தங்கத்தின் வெண்ணிலவோ

தங்கத்தின் வெண்ணிலவோ  கும்குமத்தின் சென்னிறமோ

பார்க்க என்ன அழகடி  மீண்டும் பார்க்க தோணுதடி

என் முன்னே வந்து கண்ணெ நீயும் நின்றதும்

என் கண்ணே பட்டிடும்போல்  எண்ணம் என் நெஞ்சை  சுட்டதும்

என்னவென்று அந்நேரம் எனக்கொன்றும் தான்  இங்கு விளங்கலை

அதனால் என் கண்களையே நான் மூடிக்கொண்டேன் கொஞ்சம் அந்நேரம் .

 

தனது நாடு தனது பிரஜைகள்

என்று மட்டும் நினைக்கும் ராஜன் வாழ்க்கையும் வாழ்க்கையா

எனது குடும்பம் எனது மனைவி எனது குழந்தை

என்ற எண்ணம்  அவனுக்கும்தான் இல்லையா

இப்படித்தான் வாழ்ந்தால் நலமென

வாழ்க்கை விதிமுறை ஒன்று இருக்குதே

எப்படியும் வாழ்ந்திடலாம் என்று வாழ்ந்து      கெ ட்டவர் பலரடி .

 

உலகமெல்லாம் அழும்போது அந்த கண்ணீரை நாம் துடைக்கணும்

உலகமக்கள் சேர்ந்து வாழ நாமும் முயற்சசி  செய்யணும்

உலகமக்கள் தாவரம் விலங்கு அனைத்தும் இங்கே

சுகமாய் வாழ சொன்னதிங்கே யாரடி

அனைத்தும் உலகம் உயிர்பெற்றெழவே  வந்த வேத மந்திரம் தானடி

படிப்பதே பணத்துக்கென்று  வாழ்ந்து விடலாமா

படித்ததெல்லாம் நம் பகுத்தறிவை நாம் வளர்ப்பதற்க்குத்தான்.

 

கேட்டுக்கோ  கண்ணே நீயும் வாழ்க்கை என்பது சுக போகம் மட்டுமல்ல

வாழ்க்கை என்பது

இன்ப துன்பம் சேர்ந்து கலந்து சுமந்து வாழ்வதுதான்.

 

பசித்த வேளையில் உணவு அளித்தால்

விலங்குகூட நன்றி மறவாது

நன்றிகெட்ட மனிதனைவிட  (மகனிவிட) நாய்கள் மேலென்று

கவி அரசும் சொல்லிவைத்தார்  அவர்  பாட்டிலே

 

மறவாதே இதை நீ மறவாதே

ஓருபோதும் வாழ்வு இருக்கும் வரை

மறந்துவிட்டால் நீ வாழும்

வாழ்வுக்கு பயனில்லை

 

கேட்டுக்கோ கண்ணே நீயும் வாழ்க்கை  என்பது நம் கையில் தான்

அதை நாம் இனியதாக்குதல் புனிதமாக்குதல்  நம் திறனில்த்தான் .

 

சுந்தரேச்வரன்                                  By Sundareswran   Date: 28th April 2016

 

Inspiration from a Tamil Song Saathimalli poocharame thangathamizh paacharame which I changed as a father’s advice to his daughter on the wedding day.

Courtesy: Lyric: “ Saathimalli poocharame”       Film: Azhagan (Tamil)

 

*UlagamakkaL thaavaram vilangu anaithum’ உலகமக்கள் தாவரம் விலங்கு அனைத்தும்   means:

 

“LOkaa samasthaa SukhinO bavanthu”

 

The other versions are:

“SarvE janaan sukhinO bavanthu”

“SrEyO bhooyaath  sakala Janaanaam”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s