பட்டோ பட்டு

மதியம்  காப்பி அருந்தும் நேரம். வாசலில் ஒரே சத்தம். ஒரவன் தன் லூனா வண்டியில்  ஓர் காசெட்டை வைத்து  அதில் வரும் பேச்சுடன் தன் வண்டியை மெதுவாக ஒட்டி சென்றுகொண்டிருந்தான். என்னதான்  அதில் பேசறது என்று உற்றுக்கேட்டேன். பட்டோ       பட்டு, பட்டுக்கு நிகர் வேறொன்றில்லை கந்தல் பட்டுக்கும் கைநிறைய பொற் க்காசுகள்.”. அவன் காஞ்ச்சீபுரத்தில் இருந்து  வந்து பழைய பட்டுச்சேலைகளை  நல்ல விலை கொடுத்து  வாங்குவானாம்ஐனூறென்றும்  ஆயிரம் என்றும்  புது ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசுவானாம். அவன் தங்க ஜரிகை இருந்தாலும்  கல்லில் உரைத்து இது  செம்பு என்றே சொல்வான்எத்தனை சேலைகள் கொடுத்தாலும் அதன் விலை ஓரளவுக்குமேல்  ஏறாது. என்னவோ பாருங்க  என்ன அதிசயமோ தெரியவில்லை. நம்ம உண்டியல் மட்டும் நிரம்பாது  அவனுடையதுமட்டும்  நிறைந்து விடும். இவன்மட்டும் பரந்தாமனிடம் நடப்பு வைத்த்ருந்தால்  தினமும் நிறைய சேலை கிடைத்திருக்கும், ஆத்தங்கரை பக்கமிருந்து.

துணிக்கு புது பாத்திரம் கொடுப்பவன் கதையும் இப்படித்தான். எவ்வளவு மூட்டை துணி கொடுத்தாலும்  அவன் காட்டுவது  ஒரு ஸ்பூன் தான்.  

 

பக்கத்தில் வந்துகொண்டிருந்த ஓர் குடுகுடுப்பைக்காரர்  இப்படி பாடுவதை கேட்டேன்

பிட்டுக்கு  மண் சுமந்தான்

பரமன் மதுரையிலே

பழைய பட்டுக்கு  விலை பேசும்

இம்மனிதன் காஞ்ச்சியிலே

பட்டு  சிட்டென இருந்தாலும் 

பட்டென கரைந்தாலும், நம்மை

ஒட்டுமொத்தமாய்

மொட்டையடித்துவிட்டு

துட்டை நீ எண்ணும் முன்னே

சட்டென மறைந்துடுவான்    

 

மனதில்  ஓர்  கற்ப்பனை  தோன்றியதுமகாபாரதத்தில்  துச்சாதனன் பாஞ்ச்சாலியின் பட்டுப்புடவையை கழட்டும்போது (உருவும் பொழுதா?) இவன் ஒருவேளை அருகில்  நின்றிருந்தால்  என்ன நடந்திருக்கும் என்று.

கண்டிப்பாக ஓர் ஒப்பந்தம் நடந்திருக்கும் துச்சாதனனிடம்.  இது திரியோதனுக்கு தெரியாமல்.  பாதி பாதி என்று  அதாவது இன்றைய சொல்லில்  பிப்ட்டி பிப்ட்டி’ என்ற முறையில் விற்ப்பனை  நடந்திருக்கும். ஏன்னா புதுப்புடவையாச்சே  அதும் அசல் பட்டு. பாஞ்ச்சாலிக்கும்  ஓர் கொசுறு என்று கொஞ்சம் கொடுப்பான். அவள் இதை பரந்தாமனிடம் சொல்லாமலிருக்கதுச்சாதனனும்  இழுத்துக்கொண்டே இருப்பான். ஏனென்றால்  ஆயிரங்களின்  பொற் க்காசுகள் அல்லவா . அல்வா யாருக்குத்தான் கசக்கும்.  இவனும் அதை சுருட்டிக்கொண்டே இருப்பான். கிருட்டின பரமாத்மாவும்  பட்டம் விடும் கயிறைப்போல்  அதை  விட்டுக்கொண்டே  இருப்பார். அவருக்கு என்ன தானப்ப்ரபு . துரியோதனனும்  பாஞ்சாலிக்காக காத்துக்கிடப்பான். இப்படியிருந்தால்  மகாபாரதம் இங்கே இந்த கட்டத்திலேயே நின்றுவிடும். வேதவ்யாசனாலும்  இதற்க்கு ஒரு முடிவு காண முடியாத நிலைமை வந்துவிடும்  இந்த பிப்ட்டி பிப்ட்டி விவகாரம் அப்படியொரு மாபெரும்  விளையாட்டல்ல  யுத்தம்

 

இதிலிருந்து என்ன தெரியுது  ஏமாறுபவன் இருக்கும் வரையில்  ஏமாற்றுபவன் இருந்துகொண்டே இருப்பான். என்ன பாரதமடா பொல்லாத பாரதமடா.

 

 

By sundareswaran  Date:  5th May 2016.  Take this with humour and with no malice.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s