தெளிவானம் வானவில்லின்

தெளிவானம்  வான்வில்லின்

நிறமணிந்த நேரம்

நிறமூட்டும்  கனவுகள்

என் மனதில் தெளிந்தபோல்

 

நதியோரம் தழுவும்

குளிர் நீரின் காற்றும்

என்னில்  குளிரேற்றி என்னுள்ளில்

ராகங்கள் இணைந்திசைக்கும்போல்

 

குளிரூட்டும்  மனதுக்குள்

நீ வாழ்ந்த காலம்

மனதுக்குள் பூக்காலம்

சிரித்தாடிய நேரம்

என் விழிகள் மூடும் இமை இரெண்டும்

துயிலெழும்பும் நேரம்

என் நெஞ்சுக்குள் காதல் வந்து

குடிகொண்ட காலம்

 

அழகே ……

 

என் அழகே  நீ அழகில்

உருவானதோர் சிர்ப்பம்போல்

மலராய், பொன் மலராய்

என் உயிரில் விரியும் பனிமலராய்

அருகில் வந்தாய்.

 

 

மலரே என்னை பாராமல்

நீ சென்று  மறைந்தால்

கனவில் நான் தீட்டிய

வண்ணங்களெல்லாம்

என் விழியை விட்டு

பொலிவிழந்து  மாய்கின்றபோல்

 

அன்போடு என் அருகில்

நீ அணையாதிருந்தால்

அழகாக நான் வரைந்த

கனவுகளெல்லாம்

என் மனதை விட்டு

இருளில் எங்கோ மறைகின்றபோல்

 

என் மனதுக்குள் ஆழத்தில் யாரும்

தெரியாமல் சேர்த்த

மெல்லிய தாளங்கள் ராகங்கள் ஒவ்வொன்றுமே

விதும்பும் என் நெஞ்சில்

தளர்ந்திடும் உடல் பொருள் ஆவி அனைத்திலும்

ஒவ்வொரு வர்ணமாய் 

காதல் கீதங்களாய் அவை

வந்து பாடும் நேரம்

 

உயிரே………..

 

என் உயிரே      என் உயிரில்  

ஓர் புது ஜீவன் உருவாய் எழுந்தபோல்

மழையாய், தேன் மழையாய்

என் உயிரில் அது புது மூச்சாய்

வந்து பொழிகின்றதே.

 

 

சுந்தரேச்வரன்   Date: 10th March 2016

 

Courtesy:  Lyric:  TheLimaanam mazhavillin

Lyricist:  Shabareesh Verma   Film:  PrEmam   

 

Beautiful lines by Sabareesh Verma.Kudos to you Sir.

The ending word is the starting words in the next line and there is a repetition of few words that make this song more beautiful.

Dear Sir, Thanks for the inspiration to translate in Tamil with some changes.

 

Please link with https://www.youtube.com/watch?v=wCk4uCRBHH8

From her dialogue in Tamil    ‘shirt nalla irukku’, I could make out it is a Tamil Malayalam love story. Has it any resemblance with Subramanyapuram? All beard wallahs playing different roles.

 

 

Dear shabreesh. You have touched the horizon.

 

Thoduvaanam inge  ellorkkum sontham

Thodakkoodum inbam silarkkE kaikkoodum

Thoda vENdumendra  nalleNNam     irunthaale pOthum

ThodarnthuLLa muyarchiyil  kai koduppaar kadavuLum.

 

TholainOkku paarvai irunthidavEndum

Thulaiyaamal athilum irunthidavEndum

ThuNaikkaaga manathil uRuthimozhi vEndum

ThuNivudan paNivudan seyalpadavEndum.

 

Lord Ganesa help me in my ways.

 

தொடுவானம் இங்கே எல்லோர்க்கும் சொந்தம்

தொடக்கூடும்  இன்பம்  சிலர்க்கே கை க்கூடும்

தொடவேண்டுமென்ற நல்லெண்ணம் இருந்தாலே போதும்

தொடர்ந்துள்ள முயற்ச்சியில் கை கொடுப்பார் கடவுளும்.

 

தொலை நோக்கு பார்வை  இருந்திடல் வேண்டும்

துலையாமல் அதிலும் இருந்திட வேண்டும்

துணைக்காக மனதில்  உறுதி மொழி வேண்டும்

துணிவுடன் பணிவுடன் செயல்பட வேண்டும்.

 

சுந்தரேச்வரன்      

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s