அந்தி வானில்மேகம் பரவ

A boat man sings for his lover:  This can be set to raag Aarabhi  

 

அந்தி  வானில் மேகம் பரவ

சந்தணம் போல் மண் மணம் வீச

சந்தங்களில் பாடிக்கொண்டு

மழை துளியாய் மண்ணில் விழுதோ

 

என்னவளே நீயும் இங்கே

கூட்டை விட்டேன் வெளியில் வந்தாய்

விண்ணில் பறக்க ஆசை கொண்டா

புது மழையில் நனைய ஆவல் கொண்டா

 

ஒரு வார்த்தை சொல்வாய் நீயும்

என் மனதில் தங்கும் ஏக்கம் தீர்க்க

ஒரு பார்வை பாரு நீயும்

என் மனதின் தாகம் கொஞ்சம் தணிய

 

என்னை கவர்ந்த மேகங்களெல்லாம்

உன்னை கவர துடிக்கின்றனவோ

மண்ணை நனைக்க மழையாய் பொழிந்து

உன்னை தழுவ ஆசைப்படுதோ

 

வானில் தவழும் மேகத்தை எல்லாம்

காற்று வந்து விலக்குவதை  பார்

காற்றுவாக்கில் உன்னிடவும் வந்து

உன் ஆடைகளை விலக்காமல் பார்

 

பாய்மர படகினில்  நானும்

பாதி தூரம் வந்துவிட்டேன்

காற்றலைகளில்  நான் விடும் தூது

காதில் உனக்கு கேட்க்கின்றனவோ ?

 

சுந்தரேச்வரன் Date: 25th Nov 2016.

 

If not atuned to the Raag Aarabhi, think of the old Tamil song “Erikkarayinin mElE PORavaLe PeN mayilE ” 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s