ஹா ஹா ஹா! விளம்பரம்

காலையில் பேப்பறை  திறந்தால்,  எதுக்கு திறக்கணம், முதல் தாளின் முன்னமே அமக்களப்படுத்தற செய்திகள். இப்பொழுது போட்டிபோட்டாப்போல் முதல் நான்கு தாள் வரைக்கும் அது நீண்டு விட்டது. வாசலில் மடித்தெறிந்த  பேப்பரை  தூக்கினாலே  சாஷ்ட்டாங்கமா காலில் விழறாப்பலே சின்னதும் பெரிதுமான விளம்பர காகிதங்கள், அட்டைகள். ஜாக்ரதை! கால் விரல் நேசுங்கிவிடும்! அதிர்ஷ்ட்டம் உங்கள் காலில் வந்து விழுகிறது. நழுவ விடாதீர்கள்“.  எதற்க்கு சொல்லறேன் ன்னா  பழைய பேப்பர்க்கடையிலே இதுக்கு விலையுண்டு என்கிறாங்க. வழ வழா பேப்பரை வைத்து  நழுவ விடாதே என்கிறான். திமிர் தானே.

தொலைபேசிகளின் ஆரவாரம். அதற்க்குள் என்னதெல்லாமோ திணிச்சு வைச்சிருக்கான். இன்னும்  காலப்போக்கில்  அதர்க்குள்ளயே குடித்தனம் நடத்தலாமோ?   ந்யூட்டனே  சந்தேகப்பட்டார்  அவருடைய அப்பாவுக்கு பூமியின் ஈர்ப்புத்தன்மை ஏன் தெரியவில்லை என்று!

ஒரு அம்மா துணியெல்லாம் துவைச்சு தரேன்னு சொல்லுறா. சவால் விடறாளா என்று தெரியவில்லை.

இன்னொரம்மா பணக்கார வீடெல்லாம் கட்டித்த்ரேன்னு சொல்லுறா. அதுவேற  வாசல்க்கதவை திரக்கறாப்பலே பேப்பரை பாதியாக்கிழிச்சு வேற காட்டறா. ஹனுமான் தன் மார்பை திறந்து ராமரை காட்டறபோல்.

கடனாக வேற வங்கியில் அள்ளி அள்ளி தருவாங்களாம்.

ஒருத்தன் காரெல்லாம் உங்களுடையது என்று சொல்லுறான். செலவில்லாமல்  ஓட்டும் காலம் வரட்டும். அப்போ பார்க்கலாம். எனக்கதுபோதும்.

ஒரு கடையிலே  ஒன்னெடுத்தால் ரெண்டு ப்ரீ மூணு ப்ரீ  தமாக்கா பண்றான். மங்காத்தா ஆடுவதைப்போல். பண்டிகை வந்தால் கூத்துதான்.

இன்னும் என்னன்னமோ செய்திகள் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். ஒருவேளை  பல கோடி ரூபாய் கூட பரிசாக கிடைக்கலாம். பிச்க்கொத்து பொட்டலத்தில் கூட எங்காவது நகத்தால் வருடினால் கிடைக்கும். பரிசு! ஃஇரண்ண்யனுக்கு  நரசிம்ஹம் தூணிலிருந்து வந்தார்ப்போல்! முற்சசி செய்து பாருங்கள் வீண்போகாது.

 

அன்றோருகாலம்! ஒரு வீட்டில் டீவீ  வந்தால் அக்கம் பக்கத்தார் வந்து  மொய்த்துக்கொண்ட காலம் பொய்  இன்றைக்கு  டி வீ வீட்டிலே வச்சா வெளியிலே நின்னு பார்க்க வேண்டிய நிலமை வந்தாச்சு. அத்தனைக்கு பெரிய, வளைந்த, நெளிந்த உருவத்தில்  3 டி  எபக்ட்டை  தொட்டுப்பார்க்கக்கூட வசப்படரா மாதிரி  ஆயிடுத்து. இவர்கள்  ஒருவேளை வானவில்லை கூட நிமர்த்துவார்களொ ,இதை வளைத்ததுபோல்? கடலுக்கடியில்  ஹய் ஸ்பீட் ரயில் விடறவனுக்கு  வானம் ஒருவேளை வசமாகிடுமோ?   முதலில் நாய் வாலை நிமர்த்திய பிறகு ஒரு முடிவுக்கு வரட்டும்.

 

ஆனால் தொடுவானம் ஏனோ இன்னமும் தொட முடியாத அளவுக்கு நிக்குது. கடவுள் ஒருனாள் கண்டிப்பாக அதற்கும் ஓர் தமாக்கா செய்வார்.  பெரிய போட்டியாக கூட அது திகழலாம். பொறுத்திருப்போம். வானத்திலிருந்து அசரீரிபோல்  விளம்பர செய்தி கேட்டாலும் கேட்க்கலாம். எத்தனை தற்மிகள்ஏழைகள் பணக்காரர்கள் காத்திருக்கிறார்கள்.

 

டி வீ யை திறந்தால் ஓரம்மா ஒரு சொட்டு தண்ணீரில் பாத்திரங்கள் பளிச்சுப்படுத்தரா

ஓரம்மா பையனுக்கு போஷாக்கு கொடுத்து அவன் மூளையில் வேதி இயல், இயற்ப்பியல் எல்லாவற்றையுமே  ஒரு நொடியில்  திணிக்கிறாள். பய்யன் தலைக்குமேல் என்னன்னமோ சுற்றுது.  கடவுளின் தலைக்குபின்னால் சுற்றும் ஒளிவட்டம்போல்.

ஓர் கிளாஸ் டீச்சர் அவன் வியர்வை செறிவை ஒரு கருவியால் அளந்து அவனுக்கு ப்ரீ யா சலவை செய்து கொடுக்கிறாள். என்ன விந்தையடா!

ஓரம்மா காஸ் சிலிண்டெர் ஆறுமாசம் நிக்கும் என்கிறாள். அப்பப்பா! என்ன விந்தை!

போராக்குரைக்கு இப்போதெல்லாம் பொருள்கள் ப்ரீயா வேறு  கிடைக்க ஆரம்பிச்சுடுத்து. போச்ச்சுடா போச்சு .கொஞ்ச நாள் ஒட்டி காயிலாங்கடையிலே பேரிச்சம் பழத்துக்கு விற்க வேண்டிய நிலைமைக்கு வந்துடுத்து..

ஒரு சீரியலில்  கதாநாயகி எத்தனை சொட்டு கண்ணீர் விட்டாள்  என்றொரு போட்டி கூட வரலாம். கொடிகள் கண்ணீர் துளிகளில் காத்திருக்குது. எண்ணுங்கள். எண்ணிக்கையும் எண்ணங்களும்  வீண்போகாது  நிச்சயம். கிடைக்காவிடில் யாரும் கண்ணீர் விடாதீர்கள். இது ஓர்  வீர விளையாட்டு.

 

பாருங்களேன் அடுத்து நடந்த வெள்ளப்பெருக்கெடுப்பில் தீவாலா ப்போன கார்கள் . பாவங்கள் அது துலைந்தவர்கள்  என்ன செய்ய முடியும்  தாங்கிக்கொள்ள வேண்டியதுதான். இயற்கையின் சோதனை. மனிதர்களின் தவறுகள். யாருக்குமே கார் வேண்டாம் என்றாகிவிட்ட நிலைமை.  புது கார் வாங்கறவனுக்கு உள்ளே பயம். இதே மறுஜென்மம் எடுத்து வருமோ என்று.  நடக்கலாம் சார்.  இது கலிகாலம்.

 

தண்ணியிலே வீடுகட்டி  அவஸ்த்தை பட்டவர்கள் இன்னும் திருந்தலை. ஏரிகளை எல்லாம் காப்பாற்றணும் என்ற  முறையீடுகள் ஒருபக்கம் தொடருது.

ஆனால்,

 

ஏரிமேலெ வீடு கட்டி கோடி கோடி சேர்த்துவிட்ட கோமான்கள் ஹல்லோ ஹல்லோ கமான் கமான்  என்று மறுபடியும் பாடத்தொடங்கி விட்டார்கள். குடிகாரன் பேச்சு விடிஞ்ச்சால் போச்சு ன்னு  அது தொடர்ந்துகொண்டே இருக்கு.

 

தடுக்கிறாங்க, மறுக்கிறாங்க, இடிக்கிறாங்க, கட்டுகிறாங்க.  நாலு விதமான  வேலைகள்  மும்முரமாக செய்யப்படுகிறது. கடவுளுக்கே  படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று வேலைதான். இங்கே பாருங்க, நாலு.

அதுதாண்டா கடவுள்

இதுதாண்டா மனிதன்.

 

தன் விருப்பத்தில் உலகை நடத்துபவன் கடவுள்.

விளம்பரத்தில் வயிற்றை  நிறைத்துக் கொள்பவன் மனிதன்.

 

சுந்தரேச்வரன்  Date: 13th March 2016

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s