அழகு முகம் பூபோல் விரிய

அழகு முகம்  பூபோல்  விரிய

ஆசைகளின் தேன்  வடிய

இனிமையாம்  பாடல் கேட்க்க

மனதும் அதில் ராகம் மீட்ட.

 

வானமெனும்  மஞ்சத்தில்

தழுவி வரும் மேகங்கள்

வெண்ணிலாவுடன் சேர்ந்து

மண்ணில் இறங்கி வந்ததோ

 

கதிரவன் ஒளி நீ தானோ

மாலை வெயில்  நீ தானோ

கேட்க்கின்ற குயில் பேச்சும் உனதோ

காற்றில் வரும் ஓசையும் உனதோ

நாம் ஒரே வீணையாய்

நாம் ஒரே நாதமாய்

இரு இதையம் ஒன்றாய் மீட்டும்

நிலை இங்கு உருவானதோ

 

தேன் மழை இங்கு பொழிவதுபோல்

விழியில் இமைகள் எழுதும்போல்

மனதைக்கவரும் இனிய மொழியில்

பாடுவதிங்கு யாரோ

 

மாணிக்க கண் விழியால்

போதை தரும் பார்வையால்

உதடில் ஊறும்  மதுக் கிண்ணவுமேந்தி  

ஓர் புது மலராய் அருகில் வந்தாய்

நாம் ஒரே ராகமாய்

நாம் ஒரே கீதமாய்

இரு இதையம்  ஒன்றாய் இணையும்

நிலை இங்கு உருவானதோ

 

ஓர் காதல் காவியம் அமைவதுபோல்

காமன் கணைகள் பாய்வதுபோல்

பனி மழையும் குளிர் காற்றும்

அதில் ஒன்றாய் இணைவதுபோல்

நிலை இங்கு உருவாக்கிய  

நீதான் யாரோ

 

சுந்தரேச்வரன் Date: 2nd Aug 2016.        By Sundareswaran  Date: 2nd Aug 2016.

 

Courtesy: Inspiration from the lines ‘Madhumathi poovirinjuvO’ written by O N V Kurup for the film Geethaanjali (Malayalam) 

Thanks for the inspiration to get lines in Tamil

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s