உன்னை நினைத்ததும் கண்ணா

உன்னை நினைத்ததும்  கண்ணா

நான் உள்ளம் மகிழ்ந்தேன் கண்ணா

 

உன்னை நினைத்ததும்  கண்ணா

நான் உள்ளம் மகிழ்ந்தேன் கண்ணா

 

இளவெயில் மஞ்சளின்  நிறமது உன்னுடை

வானத்தின் வெளி நீல  நிறமது உன்னுடல்

கண்ணா கண்ணா

 

உன்னை நினைத்ததும்  கண்ணா

நான் உள்ளம் மகிழ்ந்தேன் கண்ணா

 

கனவில் நான் உனக்காக ஊஞ்சல் செய்தேன்

நீ ஆடிட நான்  அதில்  பூக்கள் விரித்தேன்

கனவில் நான் உனக்காக ஊஞ்சல் செய்தேன்

நீ ஆடிட நான்  அதில்  பூக்கள் விரித்தேன்

 

உன் குழலோசை கேட்க்குமென்று  நானும் நினைத்தேன்  

நீ வருவாய் என்று நான் கண் திறவாமல் இருந்தேன்

நீ வரவில்லை என்றதும்  கண்விழி துடைத்தேன்

 

பொன்னும் பொருளும் என்னிடம் இல்லை

அதனால்த்தான் என்னவோ

என் அருகில் வரவே தயங்குகிறாய்

அதுதான் உன் எண்ணமோ ?

 

பொன்னும் பொருளும் எல்லாம் உன்னில் நிறைந்து வழிந்திருக்க

உன் பொன் மனதில் மட்டும் கொஞ்சம் எனக்கும் இடம் தருவாய் கண்ணா

 

உன்னை நினைத்ததும்  கண்ணா

நான் உள்ளம் மகிழ்ந்தேன் கண்ணா

 

இளவெயில் மஞ்சளின்  நிறமது உன்னுடை

வானத்தின் வெளி நீல  நிறமது உன்னுடல்

கண்ணா கண்ணா

 

நினைவிலும் கனவிலும் நீ தான் எனக்கு

என் உயிர் உடல் ஆவி எல்லாம் உனது

நினைவிலும் கனவிலும் நீ தான் எனக்கு

என் உயிர் உடல் ஆவி எல்லாம் உனது    

     

உன்னிடம் வைத்த அன்புதான் எனக்கு

உயிர்மூச்சாய் என்னிடம் இன்றும் இருக்கு

 

உன்னிடம் வைத்த அன்பின் அளவு இன்னும் போதலையோ

என்னை, உன்னிடம் அழைத்திட

இன்னும் தாமதம் அதனால்த்தான் என்னவோ

 

உன்னிடம் வைத்த அன்பால் நானும் என்னை மறந்தேன் நான்

உன்னைத்தவிர வேறெவனுண்டு  என்னை அழைத்துசெல்ல

 

உன்னை நினைத்ததும்  கண்ணா

நான் உள்ளம் மகிழ்ந்தேன் கண்ணா

 

இளவெயில் மஞ்சளின்  நிறமது உன்னுடை

வானத்தின் வெளி நீல  நிறமது உன்னுடல்

கண்ணா கண்ணா

  

மேகத்தின் கரு நிற வண்ணமோ உன் விழி

தாகத்தில்  தேடுது உன்னையே என் விழி

பிரபஞ்சமே அடங்கிடும் உன்னில் கண்ணா

நான் பார்ப்பதெல்லாம்  உன் சிறு ரூபமே கண்ணா

 

உன்னை நினைத்ததும்  கண்ணா

நான் உள்ளம் மகிழ்ந்தேன் கண்ணா

 

உன்னை நினைத்ததும்  கண்ணா

நான் உள்ளம் மகிழ்ந்தேன் கண்ணா

 

 

 

 

சுந்தரேச்வரன்

By Sundareswaran  Date: 1st June 2016

 

Inspiration from the songs ‘Thumpi penne vaa vaa’  From Film Dhruvam written by Shibu Chakravarthy and ‘Aazhkkadalil thathaLithu naan edutha muthu ondru’ from film Raagam thEdum Pallavi written by T Raajender.

     

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s