என்றோ எங்கோ

என்றோ எங்கோ யாரோ ஒருவள்

எனக்காகவேதான் பிறந்திருப்பாள்

எனக்காகவே அவள்  வாழ்ந்திடுவாள்

என்னையே மனதில் நினைத்திருப்பாள் .

 

எத்தனை காலம் தான் அலைவேன் நான்

எத்தனைகாலம்தான் தனிமையில் வாழ்வேன்

என் கையில் வெறும் மதுக்கிண்ணம் ஏந்தி

எத்தனை நேரம்தான் காத்திருப்பேன்

 

எங்கிருந்தேனும் ஒருவள் வருவாள்

என் மதுக்கிண்ணத்தை நிரப்பிடுவாள்

என் போதை நிலையின் அளவை அறிந்தவள்

என் தாகத்தை முழுதாய் தீர்த்திடுவாள்

 

என் மனதை யாரும் அறியவில்லை

என் மனமிடிப்பினை யாரும் கேட்கவில்லை

என் பெயரை கேட்டதும் எல்லோரும் இங்கே

என்னை எதோ  நாடோடியென்றே நினைத்துவிட்டார்

 

என்னை எல்லோருமே புறக்கணித்தார்

என்னிடம் எல்லோரும் பேச மறுத்தார்

ஏனோ  எனக்கே தெரியவில்லை

என்னிடம் என்னதான் குறை கண்டார்

 

எவளோ ஒருவள் என்னைத்தேடி வருவாள்

என்னிடம் வந்து, என் பக்கம் அமர்வாள்

எதிரொலிபோல் இந்த இருளின் தனிமையில்

எனக்காய் கேட்க்கவே காதல் குரல் கொடுப்பாள்

 

எவள்தான் அவளென்று யார் அறிவார்

எவள்தானோ அந்த நம்பிக்கை க்குரியவள்

எவள்தான் என் மனதை அறிந்தவள்

எவள்தானோ எனக்காய் கண்ணீர் விடுபவள்

 

என்னைத்தேடி ஒருவள் நிச்சயம் வருவாள்

எனக்கென்றே ஒருவள் இங்கு வருவாள்

என்னைப்புரிந்து அவளே வருவாள்

என்னை என்றும் அவள் தன் மனதோடு சேர்ப்பாள்.

 

சுந்தரேச்வரன்                  By Sundareswaran Date: 22nd Nov 2016.

 Courtesy: Lyric: “Kabhi na kabhi  kahin na kahin”

Lyricist: Raajinder Kishen  Music:  Madan Mohanji          Film:  Sharaabi  Singer:  Rafi Saab

Thanks for the inspiration to translate in Tamil with few changes to suit Tamil lines.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s