தாய்மடி என்னென்று

 

தாய்மடி என்னென்று அறியும் முன்னே

நான் வேறெங்கோ புழுதியில் எறியப்பட்டேன்

வாய் பேச வார்த்தைகள் வராததால்

நான் வாய்விட்டு கதறும் நிலையுற்றேன்

 

நினைவுகள் எதிலும் உன் உருவத்தின்

மாய்ந்த நிழல் என்   வழி மறைக்க

இருளிலும் அந்த நிழல்  பின் தொடர   என்னை

தூங்க விடாமல் தடுக்கின்றதே

 

இந்த அலை மாய்க்கும் கால் சுவடுகளில்

உன் பாதம் தேடுகிறேன் நான் இன்றும்

 

உன் மடி சுரந்ததோர் பால் அருந்த  ஏனோ

எனக்கந்த பாக்கியம் கிடைக்கவில்லை

உன் மடியில்  அமர்ந்து உன் தாலாட்டை கேட்க்கவும்

எனக்கந்த விதி ஏனோ அமையவில்லை

 

இந்த பாலைவனம் முழுதும் அயராமல்

உன் பாதம் தேடுகிறேன் நான் இன்றும்.

 

நிம்மதியாய் தூங்க நினைக்கின்றேன்

அது நிரந்தர மாகவும் துடிக்கிறேன்

என் கனவிலேனும் என்னை காண வருவாயா அம்மா

உன் தேனூறும் தாலாட்டை என் காதில் மொழிவாயா  

 

 

சுந்தரேச்வரன்

 

By Sundareswaran  Date: 2nd July 2016

Inspiration from the Malayalam song “Amma mazhakkaaRinu  kan NiRanju” written by Girish Puthanchery for the film MAADAMBI

Sir, these are really touching passages.

My imagination ran at a tangent. An infant, thrown out in the piles of garbage, after growing up, is searching for his mother on the shores and everywhere.

Thanks for the inspiration and I have culled out the tune.   Can be set to Raag HindOlam.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s