மேகத்தை பிளந்திங்கே

மேகத்தை பிளந்திங்கே  மழை பொழியுதோ

வெண் முத்துக்களாய் மண்ணில்  அது சிந்துதோ

பல ராகம்  பல தாளம் அதில் கேட்க்குதோ

விண்ணுக்கும்  மண்ணுக்கும் தொடர் சேர்க்குதோ

 

ஓர் அலங்கார கலைக்கூடம் நடமாடுதோ

அதிகாலை பொன்னொளிபோல் அது வீசுதோ

அசைந்தாடும் தேரென்று இதை கூறவோ

அதை கண்ட போதிங்கெ இசை வந்ததோ

  

என் விரல் படத்தான்  இந்த வீணை ஏங்குதோ

ஸ்வரச்த்தானம் தப்பாமல் அதை  மீட்டவோ

முத்தத்தின் சத்தமாய் நான் அதை  மாற்றவோ

பக்கத்தில் வந்துன்னோடு  பரிமாறவோ

 

உன் சலங்கையில் வருவது  ஜதி தாளங்களோ

சங்கத்தமிழ் உதிர்க்கும்  காவியங்களோ

உன் கண்களில் காண்பதென்ன நவரச பாவங்களோ

நான் எம்மொழியால்த்தான்  அதை மொழிபெயர்ப்பதோ

 

உருகும் என் மேனியில் உன்னை சேர்க்கவோ

உணர்ச்சிகளால்  அதை நான் மெருகேற்றவோ

உச்சிமுதல் பாதம்  வரை தாலாட்டவோ

உறங்காமல் நாம் இருவரும்  விழி சேரவோ

 

சுந்தரேச்வரன்    Date: 6th May 2916

While thinking about the heavy downpour in Chennai during December 2015, my mind started thinking about it again and again  in May when the heat was at its peak. I wished for a downpour again and it happened on 16th and continues till today, the 18th.

This is a dance song.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s