கருநிற குயிலே சொல்லு

கருநிற  குயிலே சொல்லு

கை ரேகை பார்ப்பாயா

பூத்துக்குலுங்கும் ஆசைகளெல்லாம்

என், வாழ்வில்  வந்து  மலர்ந்திடுமா

கருநிற குயிலே சொல்லு……..

 

காற்றே காற்றே  குள்ர்காற்றே

ஜோதிடம் நீயும் பார்ப்பாயா

உண்மைதான் சொல்வாயா

காட்டில் மலரும் பூ மொட்டுகளால் நீ

சோகி நிரத்தி பார்ப்பாயா

கருநிற குயிலே சொல்லு…..

 

கொண்டைத்தலை கொண்ட வண்டே நீ

வீணை மீட்ட நீ வரியா

பூவை சுற்றி  பறக்கையிலே

உன் மொழியில் பாடுவையா

தேன் சுவைத்து ரசிக்கையிலே

மயங்கி நீயும்  விழுவாயா

கருநிற குயிலே சொல்லு

 

அருவி அருவி தேனருவி

எங்கிருந்துதான் வருகிறாயோ

உயிர்காக்கும்  நீதான் யாரு   

வான் தேவன் அனுப்பிய தேவதையோ

இங்கும்  அங்கும் ஒழுகிச்சென்று

பயணம் முடிவது கடல்தன்னிலோ

கருநிற குயிலே சொல்லு

 

முகிலே முகிலே கார் முகிலே

விரைந்து நீயும் செல்வதெங்கோ ?

கொஞ்சமேனும் இரக்கம் கொண்டு

மழை முத்துகளை நீ பொழிவாயா

அதை கோர்த்து சேர்த்து மாலைகள் கட்ட

நீயும்  உதவமாட்டாயா….

கருநிற குயிலே சொல்லு….

 

குயிலே  கருநிற  குயிலே

கூடுகட்ட தெரியாதா

காக்கை கூட்டில்  முட்டை இட்டு

காலத்தைத்தான் கழிப்பாயா?

கருநிற குயிலே சொல்லு…..

 

சுந்தரேச்வரன் Date: 2nd May 2016

Very well suited voice to sing this lullaby will be that of M S RAJESHWARI.

Inspiration from a very old song in Malayalam “kaakkakkuyilE chollu kainOkkaan aRiyaamO”written by Sri P Bhaskaran Sir

    

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s