இன உணர்ச்சியை அடக்கு

 

மனிதனின் அறிவாற்றல் வளர வளரஅவன் எண்ணிக்கை  பூமியில் உயர உயர, அவனுக்கு தலைக்கனம் அதிகமாகத்துவங்கினபேராசையால் அவன் அவனையே அழிக்கத்துவங்கிவிட்டான். வனங்களை  அழிக்கிறான், வன விலங்குகளையும் தாவரங்களையும் அழிக்கிறான். மறுபடியும் அவனால்  அவைகளுக்கு உயிரோட்டம் கொடுக்க முடியாமல் போகிறது. அதனால் அவன் இனத்துக்கே நாசம் அவனே செய்துவிடுகிறான்இயற்க்கை சக்திகளை தன் வசப்படுத்த நினைக்கிறான். அது அவ்வப்போது  அவனுக்கே ஆட்டம் காட்டி அவனையே அழித்துவிடுகிறது. இருந்தும் அறிவில்லாத்தனமாக நடந்து கொள்கிறான். அவனுக்கு அது தெரிந்தும் செய்கிறான். தனக்குமட்டும்தான் இந்த உலகம் என்று மார்தட்டி ஒவ்வொருவனும் தன்னிச்சைக்கு  விரும்பியபடி நாட்டை அழிக்கிறான்.

மதவெறி, ஜாதிவெறி இனவெறி என்று பட்டியல் என்றும் முடியாதளவிற்கு பலவிதமான மாற்றுடை அணிந்து அரங்கில் வந்து விளையாடுகிறது. ஒருபக்கம் தடுப்பதாக காட்டி இன்னொருபக்கம் அதை சுடர்விட்டு எரிய செய்கிறார்கள் சிலர். அதில் அவர்களுக்கு ஏன்  இந்த இன்பமோ ? அது தன்னையே ஒருனாள் அழிக்கும் என்று அவர்கள் மறந்துவிடுகிறார்கள், பதவி பலம்தன் பண பலம் ,ஆள்பலம் இதை வைத்து தன்  திறமையை எடை போட்டு பார்க்கிறார்கள்.

 

ஒரு வெளிநாட்டு குடிமகனை* நம் நாட்டு குடிமகன் நமது தலைநகரத்தில் கொன்றுவிட்டான். என்ன பகையோ? இன வெறிதானா இதற்க்கு காரணம் நாம் கூக்குரல் இடுகிறோம்  ‘அதிதி தேவோ பவஎன்று. இது நம் நாட்டு வேதங்களிலிருந்து (தைத்ரேய உபநிஷத்திலிருந்து எடுக்கப்பட்ட வசனங்கள்) பிறந்த வார்த்தைகள். இது வாய்  அளவா இல்லை நாக்களவுக்குத்தான்  வளர்ந்திருக்கா ? ஏன்  நாம் இன்னும் கண்மூடித்தனமாக இருக்கிறோம்? ஏன்  நம் மனம் ப்ரபஞ்சமளவுக்கு இன்னும்  வளரவில்லை?

 

ஓர் ஆங்கில பத்திரத்தில் தலையங்கமாக ஓர் கட்டுரை வந்தது. படித்தேன். மனம் கலங்கிவிட்டேன். என்ன செய்வது  அவன் இவனுக்கு என்ன  உறவு ? தன்  உறவினருக்கு இப்படி நடந்தால் இவன் கொந்தளிக்க மாட்டானா? இப்பொழுது அந்த நாட்டார் இந்த நாட்டாரை தாக்குகிறார்கள். இப்பொழுது நாம் ஏன்  கொந்தளிக்கிறோம் ? இது சினிமா வில் வரும் வில்லன் சுபாவமாக தெரிகிறது. அவனுக்கு யாரை வேணுமானாலும் கொல்லலாம் , இம்சிக்கலாம் . யாரும் கேட்கக்கூடாது. அவன் தங்கை தம்பிக்கு சாவோ கெடுதலோ வந்தால் அவனுக்கு இரத்தக்கொதிப்பு தானாக வந்துவிடும் விஞ்சானி  நியூ ட்டன்  சொன்னது போல்  ஒவ்வொரு செயல்பாட்டுக்கும்  அதற்க்கு தகுந்த எதிர் செயல்பாடு கண்டிப்பாக இடம்பெற்றே ஆகவேண்டும். இதுதான் உலகநியதி.

இந்த மாதிரியான இனவெறித்தன்மை  சில வருடங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் நடந்தது.  இது பல இடங்களிலும் அறிந்தும் அறிமாயலும்  நடந்துகொண்டே இருக்கிறது.  இந்த செயல்பாடை துவக்கிவிட்டோம் ஏதோ ஒரு மூலையில் . அது படர்ந்துகொண்டே இருக்கத்தான் செய்யும். மனிதநேயம் என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லாமல் போய்விட்டது.  ஆனால் மனிதநேயமும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

இந்த வெறித்தன்மையை வேரொடு அழிக்க ஒரு தேவன் பிறப்பானா?

 

 

By Sundareswaran Date: 28th May 2016

 

Source:  Times of India dated 27th May Editorial “Quell Racism”.

*A citizen from Congo

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s