நெஞ்சம் கேட்டது, மெல்லன

நெஞ்சம் கேட்டது,      மெல்லன

என்னதான் நடந்ததென்று

 

ஏன்  இந்த வானும் மண்ணும்

ஏன்  இன்று புதிதாய் காண்பதென்று

பாயும் தென்றலிடம் கேட்டேன் நான்,   மெல்லன

என்னதான் நடந்ததென்று

பக்கம் வந்ததும் தென்றல் என்

காதில் சொன்னது,     காதலென்று,     மெல்லன

 

பட்டாம்பூச்சிகள்  ஒன்றோடொன்று

பேசுவதையும் கேட்டேன்  நான்

பூ மொட்டொன்று அரும்பாய் இருந்ததாம்

வண்டொன்று வந்து ஒருநாள் அதனை

வட்டமிட்டு பறந்ததாம்

மெல்ல மெல்லதன் அருகில் சென்று

தன் மெல்லிய கைகளால் தொட்டதாம்

தொட்டதும் மெய் சிலிர்க்க, தன் இதள்களை

அழகாய் விரித்து நின்றதாம்.

 

மொட்டும் கேட்டதாம்,   என்னென்று,   மெல்லன

மலரும் சிரித்ததாம்,       மௌனமாய்,  மெல்லன

நாணல் மலர, கொடியும் வளைய,  என்

காதில் சொன்னது,     காதல் என்று,      மெல்லன.

 

மேகங்கள் ஒன்றோடு ஒன்று

சொல்லும் கதையையும் கேட்டேன் நான்

மலைச்செருவில்,  இள நதியும் ஒன்று

கடலை நோக்கி சென்றதாம்

செல்லும்போது  வளைந்து நெளிந்து

ஆடி செல்லயில், தன்னையே அது மறந்ததாம்

மறந்த பொழுதில் தன்னை அறியா

கடலுக்குள் அது  மறைந்ததாம் 

காதல் செய்யும் மாயாஜாலம்

அதற்க்கு அப்போது புரிந்ததாம்.

 

மேகம் விட்டு  வெளியே வந்த

வெண்ணிலாவும் புன்னகைத்தாள் மெல்லன

நானும்,   என்ன நடந்தது என்று  கேட்க்க  

நாணல் கொண்டு,

சொன்னாள்  அவளும்,  காதலென்று,     மெல்லன

 

 

சுந்தரேஸ்வரன்

By Sundareswaran  Date: 11th July 2016.

 

Courtesy:  Lyric: “Dil ne kaha chupke se, ye kya hua chupke se”

Singer: Kavitha Krishnamoorthy   Film: 1942 A Love Story

Very nice song and sung also nicely. Set to Raag DESH with a tinge of Megh Malhar.

 

Thanks for the inspiration to write in Tamil with few changes.

 

Please link with https://www.youtube.com/watch?v=3NzK5fqZeY8

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s