எனதிந்த முடிவடையா கதையும்

எனதிந்த முடிவடையா கதையும்

இன்று முடிவடைந்தபோல் எண்ணம் உருவானது

ஹோ ! நீ வந்தென்னை தொட்டதும்

நான் எதிலிருந்தேதோ ஆகிவிட்டேன்

 

என் புனித கனவுகளெல்லாம்

மெல்லென மெல்லென நீங்கின்றது

இடைவெளிகள் தென்படும் நேரம்  

இன்னும்  மிக மிக தூரம் அது செல்கின்றது

 

வாழ்க்கையில் ஓர் புது புன்னகை

புத்தாடை அணிந்தென்னை வர வேர்க்குது

காரணம் என்னென்ன்று நான் அறியேன்

வாழ்வுக்கு  ஏன்  இந்த பெருந்தன்மையோ ?

 

என் கனவுகள் ஒவ்வொன்றாய்  மலர்கின்றது

ஆனாலும் என் கண்களில் ஏன் இந்த நீரலைகள்?

 

உன்னுடல் நான் இன்று அணிந்துகொள்வேன்

அதில்  ஆடை அணிகலன் போட்டுக்கொள்வேன்

இன்றிரவில் என் மனம் நிறைந்திருக்க

அதை நான் விழாபோல் கொண்டாடுவேன்

உன்னை தொட்டால் வீசும்  கல்லுரி வாசம்

என்னுடம்பில்  நான் பூசிக்கொள்வேன்

என்னுடல் பொன்வண்ணம் போலிருக்க

சந்தணம் அதன்மேல் தேய்த்துக்கொள்வேன்

 

ஸ்வரங்களில்லா உலகில்  வாழ்ந்த நான்

இன்று உன் ஸ்வரம் மட்டும்  மீட்டுகிறேன்

உன் ஸ்வரம் மட்டும்  பாடும்  நானின்று

ஓர் புல்லாங்குழலாய் மாறிவிட்டேன்.

 

வாழ்க்கையில் ஓர் புது புன்னகை

புத்தாடை அணிந்தென்னை வர வேர்க்குது

காரணம் என்னென்ன்று நான் அறியேன்

வாழ்வுக்கு  ஏன்  இந்த பெருந்தன்மையோ ?

 

என் கனவுகள் ஒவ்வொன்றாய்  மலர்கின்றது

ஆனாலும் என் கண்களில் ஏன் இந்த நீரலைகள்?

 

என் வானத்தில் இருந்து மறைந்த

வெண்ணிலா தாரைகள்  எல்லாம்

உன் ஸ்வரம் கேட்டதும்  வந்ததின்று.

 

! ப்ரியே ! ப்ரியே

 

 

சுந்தரேச்வரன்

By Sundareswaran Date: 1st March 2016

 

Courtesy:  Lyric:  O! Saiyyaan  MEri   adhoori

Lyricist: Amitab Bhattacharya

Film: Agneepath (Hindi) நெருப்பின் பாதை     Singer:  Roop Kumar Rathod

Music: Ajay Atul

 

 

Please link with https://www.youtube.com/watch?v=-z5r6IGnK9s

 

 

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s