வாய் மூடிய பறவைபோல்

வாய் மூடிய பறவைபோல்

வாழ்கின்றேன் இந்நாளில்

விழி மூடிய வண்ணம் நான்

வாழ்கின்றேன்  கனவுகளில்

 

என் மனச்சுமைகளை  நான்

வைக்க இடம் தேடுகின்றேன்

சுமைதாங்கி இல்லாததனால்

நான் அதை சுமக்கின்றேன்

 

காதல் எனும் கவிதை வரிகள்

எழுத நானும் துடிக்கின்றேன்

காகிதங்கள் இல்லாததனால்

என் மனதிலையே எழுதுகின்றேன்

 

உறவு எனும் தொடர்கதைகள்

என்னை வந்து  சூழ்கிறதே

முன்னுரை  நான் எழுதிவிட்டேன்

அதர்க்கோர் முடிவுரையை தேடுகின்றேன்

 

இரவில்  சூழ்ந்த மழை மேகங்கள்

மழையாய் பொழிந்த போதிலும்

இருளில் மறைந்த என் வாழ்வின் ஸ்வரங்கள்  மீண்டும் 

ஒளிவீசும் ஸ்ருதியாய் பொழியவில்லையே

 

என் கண்களும்தான் திறவாதா

கனவுகளும்  நிஜமாய் வருமா

காலம்தான் கடந்திடுமா

என் வாழ்வும் அதில் புதைந்திடுமா

 

 

ஏரியோரம் சிறு படகில்

துழைந்து செல்ல பார்க்கின்றேன்

ஆழ்க்கடலில் போய்  சேர்ந்தால்

நான் என்ன ஆகுவேனோ

 

கொந்தளிக்கும் கடலலையில்

சிறு மலர்போல் நான் ஒழுகுவேனா

நீந்த அஞ்சும் நானதில்

தத்தளித்து மிதப்பேனா

 

ஆழ்க்கடலின் ஆழங்களில்த்தான்

முழுகி  நானும்  மறைவேனா

அங்கோர் விசைப்படகில்  யாரேனும்

என்னை  மீட்க்க வருவாரா

 

By  Sundareswaran  Date: 25th Aug 2016.

 

Inspiration from the song “MaRanthum EnO”

A translation to “ MaRannittum  enthinO’  by  Girish Puthanchery  

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s