார்க்க வேண்டும்

 

சிந்தித்தேன்,       ஒரு நொடி நான்

சிந்தித்தேன் ஒருநொடி நான்

 

தேன்  சிந்தும் அவள் உதடில்

முத்தங்கள் நான் சிந்த

 

 

சுந்தரேச்வரன்

 

By Sundareswaran  Date: 10th Dec 2016.

 

Courtesy:  Lyric: “Thumbi vaa thumbakkudathin thunjathaai Oonjaalidaam”

Lyricist: O N V Kurup   Music: Ilayaraajaa Film: OLANGAL

 

Please link with https://www.youtube.com/watch?v=xAl7_PiZV9I

 

Lyric: “ Thamizh Sangathil Paadaatha Kavithai”

Music: Ilayraaja  Film: AutoRaaja  Tamil

 

Please link with https://www.youtube.com/watch?v=eEQa7c4UAx4

 

Thanks for the inspiration and allowing me to take few words from the Tamil version.

Read the Hindi version ‘Gum sum gum, gum sum gum kyun thum’ and my English translation ‘Lone, lone lone’ for it in line with Malayalam song.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s