புது மழையில் குளிரலையில்

புது மழையில் குளிரலையில் ஊறுவதென்ன

இளவெயிலின்  ஒளிக்கதிரில்  உதிருவதென்ன

கன்னி மண்ணுக்கென்ன தாகம்

ஊஞ்சலாடும் நெஞ்சுக்கும் தான் 

அதிர்வூறும்  நரம்புகள் எதிலும்

மண்ணின் மணமே  தழுவி செல்லுதோ

 

புது மழையில் குளிரலையில் ஊறுவதென்ன

இளவெயிலின்  ஒளிக்கதிரில்  உதிருவதென்ன

 

காலை மாலை தொடர்வதைப்போல்

நேரம் நதி ஒழுகுவதைப்போல்

கரையை தழுவும் நுரை அலைகள் போல்

நித்தம் இதே ஸ்வர தாளம்

 

நிறம் மங்கி தேய்ந்த வாழ்வில்

தனிமை  மௌனம் தங்கும் வழியில்

தேவை அற்ற பார்வைபோல

விழிகள் திறந்து நானும்  நின்றேன்

 

பூஞ்சிறகில் காதலை  ஏந்தி

பூங்குயிலும் பக்கம் வருமோ

புது மழையில் நனைவதற்க்காக

புன்னகையுடன் தழுவிட வருமோ

 

நினைவுகளாய் மறைந்திடும் நிலையில்

சிலநேரம்,  

திரைக்கு பின்னால் தலை தூக்கும்

நள்ளிரவிலும் பகல் வேளையும்

தொடர் கதைபோல் அரங்கேறும்

 

சபலம் ஏனோ  உன் மனதில்

நெஞ்சம் வந்தென்  காதில் மொழிய

புதிதாய் விரிந்த மொட்டுகளை

அணிந்துகொள்ள ஆசை என்றேன்.

 

புது மழையில் குளிரலையில் ஊறுவதென்ன

இளவெயிலின்  ஒளிக்கதிரில்  உதிருவதென்ன

கன்னி மண்ணுக்கென்ன தாகம்

ஊஞ்சலாடும் நெஞ்சுக்கும் தான் 

அதிர்வூறும்  நரம்புகள் எதிலும்

மண்ணின் மணமே  தழுவி செல்லுதோ

 

 

சுந்தரேச்வரன்             By Sundareswaran  Date: 27th Sep 2016.

Courtesy:  Lyric: ‘Puthu mazhayil kuLiralayil kuthiruvathenthO”

LyricisT: Rafeeque Ahamed       Film: Ithra Maathram  Singer:  K S Chithra Madam

Raag: HAMSANAADAM  Please link with https://www.youtube.com/watch?v=aF2BhbCftC4

 

Kudos to Rafeeque Ahamed. Thanks for the inspiration to translate in Tamil with some changes in words.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s