எங்கு செல்கின்றோம்?

சொத்து மனை நிலம் தேவையா?  எங்களிடம் வாருங்கள்!

ஒன்பது கிரிஹங்களிலும்  நாங்கள் உங்களுக்கு நிலங்கள் தண்ணி வசதியுடன் அள்ளிக்கொடுப்போம். வேணுமென்றால் சூரிய  சந்திர மண்டலத்திலும்! ஏரி ஓரத்தில் மனைகள், என்னத்திற்கு  ஏரிமேலையெ வீடு  அதும் இல்லையேல்  வீதியோரத்தில் வீடு வீதி மேலையே வீடு இப்படிப்போகுத்து.

எல்லாமே பக்கத்தில்த்தான்அங்கு எல்லா வசதியுடனும் மனைகள், வில்லாக்கள், கட்டித்தரப்படும். குறைந்த விலையில். உங்கள் குழந்தைகள் வசதியுடன் விளையாட பூங்காக்கள்,   நன்கு படிக்க பள்ளிக்கூடங்கள்  எல்லாம் எல்லாம். காலத்தால் அழிந்துபோன விலங்குகளையும் தாவரங்களையும் உயிர்பெற்றெழுந்து நடமாடும் காடுகளையும் உங்கள் குழந்தைககுக்கு நாங்கள்   கட்டிக்கொடுப்போம்.

எழுபதிலயே மும்பையில்  கடலைக்கூட பாக் பே ரிக்க்ளமேஷன்என்று சீர்திருத்தல் செய்தார்கள்.

இன்று குகைக்குள் புகுந்து ரெயில் வண்டிகள் செல்லுகிறது . அதைபோல் குகைக்குள்ளிலும் வீடுகள் கட்டப்படும் என்ற செய்தி கண்டிப்பாக வரும். அன்றிருந்த  குகை மனிதர்கள் மீண்டும் நாம் மறுமலர்ச்சி மனிதர்கள் என்ற ஓர் புதிய பெயரில் அறிமுக ப்படுத்திக்கொள்வது மிகவும் நன்று. இது குழந்தைகள் பள்ளிக்கூடங்களில் விளையாடும் மாறுவேட போட்டியல்ல இது காலப்போக்கில் பல துறைகளிலும் பலவித செயல்பாடுகளுக்கும் உதவும்.

தகவல் தொழில் நுட்பம்  ஒன்றிருந்தால் போதும். இப்போதைக்கு கோடிகள் கணக்கு பணவசதி இருந்தால்ப்போதும். காலப்போக்கில் அதுக்கும்  விலை இல்லாமல் போய்விடும். இருந்து உண்ணுங்கள் என்ற காலம் மறைந்து இன்று நடந்து உண்ணுங்கள், ஓடி உண்ணுங்கள் ,பறந்து உண்ணுங்கள், வாயில் கவ்விக்கொள்ளுங்கள்  கணினியில் காசட்டையை சொருகி இழுத்து வாசலில் கொண்டுவரும் அனைத்துப்பொருள்களையும் உண்ணுங்கள். பிச்சாவை கடித்து இழுங்கள் கூடவே கொக்கா கோலாவை குடியுங்கள். அரிசி பருப்பு என்று இனிமேல் நீங்கள் வயல்க்காடுகள் தேடிப்போகவேண்டிய தேவையே இல்லை . கணினி யையும்   மின்னணுவையும் அதன்  கருவிகளையும் உணவாக தின்பதற்கு  சீனர்களும்  ஜப்பான் காரர்களும்  உங்களுக்கு கற்றுக்கொடுப்பார்கள். அதையும் உண்ணுவோம். வெளினாட்டு ஜம்பத்தை ஏன்  குறைத்துக்கொள்ள வேண்டும்  அவர்கள் நாட்டில்  விதைக்கும் பொருள்களை அவர்கள் உங்களைவைத்து திங்கவைப்பார்கள். இதுபோதாதா வாழக்கையில்.

வீதியோரங்களில் தட்டுக்கடைகள் நிறைந்துவிட்டன. அங்கும் கூட்டமாக செல்லலாம். இனிமேல் எறிந்துகொடுப்பதைக்கூட வாயில் கவ்விக்கொண்டு காலத்தை கழிக்க வேண்டிய நிலைமை வந்தாலும் வரலாம். ஏனென்றால் நேரத்தின் பற்றாக்குறை. ஒய்வெடுத்துக்கொள்வதற்க்கு கூட இடபற்றாக்குறை. கணினியில் பொத்தானை அழுத்தினால்  கடையிலிருந்து உணவு வரலாம். அந்த உணவின் பொருள்கள் மண்ணில் விளைந்தால்த்தான்.

மருத்துவம் வளர்ந்துவிட்டது. அதைபோல் வியாதிகளின் எண்ணிக்கையும், எல்லாம்  தாவரங்களின் பற்றாக்குறையாலும்  நடக்க இடமில்லாமலும்  உள்க்கொள்ள சுத்தமான காற்றின் பற்றாகுறையாலும் தான். நாமே அதை நாசம் செய்து நாமே அதை சரிபடுத்த முயற்ச்சிக்கிறோம். ஆனால் தோற்றுவிட்டோம்

காலம் செல்ல செல்ல எல்லாவற்றுக்கும் பற்றாக்குறை கண்டிப்பாக ஏற்ப்படும். மனிதன் மனிதனையும், அதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் தின்பான். அவன் உடலை அவன் தின்னும் அளவிற்க்கு வந்துவிடும். இன்னும் பெரிய பெரிய போர்களை நாம் சந்திக்க வேண்டிய சூழ்நிலை கண்டிப்பாக ஏற்ப்படும்.

நமக்கிது மெல்ல மெல்ல தெரியவந்துள்ளது. நம் வரும்காலத்தினருக்கு இன்னும் தெள்ளத்தெளிவாக புரிந்துவிட்டதா என்றது  தெளிவாகவில்லை. அவர்கள் ஓர் மாயா உலகில் இன்னும் இருப்பதாக தோன்றுகிரது.  கை நிறைய காசிருந்தால் மட்டும் போதாது. வயலில் நெல் மற்றும் தான்னியங்கள் விளையணும். அதற்க்கு மண் தேவை. எல்லாமே கட்டிடமானால் பின்பு மண்ணை எங்கே தேடுவது?

கடவுள் நமக்கு இரவலாக தந்ததை  நாம் மாசுபடுத்திவிட்டோம். அவைகளை கிள்ளிவிட்டோம். அவை நம்மை அப்பப்பொழுது தாக்குகின்றன.

 

By Sundareswaran date: 6th June 2016

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s