யோசிக்கின்றேன்

யோசிக்கின்றேன்  நான் இந்நேரம்

நமக்குள்,        காதல் தேவையா

 

முதன் முதலாய் பார்த்துக்கொண்டோம்

முன்னே பின்னே தெரியாதவர் நாம்

முழுமையாக தெரியும் முன்பே

முதல் பார்வைக்காதல் தேவை தானா?

உன்னை என்றும் கனவில் சுமக்க

உன்னை என்றும் நினைவில் புதைக்க

தேவையா,            என் மனதுக்குள் நானும்

போதை ஏற்றிட..

 

இன்று நாம் இங்கு ஒன்றாய் பார்த்தோம்

தோழமையை பகிர்ந்துகொண்டோம்  

எங்கோ என்றோ நிச்சயம் ஒரு நாள்

நீயும்   நானும்   ஒன்று சேர்வோம்

 

யோசிக்கின்றேன்  நான் இந்நேரம்

நமக்குள்,        காதல் தேவையா

 

 அழகாய் விரிந்த மலர்தான் நீயும்

எனது பாட்டில் சேர்த்த வரிதான் நீயும்

உன் அழகு வாய்ந்த முகத்தில் கண்டேன்

முழு நிலவின்   ஒளியை நானும்.

 

கண்டதும் காதல் என்றெல்லாம்  கவிதையில்  சேர்த்தால் அழகெழுமே

கண்டதும் போதை வந்துவிட்டால்  கதையும்  இங்கு   மாறிடுமே 

 

எத்தனை நான் புகழ்ந்தாலும்

எப்படித்தான் புகழ்ந்தாலும்

ஒரு தடவை பார்த்தால்  மீண்டும்

பார்க்க   தூண்டாதே.

 

மீண்டும்

யோசிக்கின்றேன்  நான் இந்நேரம்

நமக்குள்,        காதல் தேவையா?  

 

உன்னைத்தவிர யாரும் இல்லை

இத்தனையும் இனிப்பவளாக

இருந்தாலும்  என்ன இங்கு

முதல் பார்வைக்காதல் தேவை தானா?

 

.பருவத்தில் மாற்றங்கள் தென்படலாம்       பல சுவை அதிலும் இருந்திடலாம்

வான்வெளியில் கூட பறந்திடலாம்       நம் மனதிலும் மாற்றங்கள் தென்படலாம்

 

எங்கும் எதிலும் இணைப்புகள் உண்டு

தொடர்கதையாய் வருவதுமுண்டு  

எங்கோ என்றோ நிச்சயம் ஒரு நாள்

நீயும் நானும்  ஒன்று சேர்வோம்

 

யோசிக்கின்றேன்  நான் இந்நேரம்

நமக்குள்,        காதல் தேவையா?  

 

உன்னை மீண்டும்  காணும்பொழுது

என் இதையவும் தான் சொல்லிவிடுமோ

உன்னை என்னில் வைத்துக்கொள்வாய்

என்றும் அவளை உன் கண்களில் என்று.

 

கண்ணை   மூடி திறப்பதற்குள்    கனவும் தான் கலைந்திடுமோ

காதல் கூட்டில் வாழ்ந்துகொண்டு   காலத்தையே   மறந்திடுமோ   

 

என்று இந்த அலைகள் ஓயும்

என்று இந்த அமைதியற்ற  நிலைதான் மாறும்

யோசிக்கின்றேன்  நான் இந்நேரம்

நமக்குள்,        காதல் தேவையா

தேவையா,     என் மனதுக்குள் நானும்

போதை ஏற்றிட.

 

சுந்தரேச்வரன்  Date:  3rd Dec 2016.

 

Courtesy:  Lyric: ‘Muthan muthaalil paarthEn kaathal vanthathE”  Film: Aahaa

Singer: Hariharan Please link with https://www.youtube.com/watch?v=UTditpXJjQs

 

Lyric:  “Sochenge thmhe Pyaar,  Karein ke nahin”  Film:  Deewaana

Singer: Kumar Saanu

Very nice Choreography. Rishi Da your steps are wonderful.

Please link with https://www.youtube.com/watch?v=jI3gEdnUnbk

 

By mixing these two, I felt why not we think about “love at first sight” with a contrast concept in a new way. Is it absolutely necessary to succumb to it or can we not think otherwise? The love at first sight is there in our family circle as well.

The result is the above song

“YOsikkindrEn naanum inneram  NamakkuL kaathal thEvaiyaa”

 

shall we add few more lines like this to the original Tamil Song?

வானுக்குத்தான்  எல்லை உண்டோ என்று

நான் தேடினேன்  அதை இத்தனை நாளும்

நம் காதலுக்கு இங்கே எல்லைகள் இல்லை

நாம் காணுவோம் அதில் இன்பம் எந்நாளும்

                   

இரு உடல் ஓர் உயிர் ஆகிடுவோம்

இணை பிரியாமல் இருந்திடுவோம்

உணர்வினை ஒன்றாய் பகிர்ந்துகொள்வோம்

உறவுகள் ஆயிரம் வளர்த்திடுவோம்

 

என் வாழ்வில் வந்த நீ ஓர்

ஒளி தீபமே ஒளி தீபமே

 

முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே

 

நித்தம்    நித்தம்     எல்லாம் புதிதாக

உன் பெயர் வருகின்ற கவிதை புனைவேன்

என்றும் என்றும்    உனை நினைப்பதற்க்காக

விண்ணில்க்கூட  நானோர் மாளிகை அமைப்பேன்

 

கண்ணுக்குள் உன்னை வைத்து நானிருப்பேன்

எனக்குள் இருக்கின்ற உயிர் கொடுப்பேன்

ஆயிரம் ஜென்மம் தொடரும்  வரம் கேட்ப்பேன்

மீண்டும் மீண்டும் தொடர நான் எதிர்பார்ப்பேன்

 

 நீயும் நானும்  சேர்ந்து இங்கே

உயிர் வாழுவோம் உயிர் வாழுவோம்

Sundareswaran

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s