வானவில்லின் நீலமோ விழியில்

बरसे बदरिया सावन की।

सावन की मन भावन की॥ 

 “காற்றில் குயிலின் இசை ஒலிக்க 

கால்கள்  சதங்கை ஒலி  எழுப்ப

காதலன் என் அருகில் வந்தான்  

காதில் மெதுவாய்  இசை பொழிந்தான்.”

aa…aaa…aaa..aaa….aaaa

 

 

வானவில்லின் நீலமோ  விழியில்

வானவில்லின் சிவப்போ உதடில்

வானவில்லின் அழகுடன் விரிந்தாயோ

என் முன்னால் நீயும்

 

வான்தூவும்  மழையில் கொஞ்சம்

வாலிபம் இங்கு நனைவதனாலே

வானுக்கே பெருமை சேர்ந்திடுமோ

என் கண்ணே சொல்லு

 

மழைத்துளிகள் மார்பில் விழவே

மணி முத்து மாலையாய் மாற

மழைத்துளிகள் கைகளில் தழுவ

மணி ஓசை வளையாய் சேர

மழை நீரில் மேனி நனைய

அழகே நீ வெளியே வந்தாயோ

என் காதில் சொல்லு  

 

மழைத்துளிகள் நூல்போல் ஒழுக

மஞ்சள் நிற மேனியை நெய்ய

மழை உன் அழகை மேலும் கூட்ட

மழைதரும்  அந்த மெல்லிய தழுவல்  

மழைக்கும் கூட சுகம்  தருமோ

என் கண்ணெ சொல்லு   

 

 

மழை நனைந்த விரலை தொடவே

மழையில்  காற்றும் மெல்லன வீச   

மழை நனைந்த முடியை வகுட

மழை மூடின மேனியை தழுவ

மழையில் நனைந்து கனவுகள் காண

மழைமேகத்தேரில் வந்தாயோ

என் மன்னா நீயும்

 

வானவில்லை வரைந்தவன் நீயோ

வானவில்லை விரித்தவன் நீயோ

வானவில்லில் என்னை இணைத்து 

ஓவியம் தான் வரைய வந்தாயோ

என் கண்ணா சொல்லு.

 

 

சுந்தரேச்வரன்            Date: 3rd April 2016

 

Courtesy:  Lyric: “ Mazhavillin neelima kannil ‘

Lyricist: Sarath Vayalar   Musician composer” Alex Paul

Film: Hello

Dear Sarath Sir,

Thank you for the inspiration given to translate in Tamil with so many changes. You created a sensation by starting all the lines with ‘Mazha”.

 

Raaga: Brindaavan Saaranga

Please link with en.msidb.org/s.php?13826

Does this song has some connection with the famous Hindi song “Khajraa muhobbath waalaa  akhiyom mein aisaa daalaa’ sung by Ashaji and Shamshaad Begam for the film Kismath?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s